உடம்புக்கும் மனதுக்கும் மகிழ்ச்சி அளிப்பதுதான் ஆரோக்கியமான பொழுதுபோக்கு - பாலமுருகன்
ஆரோக்கியமான உடம்பும் மனதுமே சந்தோசமான வாழ்க்கையை கொடுக்கும். அந்த வகையில் உடம்புக்கும் மனதுக்கும் மகிழ்ச்சி கொடுக்கிற எந்த ஒரு செயலும் ஆரோக்கியமான பொழுதுபோக்காக இருக்கும்.
தூத்துக்குடி: ஆரோக்கியமான உடம்பும் மனதுமே சந்தோசமான வாழ்க்கையை கொடுக்கும். அந்த வகையில் உடம்புக்கும் மனதுக்கும் மகிழ்ச்சி கொடுக்கிற எந்த ஒரு செயலும் ஆரோக்கியமான பொழுதுபோக்காக இருக்கும் என்று மாணவர்களுக்கு அறிவுரை கூறியுள்ளார் பிரபல செய்தியாளரும் ரோட்டரியின் முன்னாள் உதவி ஆளுநர் பாலமுருகன்.
இன்றைக்கு பள்ளி சிறுவர்கள் முதல் கல்லூரி மாணவர்கள் வரை யாருக்குமே ஆரோக்கியமான பொழுது போக்கு எது என்பது தெரியாமல் உள்ளது. மொபைல் போன்களின் வருகையால் இணையதளங்களிலும் வீடியோ கேம்களிலும் அடிமையாகக் கிடக்கின்றனர். எனவே பள்ளி சிறுவர்களுக்கு ஆரோக்கியமான பொழுதுபோக்கு பற்றி பள்ளிகளில் மாணவர்களிடையே உரையாற்றியுள்ளார் பாலமுருகன்.
மனிதனுடைய வாழ்க்கையில் இன்றிமையாததாக இருக்க வேண்டிய ஒன்று. இன்று மனிதர்களுடைய வேலைச்சுமை, மாறுபட்ட வாழ்வியல் முறைகள் காரணமாக இந்த பொழுதுபோக்கு என்ற அம்சம் பல பேருக்கு கிட்டுவதில்லை. இதனால் மனஇறுக்கத்திற்கு ஆளாகின்றனர். இந்த நிலையை மாற்றியமைக்க குழந்தை பருவத்திலேயே குழந்தைகளின் திறமைக்கு ஏற்ற ஒரு பொழுதுபோக்கை கற்றுக்கொள்ள வாய்ப்பு ஏற்படுத்திக்கொடுப்பது அவசியமாகும்.

ஆரோக்கியமான பொழுதுபோக்குகள்
தூத்துக்குடி ஸ்பார்க் அமைப்பு சார்பில் பள்ளி மாணவர்களுக்கு உடல் ஆரோக்கியம், சுகாதாரம் பேணுதல், சட்ட விதிமுறைகள், உயர்கல்வி வழிகாட்டுதல் உள்ளிட்ட தலைப்புகளில் மாதந்தோறும் ஒவ்வொரு தலைப்பில் மாணவர்களுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சி கடந்த 3 ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது. இம்மாதம் 5ம் வகுப்பு மாணவர்களுக்கு "ஆரோக்கியமான பொழுதுபோக்குகள்" என்ற தலைப்பில் ஸ்பார்க் அமைப்பின் தன்னார்வலர்கள் வகுப்புகள் எடுத்து வருகிறார்கள்.

எப்பொழுது நாம் பொழுதுபோக்கை நாடுகிறோம்?
ஆரோக்கியமான உடம்பும் மனதுமே சந்தோசமான வாழ்க்கையை கொடுக்கும். அந்த வகையில் உடம்புக்கும் மனதுக்கும் மகிழ்ச்சி கொடுக்கிற எந்த ஒரு செயலும் ஆரோக்கியமான பொழுதுபோக்காக இருக்கும்.
நாம் எப்போது தனிமையில் உழல்கிறோமோ, எப்போது சலிப்புடன் காணப்படுகிறோமோ, எப்போதெல்லாம் மனஇறுக்கத்திற்கு ஆளாகிறோமோ அப்பொழுதெல்லாம் நாம் பொழுதுபோக்கை நாடுகிறோம். இந்த நேரங்களில் பொழுதுபோக்கு என்ற பெயரில் மொபைல் போனிலோ, அல்லது கம்ப்யூட்டர் விளையாட்டுகளிலோ, டிவி பார்ப்பதிலோ நாம் கூடுதல் நேரத்தை செலவிடுவோமேயானால் அது நமக்கு தூக்கம் தொடர்பான பிரச்சினைகளுக்கு வழிவகுத்து கொடுத்துவிடும்.

