கதவு திறந்து தான் இருக்கு.. நீங்களே வெளியே போயிருங்க! மூத்த நிர்வாகிகளுக்கு ‘டோஸ்’ விட்ட துரை வைகோ!

Subscribe to Oneindia Tamil

தூத்துக்குடி : இயக்கத்திற்காக உழைப்பவர்கள் மட்டுமே கட்சியில் இருக்க முடியும் மற்றவர்களுக்கு கதவு திறந்தே இருக்கிறது.. அவர்கள் எல்லாம் வெளியே செல்லலாம் என கட்சியினர் மத்தியிலேயே மதிமுக தலைமை நிலைய பொது செயலாளர் துரை வைகோ மிக ஆவேசமாகப் பேசியிருக்கிறார்.

தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி லட்சுமி திரையரங்கில் காலை முதல் காட்சியாக வைகோ குறித்த அவ்சர் மகன் துரை வைகோ தயாரித்துள்ள 'மாமனிதன் வைகோ' என்ற ஆவணப்படம் கட்சியினர் மற்றும்
பொதுமக்களுக்கு திரையிடப்பட்டது.

இத்திரைப்படத்தை மதிமுக தலைமை நிலைய பொது செயலாளர் துரை வைகோ மற்றும் நிர்வாகிகள் தொண்டர்கள் உள்ளிட்டோர் பங்கேற்று ஆவணத் திரைப்படத்தை கண்டுகளித்தனர்.

துரை வைகோ

துரை வைகோ

பின்னர் நிர்வாகிகள் தொண்டர்கள் மத்தியில் பேசிய துரை வைகோ," இந்த ஆவணத் திரைப்படம் உருவாக்கப்பட்ட விதம் தலைவருக்கே தெரியாது. தென் மாவட்டங்களில் தலைவர் வைகோ இருக்கும்பொழுது கட்சி வலுவாக இருந்தது.

இழந்ததை மீட்போம்

இழந்ததை மீட்போம்


பழையபடி இழந்ததை மீட்க வேண்டும் வரலாறு படைக்க வேண்டும் என்று தருணத்தில் கூறிக் கொள்ள விரும்புகிறேன். நான் பல திட்டங்கள் வைத்துள்ளேன். இயக்கத்தை எவ்வாறு கொண்டு செல்ல வேண்டும் இழந்ததை மீட்போம் வரலாறு படைப்போம் அதற்கு ஒரு செயல் திட்டம் வைத்துள்ளேன்..

மூத்த நிர்வாகிகள்

மூத்த நிர்வாகிகள்

நம்மால் முடியும் என்ற நம்பிக்கை இருக்கிறது.இந்த ஆவணப்படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது என்று தொண்டர்கள் நிர்வாகிகள் இணையதளங்கள் மற்றும் வீடு வீடாக எடுத்துச் சென்றுள்ளனர். இதை சாதாரண தொண்டர்கள் செய்யும் பொழுது ஏன் மூத்த நிர்வாகிகள் செய்ய தயங்குகின்றனர்.

வெளியே போங்க..

வெளியே போங்க..

இயக்கத்திற்கு உழைப்பவர்கள் மட்டுமே கட்சியில் இருக்க முடியும் மற்றவர்கள் கதவு திறந்தே உள்ளது. வெளியே செல்லலாம் என்று காட்டமாக பேசினார். மதிமுகவில் வந்த புதியில் மிகவும் சாது போல் இருந்த தலைவரின் மகன் இப்போது தலைவர் முன்னாடியே இவ்வளவு ஆவேசமாக பேசுகிறாரே என அங்கு வந்திருந்த மதிமுக தொண்டர்கள் பேசிக் கொண்டனர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+