திருச்சியில் சோகம்.. 2 வயது மகனுடன் குளியலறையில் தீக்குளித்து தற்கொலை செய்த கர்ப்பிணி
திருச்சி: உப்பிலியபுரம் அருகே 2 வயது மகனுடன் கர்ப்பிணி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: திருச்சி மாவட்டம் உப்பிலியபுரத்தை அடுத்துள்ள கோட்டப்பாளையம் களர்மேடு பகுதியைச் சேர்ந்தவர் வேல்முருகன் (30). லாரி டிரைவர். இவருடைய மனைவி ரஞ்சனா (22). இவர்களின் மகன் கமலேஷ் (2). இவர்களுக்கு திருமணமாகி 5 ஆண்டுகள் ஆகிறது.
தற்போது ரஞ்சனா 2 மாதம் கர்ப்பமாக இருக்கிறார். வேல்முருகன் தனது மனைவி, குழந்தையுடன் தனது பெற்றோர் வீட்டில் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகிறார். கடந்த மாதம் 15-ஆம் தேதி வேல்முருகன் தருமபுரிக்கு வேலைக்காக சென்றுவிட்டார்.

மண்ணெண்ணெய்
இந்தநிலையில் நேற்று காலை 7 மணியளவில் வீட்டின் அருகில் உள்ள குளியலறைக்கு தனது மகனுடன் சென்ற ரஞ்சனா, கதவை தாழிட்டு கொண்டார். பின்னர் தனது உடலிலும், மகனின் உடலிலும் மண்ணெண்ணெயை ஊற்றி தீ வைத்துக் கொண்டார். இதில் இருவர் உடலிலும் தீ பற்றி எரிந்தது. வலியால் அவர்கள் அலறி துடித்தனர்.

குளியலறை
அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடிவந்து குளியலறையின் தாழ்ப்பாளை உடைத்து பார்த்தனர். அப்போது தாய், மகன் இருவரும் எரிந்து கொண்டிருந்தனர். உடனே தீயை அணைத்து தாய், மகன் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக துறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

குளியலறை
அலறல் சத்தம் கேட்டு அக்கம், பக்கத்தினர் ஓடிவந்து குளியலறையின் தாழ்ப்பாளை உடைத்து பார்த்தனர். அப்போது தாய், மகன் இருவரும் எரிந்து கொண்டிருந்தனர். உடனே தீயை அணைத்து தாய், மகன் இருவரையும் மீட்டு சிகிச்சைக்காக துறையூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.

முதலுதவி சிகிச்சை
அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். ஆனால் வழியிலேயே கமலேஷ் இறந்துவிட்டான். ரஞ்சனா சிகிச்சை பலனின்றி நேற்று மாலை உயிரிழந்தார். இதுபற்றி தகவல் அறிந்த முசிறி துணை போலீஸ் சூப்பிரண்டு பிரம்மானந்தம், துறையூர் இன்ஸ்பெக்டர் குருநாதன், சப்-இன்ஸ்பெக்டர் குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

ரஞ்சனாவின் கணவர்
மேலும் தருமபுரியில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ரஞ்சனாவின் கணவர் வேல்முருகனுக்கும் தகவல் கொடுக்கப்பட்டது. அவர் உடனடியாக சொந்த ஊருக்கு புறப்பட்டு வந்தார். இதைத் தொடர்ந்து வேல்முருகன் மற்றும் ரஞ்சனாவின் மாமனார், மாமியாரிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். ரஞ்சனா, குழந்தையுடன் தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் தெரியவில்லை. இதுகுறித்து உப்பிலியபுரம் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
-
திருச்சி லாட்ஜில் காதலிக்கு போடப்பட்ட போதை ஊசி.. காதலன், நண்பனை விசாரித்தால் திடுக்கிடும் தகவல்கள் -
திருச்சிக்கு ஓடி வந்த தென் கொரிய நிறுவனம்.. ஒரே திட்டம் 13000 பேருக்கு வேலை.. அடிசக்க! -
இனி அரசு ஊழியர்களுக்கு வாரம் 2 நாள் விடுமுறை.. அனைத்து சனிக்கிழமையும் ‘லீவு’ அறிவித்த முதல்வர் -
ராயல் என்பீல்டு முதலீடு ஆந்திரா சென்றதா? அமைச்சர் கீர்த்தனா பற்றி உண்மையை உடைத்த MP மாணிக்கம் தாகூர் -
"அமைச்சர் ஆதவ் அர்ஜுனாவை பதவிநீக்கம் செய்ய வேண்டும்”.. முதல்வர் விஜய்க்கு கிருஷ்ணசாமி வைத்த கோரிக்கை -
வெளிநாடு போயிருக்கதே 'ரீல்ஸ்' பார்த்துதான் தெரியுது.. அமைச்சர் கீர்த்தனாவை கலாய்த்த மேயர் பிரியா! -
"எதிரிகள் சர்வ நாசம்".. எம்ஜிஆர், ஜெ., பாணியில் விஜய்.. கொல்லூர் மூகாம்பிகை கோவிலுக்கு செல்வது ஏன்? பின்னணி -
தங்கப்பத்திரத்தில் 1.50 கோடி முதலீடு செய்தவர்களுக்கு 6 கோடி தந்த மத்திய அரசு.. லாபம் 4.85 கோடி -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
"3 சேனல்கள் நீக்கம் இல்லை.. தொழில்நுட்ப கோளாறால் தற்காலிக ஒளிபரப்பு பாதிப்பு” - அமைச்சர் ராஜ்மோகன் -
முதல்வர் விஜய்யின் முதல் அரசு நிகழ்ச்சி.. ஒரே ஏஐ வீடியோவில் இத்தனை தமிழ்ப் பிழைகளா! -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்?












Click it and Unblock the Notifications