திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

"வெளிமாநில மாணவர்கள் தமிழை கற்கணும்.. திருக்குறள் ஒரு ஞான பொக்கிஷம்!" புகழ்ந்த தர்மேந்திர பிரதான்

Google Oneindia Tamil News

திருச்சி: தமிழ்நாட்டில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ள மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதான், தமிழ் மொழி குறித்தும் திருக்குறள் குறித்தும் பல முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழகத்தின் 33ஆவது பட்டமளிப்பு விழா இன்று நடைபெற்றது. இதில் ஆளுநர் ரவி, உயர்கல்வி துறை அமைச்சர் பொன்முடி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

இந்த நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் தர்மேந்திர பிரதானும் கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியில் பேசிய பேசிய தர்மேந்திர பிரதான் புதிய கல்விக் கொள்கை குறித்தும் தமிழ் மொழி குறித்தும் பல முக்கிய கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

 அரக்கோணம் கோயில் திருவிழாவில் கிரேன் கவிழ்ந்து விபத்து.. சிறுவன் உட்பட மூவர் பலி! பலர் படுகாயம் அரக்கோணம் கோயில் திருவிழாவில் கிரேன் கவிழ்ந்து விபத்து.. சிறுவன் உட்பட மூவர் பலி! பலர் படுகாயம்

அனைத்தும் தேசிய மொழிகளே

அனைத்தும் தேசிய மொழிகளே

இந்த நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், "தாய்மொழியில் கல்வி கற்பதை ஊக்குவிக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. யுபிஎஸ்சி தேர்வுகளைத் தமிழில் எழுதவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. நமது நாட்டில் இருக்கும் மொழிகளில் பாகுபாடு பார்க்கப்படுவதாகக் கூறும் பேச்சுக்கே இடமில்லை. இங்கு உள்ள அனைத்து மொழிகளுமே தேசிய மொழிகள் தான்.. உலகிலேயே மிகவும் பழமையான மொழிகளில் ஒன்றாகத் தமிழ் உள்ளது. இங்குள்ள பழமையான கோயில்களில் கட்டிடக் கலை வியக்கத்தக்க வகையில் உள்ளது" என்றார்.

திருச்சி என்ஐடி

திருச்சி என்ஐடி

முன்னதாக அமைச்சர் தர்மேந்திர பிரதான் திருச்சி துவாக்குடியில் உள்ள தேசிய தொழில்நுட்ப வளாகத்தில் புதிதாகக் கட்டப்பட்ட கட்டிடங்களைத் திறந்து வைத்தார். மேலும், மேலும் திருச்சி என்ஐடி வளாகத்தில் உற்பத்திப் பொறியியல், இயந்திரப் பொறியியல், உலோகவியல் மற்றும் பொருட்கள் துறைகளுக்கான இணைப்புக் கட்டிடங்களின் 'பூமி பூஜை' நிகழ்ச்சி நடைபெற்ற நிலையில், அதிலும் அமைச்சர் கலந்து கொண்டார்.

தலைவர்கள்

தலைவர்கள்

அப்போது பேசிய அமைச்சர் தர்மேந்திர பிரதான், "திருச்சியில் அமைந்துள்ள இந்த என்ஐடி நிறுவனம் நம் நாட்டின் மிகவும் மதிப்புமிக்க மற்றும் பழமையான கல்வி நிறுவனமாகும்.. இந்த கல்வி நிறுவனத்தில் இருந்து ஏராளமான தொழில்துறைத் தலைவர்கள் உருவாகியுள்ளனர். இந்த கல்வி நிறுவனம் பொறியாளர்களை மட்டும் உருவாக்குவதில்லை.. தொலைநோக்கு பார்வை இருக்கும் தலைவர்களையும் உருவாக்குகிறார்கள்.

தமிழை கற்க வேண்டும்

தமிழை கற்க வேண்டும்

திருச்சி என்ஐடியில் இப்போது படிக்கும் மாணவர்களில் 50% பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள். அதேநேரம் மீதி 50% பேர் மற்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். மற்ற மாநிலங்களில் இருந்து வரும் மாணவர்கள் தமிழ் மொழியை விருப்பப் பாடமாக எடுக்க வேண்டும். வெளி மாநிலத்திலிருந்து தமிழகத்திற்குக் கல்வி கற்க வரும் மாணவர்கள் தமிழ் மொழியை எழுதவும், பேசவும் கற்றுக்கொள்ள வேண்டும். தற்போதுள்ள மொழிகளிலேயே மிகவும் பழமையான மொழிகளில் ஒன்று தமிழ் மொழியாகும்.

திருக்குறள்

திருக்குறள்

சேக்ஸ்பியர் புத்தகங்களில் இருப்பதைக் காட்டிலும் ஒட்டுமொத்த உலக நாகரீகத்தின் ஞான பொக்கிஷம் திருக்குறளில் இருக்கிறது. பிரதமர் மோடியின் வழிகாட்டுதல்படி வாரணாசியில் காசி தமிழ் சங்கமம் நடந்தது அனைவருக்கும் தெரியும். அப்போது திருக்குறளை எனது தாய்மொழியில் படிக்கும் வாய்ப்பு எனக்குக் கிடைத்தது. அப்போது தான் திருக்குறளில் இருக்கும் பல நல்ல கருத்துகளை என்னால் தெரிந்து கொள்ள முடிந்தது" என்று அவர் தெரிவித்தார்.

English summary
Union Minister Dharmendra Pradhan says Thirukkural is one of the best works: Union Minister Dharmendra Pradhan about Tamil.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X