திருச்சிராப்பள்ளி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

"பிதாமகள்".. சுடுகாட்டில் கை, கால்களை கட்டி.. நெருப்பு வைத்து.. பரபர திருச்சி.. யார் இந்த மாரியாயி?

பிணங்களை எரிக்கும் மாரியாயியை திருச்சி மக்கள் ஆச்சரியமாக பார்த்து வருகின்றனர்

Google Oneindia Tamil News

திருச்சி: கொரோனா சடலம் என்றுகூட பார்ப்பதில்லை.. அதை தொட்டு குளிப்பாட்டி, கை கால்களை கட்டி, நெருப்பு வைத்து எரிக்கிறார் மாரியாயி..!

யாராவது இறந்துவிட்டால், வழக்கமாக சுடுகாடு வரை பெண்கள் செல்ல அனுமதிப்பதில்லை.. அதிலும் அந்த காலத்தில் இன்னும் மோசம்.. யார் இறந்தாலும், அந்த வீட்டு ஆண்கள்தான் சுடுகாடுக்கு சென்று சடங்குகளை செய்துவிட்டு வருவார்கள்...

3வது நாள் பால் ஊற்றும்போதும் இப்படித்தான். பெண்களுக்கு வீட்டில் இறந்தவர்களுக்கு காரியம் செய்வதோடு சரி.. மற்ற மதங்களிலும் கிட்டத்தட்ட இதே நிலைமைதான்..!

சுடுகாடு.. மண்டை ஓடு.. மாணவிக்கு பர்தா.. வேலூருக்கு கடத்தி வந்த வாத்தியார்.. இப்ப சிறையில் 1-2-3! சுடுகாடு.. மண்டை ஓடு.. மாணவிக்கு பர்தா.. வேலூருக்கு கடத்தி வந்த வாத்தியார்.. இப்ப சிறையில் 1-2-3!

முகம்

முகம்

இப்போது கொரோனா காலம் வேறு.. யார் தொற்றில் இறந்துவிட்டாலும், அவர்களின் முகத்தை கூட பார்க்க அனுமதி இல்லை.. கட்டின கணவன், பெற்ற பிள்ளை, தாலிகட்டிய மனைவி, யாராக இருந்தாலும் சரி, தொட்டுப்பார்க்க கூட முடிவதில்லை.. வேண்டுமானால் தூரமாக நின்று சடலங்களை பார்த்து அழுது கொள்ளலாம். அவ்வளவுதான் இந்த கொரோனா நமக்கு தந்த அனுமதி.

சுடுகாடு

சுடுகாடு

இதையெல்லாம் சுக்குநூறாக உடைத்தெறிந்துள்ளார் மாரியாயி.. திருச்சி சுடுகாட்டில் பிணங்களை எரிக்கும் வெட்டியான் பணியை செய்து வருபவர்.. அதுவும் 17 வருஷங்களாகவே இந்த பணி தான்... திருச்சி மாநகராட்சி பகுதி எடமலைப்பட்டிபுதூர் கோரையாற்றங்கரையில் சுடுகாடு உள்ளது.. இங்குதான் இறந்தவர்களை எரித்து வருகிறார்கள். கணவர் முத்தையாவும் எடமலைப்பட்டிபுதூர் சுடுகாட்டில் வெட்டியான் வேலை செய்தவர்.. ஆனால் அவர் இறந்துவிடவும், வறுமை காரணமாக, அவர் விட்டு சென்ற பணியையே மனைவி தொடர்ந்து வருகிறார்.

பிழைப்பு

பிழைப்பு

இது வெட்டியான் வேலை என்று சாதாரணமாக நினைத்து விட முடியாது.. இந்த வேலைக்கும் பயங்கரமான போட்டி உள்ளதாம்.. மாரியாயி உதவிக்கு ஒருவரை வைத்து கொண்டு, பிழைப்பை ஓட்டி வருகிறார்.. குடிசை வீட்டில் வசித்தாலும், மாரியாயி தனக்காக எதுவும் கேட்பதில்லை.. கோரையாறு சுடுகாட்டை நவீனப்படுத்த வேண்டும் என்று பொதுமக்கள் நலனுக்காக கோரிக்கை விடுக்கிறார்.

 சிகிச்சை

சிகிச்சை

இந்த 2வது அலை தொற்றில் மட்டும் 20 சடலங்களை எரித்துள்ளாராம்.. அவர்களின் உடலை தொட்டு, குளிப்பாட்டி கை, கால்களை கட்டி அதன் பிறகு சிதையில் படுக்கவைத்து தீ வைத்தாராம்.. இத்தனைக்கும் இவருக்கும் முதல் அலையின்போது தொற்று பாதிப்பு ஏற்பட்டு சிகிச்சை பெற்றவர்தான்...

கண்ணதாசன்

கண்ணதாசன்

தொற்றில் இருந்துமீண்டு, தொற்றில் இறந்தவர்களை தொட்டு தீமூட்டும் இந்த தைரியமான பெண்மணி மாரியாயிக்கு, கல்பனா சாவ்லா விருது தர வேண்டும் என்ற கோரிக்கையும் எழுந்து வருகிறது. ஆனால் ஒன்று, "வீடு வரை உறவு.. வீதி வரை மனைவி.. காடு வரை பிள்ளை.. கடைசி வரை யாரோ? என்று கண்ணதாசன் அன்னைக்கு கேட்டாரே.. இதோ.. மனிதனின் கடைசி தருணத்தில் இதுபோன்ற மாரியாயிக்கள் இருப்பார்கள் நிச்சயம் என்பதில் சந்தேகமில்லை..!

English summary
Woman burns corpses in the Trichy graveyard without fear
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X