"பாஜக ஆபீசிலும், காஞ்சி மடம் அருகிலும் பழனிபாபா படம் பொறித்த கொடியை ஏற்றுவோம்".. தடா ரஹீம் அதிரடி
திருச்சியில் இந்திய தேசிய லீக் தலைவர் தடா ரஹிம் பேட்டி தந்துள்ளார்
திருச்சி: இஸ்லாமியர் அதிகம் இருக்கும் பகுதிகளிலும், பள்ளிவாசல் அருகிலும் பாஜக கொடிக்கம்பத்தை நடுகிறார்கள்.. இதுக்கு பதிலடியாக பாஜக தலைமை அலுவலகமான கமலாலயத்தின் முன்பும், காஞ்சி மடம் அருகிலும் பழனிபாபா படம் பொறித்த கொடியை ஏற்றுவோம்" என்று இந்திய தேசிய லீக் மாநில தலைவர் தடா ரஹீம் பகிரங்கமாக தெரிவித்துள்ளார்.
இந்திய தேசிய லீக் கட்சியின் மாநில நிர்வாகிகள் கூட்டம் திருச்சியில் நடைபெற்றது.. இந்த கூட்டத்துக்கு மாநில தலைவர் தடா ரஹீம் தலைமை தாங்கினார்.

முன்னதாக செய்தியாளர்களிடம் பேசியபோது அவர் சொன்னதாவது: மத்தியில் பாரதிய ஜனதா கட்சி ஆட்சிக்கு வந்த பின்னர் நாடு முழுவதும் இஸ்லாமியருக்கு எதிரான ஒரு சிந்தனையோடு பல சட்டங்களை இயற்றி வருகிறது. இது இஸ்லாமியர்களுக்கு மட்டுமல்லாமல் ஒட்டுமொத்த தாழ்த்தப்பட்ட, ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிரானதாக இருக்கிறது... இதை வன்மையாக கண்டிக்கிறோம்.
தேர்தல் நெருங்கி வருவதால் பாஜக கலவரத்தை ஏற்படுத்தி, அதன் மூலமாக தமிழகத்தில் தங்களது ஆட்சியை நிறுவ வேண்டும் என்ற நோக்கத்துடன் செயல்படுகிறது. 'நீட்' என்ற ஒரு கொடுமையான தேர்வை அனுமதித்து இருப்பதால், அப்பாவி மாணவர்கள் தற்கொலை செய்து கொண்டுள்ளனர்... இது தற்கொலை அல்ல. பாஜகவினால் ஏற்படுத்தப்பட்ட கொலை என்றே சொல்ல வேண்டும்.
இஸ்லாமியர் அதிகம் இருக்கும் பகுதிகளிலும், பள்ளிவாசல் அருகிலும் பாஜக கொடிக்கம்பம் நிறுவப்படுகிறது. இதற்குப் பதிலடியாக சென்னையில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமை அலுவலகமான கமலாலயத்தின் முன்பும், காஞ்சி மடம் அருகிலும் பழனிபாபா படம் பொறித்த கொடியை ஏற்றுவோம்" என்றார்.
-
தலைவரை நீக்குங்க.. விஜய் வென்றதும் வாட்ஸ் ஆப்பில் பறந்த மெசேஜ்! ரெடியாகும் தங்க நகை.. என்ன நடக்குது? -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
ஒரு மணி நேரம் நடந்த மீட்டிங்.. ரஜினிகாந்த் மருமகனுக்கு மிகப்பெரிய பொறுப்பை கொடுக்கும் அண்ணாமலை! -
பாஜகவும் திமுகவும் ஒன்னு.. டெல்லிக்கு அதிர்ச்சி கொடுத்த அமர் பிரசாத் ரெட்டி! அண்ணாமலையுடன் ஐக்கியம் -
மாற்றத்திற்கு தயாராகும் அறிவாலயம்! அடைக்கலமாகும் முக்கிய புள்ளிகள்! ஸ்டாலினின் அதிரடி மூவ்! -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
2 அமைச்சர் பதவிக்காக.. திமுகவை கழற்றிவிட்டது நியாயமா? ராகுலுக்கு சிபிஎம் அடுக்கடுக்காக கேள்வி! -
காலரில் என்னங்க இது.. அமைச்சரானதும் வன்னியரசும் இப்படி இறங்கிட்டாரே.. விசிகவிற்கு இது புதுசு -
பாஜகவுடன் கைகோர்க்கும் திமுக? காங்கிரஸ் சொன்ன‘குட்பை'யால் ரகசிய பேச்சுவார்த்தை.. பரபரப்பு தகவல் -
அமைதியோ அமைதி.. பிள்ளையைக் கிள்ளி விட்ட அண்ணாமலை! அரசியல் கட்சி அறிவிப்பு எப்போது? திடீர் ட்விஸ்ட்! -
அமித்ஷா டெல்லி திரும்பியதுமே மாறிய கணக்கு.. புதுச்சேரி ரங்கசாமிக்கு க்ரீன் சிக்னல்.. யாரந்த 3 பேர் -
குறுநில மன்னர்களுக்கு செக்.. மா.செ.கள் ஏரியாக்களை பறிக்கும் ஸ்டாலின்! இளந்தாரிகளுக்கு மெகா வாய்ப்பு!












Click it and Unblock the Notifications