கிராமிய கலைகளுக்கு புத்துயிரூட்டும் கனிமொழி! தூத்துக்குடியில் 4 நாட்கள் 'நெய்தல் திருவிழா'!

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி: அழிவின் விளிம்பு நிலையில் உள்ள கிராமிய கலைகளுக்கு புத்துயிரூட்டும் விதமாக தூத்துக்குடியில் 4 நாட்களுக்கு நெய்தல் திருவிழாவை நடத்துகிறார் திமுக நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி.

தூத்துக்குடி வ.உ.சி.கல்லூரி மைதானத்தில் இன்று முதல் வரும் 10 -ஆம் தேதி வரை நடைபெறவிருக்கும் "நெய்தல்" தூத்துக்குடி கலை விழாவின் அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.

பறையாட்டம், ஜிக்காட்டம், புலியாட்டம், கோலாட்டம், தேவராட்டம், சிலம்பாட்டம், துடும்பாட்டம், நையாண்டி மேளம் என 4 நாட்களும் விதவிதமான கலை நிகழ்ச்சிகள் கண்களை கவரும் வகையில் நடைபெறவுள்ளன.

 நாள்: 07/07/2022,

நாள்: 07/07/2022,

தூத்துக்குடி மாணவர்களின் பறையாட்ட நிகழ்ச்சி,
நாதஸ்வரம் - நையாண்டி மேளம்,
தேன்மொழி ராஜேந்திரன் கரகம் - காவடி,
ஹாஜா மொய்தீன் குழுவினரின் சூஃபி பாடல்கள்,
டேவிட் குழுவினரின் பறையாட்டம்,
ஸ்டார் குழுவினரின் ஜிக்காட்டம்,
ராஜேந்திரன் குழுவினரின் புலியாட்டம்,
சின்னப்பொண்ணு குமார் இசைக்குழு.

நாள்: 08/07/2022

நாள்: 08/07/2022

மல்லிகா பிரகாஷ் குழுவினரின் கும்மி - கோலாட்டம்,
ஜெட்கிங் குழுவினரின் களரி,
முத்து மாரியப்பன் குழுவினரின் நையாண்டி - கரகம்,
தூத்துக்குடி CHOIR இசை,
குமார ராமன் குழுவினரின் தேவராட்டம்,
காளியப்பன் குழுவினரின் ஜிம்பளா மேளம்,
முத்தலிப் குழுவினரின் பொய்க்கால் குதிரை,
பாப்பம்பட்டி முனுசாமி குழுவினரின் பெரியமேளம்,
ஐந்திணை இசைக்குழு.

நாள்: 09/07/2022

நாள்: 09/07/2022

மகாமுனி குழுவினரின் சக்கைக் குச்சி ஆட்டம்,
சகா குழுவினரின் கிராமிய நிகழ்ச்சி,
கலைமாமணி முத்துலட்சுமி வில்லுப்பாட்டு,
காரமடை சுவாமிநாதன் குழுவினரின் துடும்பாட்டம்,
ஹாஜி ஜான் பாவா குழுவின் சிலம்பாட்டம்,
சமர் குழுவினரின் பறையாட்டம்,
ஓம் முத்துமாரி குழுவினரின் கலை நிகழ்ச்சி,
செந்தில் & ராஜலட்சுமி இசை நிகழ்ச்சி,
புரிசை துரைசாமி கண்ணப்பத் தம்பிராயன் கூத்து.

நாள்: 10/07/2022

நாள்: 10/07/2022

நிறைவு விழா, தூத்துக்குடி ராஜேந்திரன் குழுவினரின் சிலம்பாட்டம்,
சக்கரத்தாழ்வார் ஒயிலாட்டம்,
முத்து பெருமாள் குழுவினரின் கணியான் கூத்து,
காயல்பட்டினம் சூஃபி குழுவினரின் இசை நிகழ்ச்சி,
முருகசாமி குழுவினரின் பம்பை - கைச்சிலம்பம்.
அந்தோணிசாமி குழுவினரின் உவரி களியில், ராமர் குழுவினரின் பறையாட்டம்,
கிடாக்குழி மாரியம்மாள் & இளையராஜா இசை நிகழ்ச்சி.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+