ஸ்டாலினுக்காக திருச்சிக்கு ஓடோடி வந்த நடிகர் பிரபு! புகைப்படக் கண்காட்சிக்கு நடிகர்கள் புரோமோஷன்!
திருச்சி: திருச்சியில் திமுக சார்பில் ஒரு வார காலம் நடத்தப்படும் ஸ்டாலின் புகைப்பட கண்காட்சியை நடிகர் பிரபு தொடங்கி வைத்தார்.
திருச்சியில் நடத்தப்படும் ஸ்டாலின் புகைப்படக் கண்காட்சியை யாரை வைத்து தொடங்கி வைக்கலாம் என ஆலோசனை நடைபெற்ற போது திருச்சி மண்ணின் மைந்தரும், நடிகருமான சிவகார்த்திகேயன் பெயரும் பரிசீலிக்கப்பட்டிருக்கிறது.

ஆனால் அமைச்சர் நேரு தான் நடிகர் பிரபுவை அழைத்து புகைப்படக் கண்காட்சியை தொடங்கி வைக்க விரும்பி அவரை அழைத்திருக்கிறார்.
இந்த விழாவில் பங்கேற்ற மறுப்பு ஏதும் சொல்லாத நடிகர் பிரபு, கண்காட்சியை தொடங்கி வைத்ததோடு ஒரு மணி நேரத்துக்கும் மேலாக நின்று ஆர அமர எல்லா படங்களையும் பார்த்த பின்னரே புறப்பட்டுச் சென்றிருக்கிறார்.
புகைப்படக் கண்காட்சி நடைபெறும் ஒரு வார காலமும் தினமும் சினிமா பிரபலங்களும், சின்னத்திரை நடிகர் நடிகைகளும் இந்தக் கண்காட்சிக்கு வருகை தரவுள்ளார்கள்.

அமைச்சர்களும், திமுக மாவட்டச் செயலாளர்களும் தாங்கள் நடத்தும் ஸ்டாலின் புகைப்படக் கண்காட்சியை புரோமோஷன் செய்ய நடிகர்களை கையில் எடுத்திருக்கிறார்கள்.
இதற்கு முன்னதாக சென்னையில் கமல்ஹாசனும், மதுரையில் நடிகர் வடிவேலுவும், கோவையில் நடிகர் சத்யராஜூம் , ஸ்டாலின் புகைப்படக் கண்காட்சியை தொடங்கி வைத்தது குறிப்பிடத்தக்கது.
திருச்சியில் அமைக்கப்பட்டிருக்கும் ஸ்டாலின் புகைப்படக் கண்காட்சியில் இதுவரை யாரும் பார்த்திராத ஸ்டாலினின் பல அரிய புகைப்படங்கள் இடம்பெற்றிருக்கின்றன.

தமிழ்நாடு முதலமைச்சரின் வாழ்க்கை பயண புகைப்பட கண்காட்சியை அனைத்து மாவட்டங்களிலும் மக்கள் பார்வைக்கு வைப்பதன் மூலம் அவரது அரசியல் பயணம், கடந்து வந்த பாதைகள் பற்றி எளிதாக மக்கள் அறிந்துகொள்வார்கள் என்பதால் இந்தக் கண்காட்சியை ஒவ்வொரு மாவட்டமாக நடத்தி வருகிறது திமுக.
சென்னை, மதுரை, கோவை, திருச்சியை தொடர்ந்து சேலம், வேலூர், விழுப்புரம், நெல்லை என வரிசையாக இந்த புகைப்படக் கண்காட்சிகள் நடைபெறவுள்ளன.
-
'நான் முதல்வன்' திட்டத்தின் பெயரை மாற்றிய தவெக.. பழைய பதிவுகளை கூண்டோடு நீக்கிய விஜய்! -
வெளியே போறோம்..புரட்சி செய்யும் புதுக்கோட்டை மும்மூர்த்திகள்! சி.விஜயபாஸ்கருக்கு சிக்கல்! என்னாச்சு? -
சென்னை அதிர்ச்சி.. தமிழகத்தின் கஜானா காலிக்கு காரணம் இவரா? விஜய் வெளியிட்ட "வொயிட் பேப்பர்" ரகசியம் -
OG திமுக இதுதான்.. ரெண்டு பேருமே பெரிய தலக்கட்டாச்சே! மணி & கோவை தட்டித் தூக்கும் திமுக! பரபர கொங்கு -
சேலத்தில் பெரியார் சிலை அவமதிப்பு.. கீழ்த்தரமான செயல் என திமுக கண்டனம் -
காங்கிரஸ் செய்த கழுத்தறுப்புகள்.. ஆசிர்வாதம் செய்த ராகுல் காந்தி! விடாத திமுக.. குதிக்கும் தலைகள்! -
கரண்ட் கட்.. போராட்டமாக மாறிய பொதுக்கூட்ட மேடை! சூடான திமுகவினர்! சென்னையில் சலசலப்பு! -
தவெகவுக்கு தாவும் திண்டுக்கல் திமுக கவுன்சிலர்.. அவங்க அப்பா பெரிய புள்ளியாச்சே! பிரம்மாண்ட ப்ளான்! -
விஜய் சார் இதை மறந்துடாதீங்க.. திமுக ஐடி விங்க் வெளியிட்ட மீம் வீடியோ..! -
சைலண்ட் கில்லரான ஸ்டாலின்.. அதிமுக நிர்வாகிகளுக்கு பறந்த அழைப்பு.. தவெகவுக்கு செக் -
ஆடிய ஆட்டமென்ன? குறுநில மன்னர்களாக அமைச்சர்கள்! அடங்காத மா.செ.க்கள்! ஆக்ஷனுக்கு தயாரான ஸ்டாலின்! -
அஸ்திவாரத்தை ஆட்டும் விஜய்.. அலற போகும் அறிவாலயம்! திமுக ‘மாஜி’ புள்ளிகளுக்கு செக்! களமிறங்கிய டீம்!












Click it and Unblock the Notifications