தூத்துக்குடியில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை விலாங்கு மீன் ‘தமிழிகம்’.. அதிகாரிகள் வெளியிட்ட அறிவிப்பு
தூத்துக்குடி: அறிவியல் ரீதியாக 'ஆங்குலிபார்ம்ஸ்' என்று அழைக்கப்படும் விலாங்கு மீன்கள் 16 குடும்பங்களின் கீழ் 156 இனங்களில் 1,040 வகையை கொண்டு உள்ளது. இந்திய கடற்கரையில் 11 குடும்பங்களின் கீழ் 53 இனங்களைச் சேர்ந்த 146 வகையான விலாங்கு மீன்கள் ஆவணப்படுத்தப்பட்டு உள்ளன. இதில் தமிழ்நாட்டில் இருந்து 42 வகையான விலாங்கு மீன்கள் மட்டுமே ஆவணப்படுத்தப்பட்டிருக்கிறது.. தூத்துக்குடியில் கண்டறியப்பட்ட புதிய வகை விலாங்கு மீனுக்கு 'தமிழிகம்' என்று பெயர் சூட்டப்பட்டிருப்பதாக இந்திய வேளாண் ஆராய்ச்சி குழும இயக்குனர் (பொறுப்பு) அஜித்குமார் கூறினார்.
இதுகுறித்து இந்திய வேளாண் ஆராய்ச்சி குழும இயக்குனர் (பொறுப்பு) அஜித்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியுள்ளதாவது: "அறிவியல் ரீதியாக 'ஆங்குலிபார்ம்ஸ்' என்று அழைக்கப்படும் விலாங்கு மீன்கள் 16 குடும்பங்களின் கீழ் 156 இனங்களில் 1,040 வகையை கொண்டு உள்ளது. இந்திய கடற்கரையில் 11 குடும்பங்களின் கீழ் 53 இனங்களைச் சேர்ந்த 146 வகையான விலாங்கு மீன்கள் ஆவணப்படுத்தப்பட்டு உள்ளன. இதில் தமிழ்நாட்டில் இருந்து 42 வகையான விலாங்கு மீன்கள் மட்டுமே ஆவணப்படுத்தப்பட்டு உள்ளன.

இந்த நிலையில் இந்திய வேளாண் ஆராய்ச்சி குழுமத்தின் கீழ் இயங்கும் தேசிய மீன் மரபணு வள பணியகம், விலாங்கு மீன்கள் குறித்து ஆராய்ச்சி செய்து வருகிறது. அந்த வகையில் தூத்துக்குடி கடற்கரையில் ஒரு புதிய வகை விலாங்கு மீன் கண்டறியப்பட்டு உள்ளது. இந்த மீன் பிற விலாங்கு மீன் இனங்களில் இருந்து வேறுபட்டு உள்ளதா? என்று ஆராய்ச்சியாளர்கள் ஆய்வு மேற்கொண்டனர்.
இதற்காக விரிவான உருவவியல் பகுப்பாய்வு, எலும்புக்கூடு ரேடியோகிராபி மற்றும் மேம்பட்ட மூலக்கூறு குறிப்பான்கள் குறித்து ஆய்வு செய்தனர். இதில் தூத்துக்குடியில் கண்டறியப்பட்ட விலாங்கு மீன் மற்ற விலாங்கு மீன் இனங்களில் இருந்து வேறுபட்டு இருப்பது உறுதி செய்யப்பட்டது. இந்த மீனின் முன்புற கண் விளிம்பில் ஒற்றை வெள்ளை பட்டையுடன் தலையின் பின்புற மேற்பரப்பு உள்ளது. சிறிய கரும்புள்ளிகள் கீழ்தாடையில் உள்ளது. நீண்ட பற்கள் திட்டு, மேல்தாடையின் பாதி நீளத்தை அடைகிறது. 120 முதல் 129 முதுகெலும்புகளை கொண்டுள்ளது.
இதையடுத்து புதிய விலாங்கு மீன் இனத்தின் அடையாளம் வகைப்பிரித்தல் துறையில் உள்ள சர்வதேச நிபுணர்களால் சரிபார்க்கப்பட்டது. தொடர்ந்து மதிப்பாய்வு செய்யப்பட்ட சர்வதேச இதழில் வெளியிடப்பட்டது. இதனை தொடர்ந்து தூத்துக்குடியில் கண்டுபிடிக்கப்பட்ட புதிய வகை விலாங்கு மீனுக்கு, தமிழுடன் தொடர்புடையதாக 'தமிழிகம்' என்று பெயர் சூட்டப்பட்டு உள்ளது" இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications