திருச்சி.. பேராசிரியர் செய்த பாலியல் சேட்டை.. உதவிய பேராசிரியை.. குமுறிய மாணவிகள்.. பரபரப்பு கடிதம்
திருச்சி: திருச்சியில் கல்லூரி மாணவிகளிடம் பாலியல் தொல்லை கொடுத்து வந்த பேராசிரியர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார். மற்றொரு பேராசிரியர் மீது விசாரணை நடைபெற்று வருகிறது.
திருச்சி பிஷப் ஹீபர் கல்லுாரி தமிழ்துறை தலைவர் பேராசிரியர் பால் சந்திரமோகன் மீது முதலாம் ஆண்டு முதுகலை மாணவிகள் சிலர், கல்லுாரி முதல்வரிடம் புகார் மனு அளித்திருந்தனர்.
அதில் பல திடுக்கிடும் தகவல்களை அவர்கள் தெரிவித்துள்ளனர்.

பால் சந்திரமோகன் மீது பல புகார்கள்
அந்த புகாரில் கூறியுள்ள சில திடுக்கிடும் தகவல்கள் இதுதான்- பாடம் நடத்தும்போது நெருக்கமாக அமர்ந்து கொள்வார், பாலியல் சீண்டல்கள் செய்வார், ஆபாசமாக இரட்டை அர்த்தத்துடன் பேசுவார், மாணவிகளை அருகே கூப்பிட்டு கண்ட இடத்தில் கை வைத்து, சில்மிஷம் செய்வார், அவரது அறைக்கு தனியாக வரச்சொல்லி வழிய வழிய பேசுவார் என்று தொடர்ந்து பாலியல் தொந்தரவுகளை துறை தலைவர் தந்து வருவதாக கடிதத்தில் கூறப்பட்டது.

பெண் பேராசிரியர்
பேராசிரியல் பால் செய்யும் இந்த பாலியல் சீண்டல்களுக்கு பெண் பேராசிரியர் நளினி என்பவர் துணை போவதாகவும், இதன் காரணமாக தாங்கள் கல்லுாரிக்கு வருவதற்கு பெற்றோர்கள் அச்சம் தொிவிப்பதாகவும் அந்த கடிதத்தில் குற்றம்சாட்டி உள்ளனர்.

விசாரணை குழு
இதனை தொடர்ந்து கல்லுாரி நிர்வாகம் வழக்கறிஞர் ஜெயந்தி ராணி தலைமையில், துணை முதல்வர் உள்ளிட்ட விசாரணை குழு அமைத்து விசாரணை நடத்தியது. இந்த விசாரணை குழுவானது மாணவிகளிடமும், கல்லுாரி பேராசிரியர்களிடமும் விசாரணை நடத்தி அதன் அறிக்கையை நிர்வாகத்திடம் தாக்கல் செய்துள்ளது.

பேராசிரியர் பணியிடை நீக்கம்
இதன் அடிப்படையில் தமிழ்துறை தலைவர் நேற்று பேராசிரியர் பால் சந்திரமோகன் பணி இடைநீக்கம் செய்யப்பட்டு உள்ளார். இந்த விவகாரம் தொடர்பாக காவல்துறை கூடுதல் துணை கமிஷனர் வனிதா தலைமையில் ஒரு குழு அமைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

போலீஸ் ஆலோசனை
விசாரணையின் முடிவில் வழக்கு பதிவு செய்வது குறித்து முடிவு எடுக்கப்படும் என கூறப்படுகிறது. இதுவரை இந்தப் பாலியல் குற்றம் தொடர்பாக காவல்துறையினர் வழக்கு பதிவு செய்ய பதிவு செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தின் புகழ் பெற்ற கல்லுாரி ஒன்றில் மாணவிகள் பாலியல் ரீதியான பாதிப்புக்கு உள்ளான சம்பவம் கல்வியாளர்கள் மற்றும் பொதுமக்களிடையே வருத்தத்தை ஏற்படுத்தி உள்ளது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications