கிரேனில் ராட்சத மாலை.. பிரமாண்ட வரவேற்பு.. அட யாருப்பா இவரு? குண்டர் சட்டத்தில் ஜெயிலுக்கு போனவராம்!
தூத்துக்குடி : குண்டர் சட்டத்தில் சிறைக்குச் சென்று ஜாமினில் விடுதலையான திமுக நிர்வாகிக்கு கிரேன் மூலம் ராட்சத மாலை அணிவித்து உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அமைச்சர் அணிதா ராதாகிருஷ்ணனை தொலைபேசியில் மிரட்டிய வைகுண்ட பாண்டியன் கடந்த மார்ச் மாதம் கைது செய்யப்பட்டார். அவர் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது.
கயத்தாறைச் சேர்ந்த ஒருவரை வைகுண்ட பாண்டியன் வெட்ட முயற்சித்ததாக புகாரின் பேரில், அவர் மீது வன்கொடுமை தடுப்புப் பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. பின்னர் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டார்.
இந்நிலையில், ஜாமினில் விடுவிக்கப்பட்ட வைகுண்ட பாண்டியனுக்கு, அவரது ஆதரவாளர்கள் பிரமாண்ட வரவேற்பு அளித்துள்ளது அப்பகுதியில் பேசுபொருளாகியுள்ளது.

அமைச்சர் - ஒன்றிய செயலாளர்
தூத்துக்குடி மாவட்டம் பத்மநாபமங்கலம் ஊராட்சி மன்ற தலைவராக இருப்பவர் சிவகாமி. இவரது கணவர் திமுகவைச் சேர்ந்த வைகுண்ட பாண்டியன், அதே ஊராட்சியில் வைகுண்ட பாண்டியன் துணை தலைவராக இருந்து வருகிறார். இவர் கருங்குளம் திமுக ஒன்றிய செயலாளராக இருந்தவர். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பு வைகுண்ட பாண்டியன் மற்றும் கால்நடைத்துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் இருவரும் தொலைபேசியில் பேசிக்கொண்ட ஆடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

குண்டர் சட்டத்தில் கைது
அந்த ஆடியோவில் அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனை வைகுண்ட பாண்டியன் மிகக் கடுமையான வார்த்தைகளால் திட்டியிருந்தார். இதையடுத்து வைகுண்ட பாண்டியன் திடீரென கடந்த மார்ச் மாதம் 26ஆம் தேதி ஒரு கொலை முயற்சி வழக்கில் கைது செய்யப்பட்டு அவர் மீது குண்டர் சட்டமும் பாய்ந்தது. அமைச்சரை அசிங்கமாக திட்டிய விவகாரத்தில் தான் வைகுண்ட பாண்டியன் மீது குண்டர் சட்டம் போடப்பட்டதாக அப்போது பரபரப்பாக பேசப்பட்டது.

பிரமாண்ட வரவேற்பு
இதையடுத்து வைகுண்ட பாண்டியன் நெல்லை பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்த நிலையில் அவர் இன்று ஜாமினில் விடுதலை செய்யப்பட்டார். இதையடுத்து அவரது ஆதரவாளர்கள் பாளையங்கோட்டை சிறையில் இருந்து கேடிசி நகர் வழியாக திருச்செந்தூர் சாலை வரை உற்சாக வரவேற்பு கொடுத்தனர். குறிப்பாக சீனிவாசன் நகர் அருகில் திருச்செந்தூர் சாலையில் வைத்து வைகுண்ட பாண்டியனுக்கு கிரேன் மூலம் ராட்சத மாலை அணிவிக்கப்பட்டது. நூற்றுக்கும் மேற்பட்ட ஆதரவாளர்கள் ஒன்று திரண்டு வாழ்க கோஷம் எழுப்பினர்.

அடேங்கப்பா
ஊராட்சி மன்ற துணைத் தலைவருக்கு அமைச்சருக்கான வரவேற்பையே மிஞ்சும் வகையில் ஆதரவாளர்கள் கொடுத்த இந்த வரவேற்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆளுங்கட்சி அமைச்சரை மிரட்டி சிறைக்கு சென்று வந்த அதே கட்சியைச் சேர்ந்த நிர்வாகிக்கு பிரமாண்ட வரவேற்பு அளிக்கப்பட்ட சம்பவமும் அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோதல்
மேலும் அமைச்சர் தரப்புக்கும் வைகுண்ட பாண்டியனுக்கும் இடையே முதல் போக்கு இருந்து வரும் நிலையில் தனக்கு அதிக செல்வாக்கு இருப்பதை காட்டிக் கொள்ளும் வகையிலேயே இந்த வரவேற்பு சம்பவம் நடைபெற்றதாகவும் அப்பகுதியினர் தெரிவிக்கின்றனர். இதற்கிடையே வைகுண்ட பாண்டியனுக்கு கிரேன் மூலம் ராட்சத மாலை அணிவிக்கும் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.
-
பிளான் A எடப்பாடி.. பிளான் B திருமா.. திமுக பிளான்.. புட்டு புட்டு வைத்த காதர் மொகிதீன் -
ஸ்டாலினே சொன்னா தான் உண்டு.. திமுக - அதிமுக கூட்டணி முயற்சி நடந்ததா? 30 நாளாய் நீடிக்கும் மர்மம்! -
"திமுககாரன்னா திமிர் இருக்கணும்".. காரணம் சொல்லி ‘ஜென் ஸி' மீட்டப்பில் பேசிய டிஆர்பி ராஜா -
எதிர்காலம் நம்பிக்கையளிக்கிறது.. எனர்ஜி கூடுகிறது! ஜென் ஸி கூட்டம் குறித்து மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி -
திமுகவே கணிக்கல.. விஜய்யுடன் நெருங்கிய காங்கிரஸ்! பாஜகவை வீழ்த்த இந்தியா கூட்டணி மாஸ்டர் ஸ்கெட்ச் -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
விஜய்க்கு விஷப் பரிட்சை..திமுகவுக்கு அக்னி பரிட்சை! இடைத் தேர்தலுக்கு ரெடியான கழகங்கள்! அதிமுக அமைதி -
திட்டமிட்டு விஜய்யுடனான சந்திப்பை அமித்ஷா ரத்து செய்தார்.. திமுகவின் முரசொலி விமர்சனம் -
"மனக் குழப்பத்தில் மனோ தங்கராஜ்".. திமுகவுக்குள் பரபரப்பை உண்டாக்கிய அனிதா ராதாகிருஷ்ணன் பேச்சு -
ஸ்டாலின், பினராயி, சித்தராமையா, கே.சி.ஆர்.. அடுத்தடுத்து சரிந்த ராஜ்ஜியம்.. பாஜகவிற்கு அடித்த லக்! -
தொங்கலில் விடப்பட்ட சிங்கப்பெண் அதிரடிப்படை! தவெக அரசு தீவிரத்தை உணரவில்லை என கனிமொழி சாடல் -
குடும்பத்தினருடன் குடகு மலைக்குச் சென்ற திமுக தலைவர் ஸ்டாலின்.. கூட யார் யார்லாம் பாருங்க!












Click it and Unblock the Notifications