பதவியை ராஜினாமா செய்க! காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுக்கு குடைச்சல் தரும் பாஜக! தூள் பறக்கும் தூத்துக்குடி!
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதி காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஊர்வசி அமிர்தராஜை பதவி விலகக்கோரி பாஜக குடைச்சல் கொடுத்து வருகிறது.
இந்துசமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ.200 கோடி மதிப்பிலான நிலம் விவகாரத்திற்கு பொறுப்பேற்று, ஊர்வசி அமிர்தராஜ் தனது எம்.எல்.ஏ.பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜகவினர் குரல் எழுப்பியுள்ளனர்.
ஸ்ரீ வைகுண்டம் தொகுதி முழுவதும் ஊர் ஊராக ஆயிரக்கணக்கில் போஸ்டர்களை ஓட்டி ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ.வுக்கு சிக்கலை ஏற்படுத்தி வருகிறது பாஜக.

குயின்ஸ் லேண்ட்
இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான ரூ.200 கோடி மதிப்பிலான நிலத்தை குயின்ஸ் லேண்ட் பொழுது போக்கு பூங்கா நிறுவனத்திடம் இருந்து மீட்பதற்கான சட்டப்பூர்வ பணிகள் நடைபெற்று வருகின்றன. அந்தப் பொழுதுப்போக்கு பூங்காவின் இயக்குநர் என்ற முறையில் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் ஊர்வசி அமிர்தராஜ் இப்போது சர்ச்சையில் சிக்கியிருக்கிறார். கோவில் நில விவகாரத்தில் தொடர்புடைய ஊர்வசி அமிர்தராஜ் தனது எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்ய வேண்டும் என பாஜக போர்க்கொடி உயர்த்தியுள்ளது.

தொகுதி முழுவதும்
ஊர்வசி அமிர்தராஜை பதவி விலகச் சொல்லி ஸ்ரீவைகுண்டம் தொகுதி முழுவதும் பாஜகவினர் போஸ்டர்கள் ஓட்டியுள்ளனர். இதில் கொடுமை என்னவென்றால் ஸ்ரீவைகுண்டம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்திலேயே இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டது தான். இதனிடையே பாஜகவினர் ஒட்டிய இந்த போஸ்டர்கள் கிழிப்பதற்காக தனிச் சம்பளம் கொடுத்து ஆட்களை இறக்கிவிட்டுள்ளது ஊர்வசி அமிர்தராஜ் எம்.எல்.ஏ. தரப்பு.

போராட்டம் நடத்த
முதற்கட்டமாக போஸ்டர்கள் மூலம் குடைச்சல் கொடுக்கும் பாஜக, இனி போராட்டங்களை முன்னெடுக்க திட்டமிட்டுள்ளது. திமுகவுக்கு எதிராக மட்டுமல்ல காங்கிரசுக்கு எதிராகவும் நாங்கள் அரசியல் செய்வோம் என்பதை உணர்த்தியுள்ளனர் பாஜகவினர். இதனிடையே இந்த விவகாரத்தை எப்படி கையாள்வது என தனக்கு நெருக்கமான நிர்வாகிகள் மற்றும் கட்சி மேலிடத் தலைவர்களுடன் அவ்வப்போது ஆலோசனை நடத்தி வருகிறாராம் ஊர்வசி அமிர்தராஜ்.

முதல் முறை
ஊர்வசி அமிர்தராஜை பொறுத்தவரை இளம் வயதில் முதல் முறை சட்டமன்ற உறுப்பினர் ஆவார். இதனால் இது போன்ற பாஜகவின் அட்டாக்கை எதிர்பார்க்காத அவர் சற்றே ஜெர்க் ஆகிறாராம். தமிழகத்தில் முதல்முறையாக எம்.எல்.ஏ. ஒருவரை பதவி விலகக் கோரி பாஜக குரல் கொடுத்திருப்பது குறிப்பிடத்தக்கதாகும்.
-
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தூத்துக்குடி காங்கிரஸ் மீது திமுக கொடூர தாக்குதல்! ரவுடித்தனம் என மாணிக்கம் தாகூர் விமர்சனம் -
காங்கிரஸ் வேட்பாளர் தேர்வில் பெரும் முறைகேடு.. சர்வே என்ற பெயரில் ஊழல்.. ஜோதிமணி பரபர குற்றச்சாட்டு -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து! -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி?












Click it and Unblock the Notifications