தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

தூத்துக்குடி துப்பாக்கி சூடு.. 11-ம் கட்ட விசாரணை இன்று முதல் தொடக்கம்.. 73 பேருக்கு சம்மன்

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக ஒருநபர் ஆணையத்தின் 11-ம் கட்ட விசாரணை இன்று ஆரம்பமாகிறது. இதற்காக 73 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு இருக்கிறது.

ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக போன வருடம் பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள். அப்போது வெடித்த கலவரத்தில், துப்பாக்கி சூடு நடைபெற்றது, அதில் 13 பேர் உயிரிழந்தனர்.

11th stage investigation start from today in Thoothukudi fire Accident

இதுகுறித்து விசாரணை நடத்த, தமிழக அரசின் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது.

அதன்படி, துப்பாக்கி சூட்டில் உயிரிழந்தவர்கள், காயம் அடைந்தவர்கள் குடும்பத்தினர் என 200-க்கும் மேற்பட்டவர்களிடம் 9 கட்டங்களாக விசாரணை நடத்தி முடிக்கப்பட்டுள்ளது. கடந்த 8-ம் தேதி 10-ம் கட்ட விசாரணைக்காக 268 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டு, அவர்களிடம் விசாரணையும் நடந்து முடிந்தது.

பன்றி மேய்க்க நான் தயாராக இல்லை.. அதனால்தான் அதிமுகவிலிருந்து விலகினேன்.. செந்தில் பாலாஜி பொளேர்! பன்றி மேய்க்க நான் தயாராக இல்லை.. அதனால்தான் அதிமுகவிலிருந்து விலகினேன்.. செந்தில் பாலாஜி பொளேர்!

இந்நிலையில், 11-ம் கட்ட விசாரணை இன்று முதல் தொடங்க உள்ளது. இன்று தொடங்கும் இந்த விசாரணை வரும் 20-ம் தேதி முதல் நடைபெற இருக்கிறது. இதற்காக 73 பேருக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

சம்மன் அனுப்பப்பட்ட 73 பேரிடமும் விசாரணை நடத்தப்பட்டு, அவர்களிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட உள்ளது.

English summary
In Thoothukudi fire Accident 11th stage investigation start from today
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X