ஏன் நமக்கு பொழுதுபோக்கு தேவைப்படுகிறது?
- வழக்கமான தொடர் பணியில் இருந்து ஒரு இடைவெளி கிடைக்க
- நம்முடைய கற்பனைத்திறனை அதிகரிக்க
- மனஇறுக்கத்தை போக்க
- நம்மிடம் உள்ள திறமையை கண்டுகொள்ள
- உடலையும் மனதையும் ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள
- நம்முடைய வாழ்க்கைமுறையை உயர்த்திக்கொள்ள
- சமூகத்தோடு ஒன்றி இருக்க, ஒத்த கருத்துடைய நல்ல மனிதர்களுடைய தொடர்பு கிடைக்க

என்னென்ன பொழுதுபோக்குகளை நாம் முயற்சிக்கலாம்?
- தபால்தலைகள் சேகரிக்கலாம்
- நாணயங்கள் சேகரிக்கலாம்
- கடல் சிப்பி, சங்குகள் சேகரிக்கலாம்
- பறவைகளின் இறகுகள் சேகரிக்கலாம்
- விதவிதமான மணல் சேகரித்து கண்ணாடி குவளைகளில் அடுக்கடுக்காக போட்டு அலங்காரத்திற்கு வைக்கலாம்
- மரங்கள், செடிகளின் இலைகள் சேகரிக்கலாம்
- புத்தகம் வாசிக்கலாம்
- துணுக்குகள், கதைகள் எழுதலாம்
- வீட்டு தோட்டம் அமைத்து பராமரிக்கலாம்
- சமையல் கற்றுக்கொள்ளலாம்
- பறவைகள், வீடு விலங்குகள் வளர்க்கலாம்
- இசை கற்றுக்கொள்ளலாம்
- நிறைய பயணம் செய்யலாம்
- புகைப்படக்கலை கற்றுக்கொள்ளலாம்
- கதை சொல்ல கற்கலாம்
- பெயின்ட்டிங் மற்றும் படம் வரைய கற்றுக்கொள்ளலாம்
- மண்பாண்டங்கள் செய்ய கற்றுக்கொள்ளலாம்
- சமூக பணிகளை மேற்கொள்ளலாம்
- மூளைக்கு வேலை கொடுக்கும் போர்டு விளையாட்டுகளை கற்கலாம்
- வெளிப்புற விளையாட்டு விளையாடலாம்
- தையல், எம்பிராய்டரி, ஓரிகாமி போன்ற கை வேலைகளில் ஈடுபடலாம்.

பொழுதுபோக்கை எப்படி சுவாரஸ்யமாக்கலாம்?
- பொழுதுபோக்கு கூட்டாளி ஒருவரை மட்டும் சேர்த்துக்கொண்டு இருவரும் சேர்ந்து பொழுதுபோக்கில் ஈடுபடலாம்.
- ஒத்த பொழுதுபோக்கு கொண்டவர்களை ஒரு குழுவாக்கி அங்கு உரையாடலாம்
- உங்களுக்கு தெரிந்ததை மற்றவர்களுக்கு கற்றுக்கொடுக்கலாம்
- பொழுதுபோக்காக நீங்க உருவாக்கிய பொருட்களை விற்று சிறு லாபம் ஈட்டலாம்
- பொழுதுபோக்கை வேட்கையுடன் செய்ய வேண்டும். அழுத்தம் கொடுக்க கூடாது
- வழக்கத்தை தாண்டி மாத்தி யோசிக்க வேண்டும்.

ஆரோக்கியமான சமுதாயம்
மேற்சொன்ன விஷயங்களை கருத்தில் கொண்டு நாமும் நம் குழந்தைகளுக்கும் ஒரு நல்ல பொழுதுபோக்கு அம்சத்தை கற்றுக்கொடுத்தோம் எனில் அந்த பொழுதுபோக்கே அவர்ளுடைய முழு நேர தொழிலாக மாறவும் வாய்ப்பு இருக்கிறது. மொபைல் போனுக்குள் முடங்கிக் கிடைக்கும் குழந்தை பிராயத்தை வெளிய கொண்டுவந்து ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கவேண்டியது நம் அனைவருடைய கடமையாகும் என்று கூறியுள்ளார் பாலமுருகன்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
பாதாளத்தில் பாய்ந்த அமெரிக்கா! டிரம்ப் கொஞ்சம் கூட எதிர்பார்க்காத சம்பவம்.. மொத்தமா போச்சு! -
வாழ்க்கை துணை கிடைச்சிடுச்சு.. இவர்தான் ஜென்டில்மேன்! சர்ச்சைக்கு மத்தியில் திரிஷாவின் லேட்டஸ்ட் பதிவு -
தமிழ் புத்தாண்டு பலன்: குருவின் அருளால் மகர ராசிக்கு அடிக்கும் ஜாக்பாட்.. பிரகாசமாகப் போறீங்க -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. அடிக்கும் வெயிலுக்கு ஜில் அப்டேட் கொடுத்த வானிலை மையம்! -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
பெங்களூர் மாணவியிடம் கிட்ட நெருங்கிய ஆசிரியர்! அந்த பயங்கர காட்சி.. உடனே செருப்பை கழட்டி! என்னாச்சு -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர்












Click it and Unblock the Notifications