17 அடியில் இருக்கும் பெரிய பாறை.. திணறும் ரிக் மிஷின்.. சுஜித்தை மீட்கும் பணியில் புதிய சிக்கல்!
ஆழ்துளை கிணற்றில் சிக்கி இருக்கும் சுஜித்தை சுரங்கம் அமைத்து மீட்கும் பணியில் புதிய சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளது.
திருச்சி: ஆழ்துளை கிணற்றில் சிக்கி இருக்கும் சுஜித்தை சுரங்கம் அமைத்து மீட்கும் பணியில் புதிய சிக்கல் ஒன்று ஏற்பட்டுள்ளது. 17 அடி ஆழத்தில் நிறைய பாறைகள் இருப்பதால் சுரங்கம் அமைக்கும் பணி தாமதம் அடைந்துள்ளது.
சுஜித்தை மீட்க வேண்டும் என்று தற்போது தமிழகம் மொத்தமும் பிரார்த்தனை செய்து கொண்டு இருக்கிறது. திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நடுக்காட்டுப்பட்டியை சேர்ந்த சுஜித் என்ற சிறுவன் நேற்று முதல் நாள் மாலை ஆழ்துளை கிணற்றுக்குள் விழுந்துவிட்டார்.
நேற்று முதல் நாள் மாலை இவரை மீட்கும் பணிகள் துவங்கியது. தற்போது சுஜித் இருக்கும் ஆழ்துளை கிணறுக்கு அருகே இன்னொரு பெரிய குழி ஓஎன்ஜிசி மூலம் தோண்டப்படுகிறது.

குழி உண்டு
ஓஎன்ஜிசி மூலம் ஆழ்துளைக்கிணறுக்கு அருகில் 2மீட்டர் தொலைவில் இந்த குழி தோண்டப்படுகிறது. ஒரு ஆள் இறங்கும் அளவுக்கு 1மீட்டர் அகலத்தில் குழி தோண்டப்படுகிறது. குழியில் இறங்க 7 தீயணைப்புவீரர்கள் தயார் நிலையில் உள்ளனர். இன்னும் 1 மணி நேரத்தில் குழி தோண்டப்பட்டு விடும் என்கிறார்கள்.

சுஜித் மீட்பு
இந்த நிலையில் சுஜித்தை மீட்கும் பணியில் தற்போது புதிய சிக்கல் ஏற்பட்டுள்ளது. 100 அடிக்கு ஆழமாக இந்த குழி தோண்டப்படுகிறது. போர்வெல்லுக்கு அருகே தோண்டப்படும் இந்த குழி மூலம் சுரங்கம் அமைத்து, போர்வெல் குழியில் சிக்கி இருக்கும் சுஜித் மீட்கப்பட உள்ளார்.

ஆனால் சிக்கல்
ஆனால் இந்த குழி தோண்டப்படும் பகுதியில் நிறைய பாறைகள் இருக்கிறது. இதனால் ரிக் மிஷன் கொண்டு குழி தோண்டுவது கடினமாக காரியமாக மாறியுள்ளது. பொதுவாக ரிக் மிஷின் கொண்டு குழி தோண்ட 100 அடிக்கு ஒன்றரை மணி நேரம் ஆகும்.

என்ன தொய்வு
ஆனால் இந்த பகுதியில் 17 அடிக்கு பிறகு நிறைய பாறைகள் இருக்கிறது. இந்த பாறைகளை எல்லாம் ரிக் மிஷின் உடைத்து உள்ளே செல்ல வேண்டும். ஆகவே குழி தோண்டும் பணியில் தற்போது தொய்வு ஏற்பட்டுள்ளது. இதனால் அங்கு குழி தோண்டும் பணிகள் மூன்று மணி நேரம் தாமதம் ஆகலாம் என்று கூறுகிறார்கள்.
-
சூடம் ஏற்றி.. தீபாராதனை காட்டி.. விஜய்-க்கு சிலை வைத்து கும்பிடும் திருச்சி தொண்டரின் குடும்பம் - வீடியோ -
திருச்சி நர்சிங் மாணவி உயிரிழப்புக்கு தரமற்ற மருந்தே காரணம்.. ஆய்வறிக்கையில் வெளியான அதிர்ச்சி தகவல் -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி












Click it and Unblock the Notifications