தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

திமுகவின் சாதனைகளை சொல்லி ஸ்டாலின் வாக்கு சேகரிக்க முடியுமா?... முதல்வர் பழனிசாமி கேள்வி

Google Oneindia Tamil News

ஒட்டபிடாரம்: திமுக ஆட்சியில் கொண்டு வந்த திட்டங்களை கூறி ஸ்டாலினால் வாக்கு சேகரிக்க முடியுமா என்று முதலமைச்சர் பழனிசாமி கேள்வி எழுப்பினார்.

தூத்துக்குடி மாவட்டம் ஒட்டபிடாரம் சட்டமன்ற தொகுதி இடைதேர்தலில் அதிமுக சார்பில் போட்டியிடும் மோகனை ஆதரித்து முதலமைச்சர் பழனிசாமி பிரச்சாரம் செய்தார். அப்போது பேசிய அவர், 88 திமுக எம்.எல்.ஏக்களில் இதுவரை ஒருவர் கூட மக்கள் பிரச்சனைக்காக என்னிடம் மனு அளித்ததில்லை என்றார்.

Can Stalin collect votes by DMKs achievements? Chief Minister Palanisamy Questioned

மேலும், ஒட்டபிடாரம் ஊராட்சி தரம் உயர்த்தி, பேரூராட்சியாக அறிவிக்கப்படும் என்றும் முதலமைச்சர் பழனிசாமி உறுதியளித்தார். எங்களை பற்றி குறை சொல்லியே ஸ்டாலின் பிரசாரம் செய்கிறார். திமுக ஆட்சியில் செய்த திட்டங்களை கூறி ஸ்டாலினால் வாக்கு சேகரிக்க முடியாது என்றும் கூறினார்.

கடந்த 14 ஆண்டுகளாக காங்கிரஸ் கூட்டணியில் அங்கம் வகித்த திமுகவினர், மத்திய அரசு வேலை வாய்ப்பில் தமிழக இளைஞர்களுக்கான அங்கீகாரத்தை பெற்றுத் தரவில்லை என்று குற்றம்சாட்டினார்.

எல்லா பக்கமும் அணை கட்டும் பிரச்சினைகள்.. தீவிர ஆலோசனையில் அதிமுக தலைவர்கள்!எல்லா பக்கமும் அணை கட்டும் பிரச்சினைகள்.. தீவிர ஆலோசனையில் அதிமுக தலைவர்கள்!

தங்களின் குடும்பத்தை பற்றித்தான் சிந்தித்தார்களே தவிர, மக்களை பற்றி அவர்கள் சிந்திக்கவில்லை என்றும் முதலமைச்சர் பழனிசாமி விமர்சனம் செய்தார். முன்னதாக, தேர்தல் பிரச்சார யுக்தி, வழிமுறைகள் குறித்து அ.தி.மு.க ஐ.டி பிரிவுடன் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை மேற்கொண்டார்.

English summary
Chief Minister Palanisamy questioned whether Stalin would be able to collect votes by claiming DMK's plans.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X