அரசு பஸ்களில் தமிழ்நாடு எங்கே.. ஸ்டிக்கர் ஒட்டி தூத்துக்குடியில் போராட்டத்தில் ஈடுபட்ட நாதக
தூத்துக்குடி: தூத்துக்குடி புதிய பஸ் நிலையத்தில் நின்ற அரசு பேருந்துகளில் "தமிழ்நாடு என்ற பெயர் எங்கே?" என கேள்வி எழுப்பியும், அந்த பஸ்களில் தமிழ்நாடு என ஸ்டிக்கர் ஒட்டியும் நாம் தமிழர் கட்சியினர் நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். தூத்துக்குடி மட்டும் இன்றி மதுரையிலும் நாம் தமிழர் கட்சியின் போராட்டம் நடத்தினர்.
தமிழக அரசு சார்பில் இயக்கப்படும் பேருந்துகளில் தமிழ்நாடு என்ற பெயர் இல்லாமல் வெறுமனே அரசு போக்குவரத்து கழகம் என எழுதப்பட்டு உள்ளதை கண்டித்து பஸ்களில் தமிழ்நாடு என ஸ்டிக்கர் ஒட்டி போராட்டம் நடத்திய நாம் தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.

அரசு போக்குவரத்து கழகம்
தமிழக அரசு சார்பில் இயக்கப்படும் அனைத்து பஸ்களிலும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் என்று பஸ்களின் முன்பகுதிகளிலும், பக்கவாட்டு பகுதிகளிலும் எழுதப்பட்டு இருக்கும். ஆனால் கடந்த ஓராண்டுகளில் தமிழ்நாடு என்ற பெயர் மட்டும் நீக்கப்பட்டு, வெறுமனே அரசு போக்குவரத்து கழகம் என்று மாற்றப்பட்டு இருக்கிறது.
தமிழ்நாடு என்ற வார்த்தை இல்லாததை கண்டித்து நாம் தமிழர் கட்சியினர் சார்பில் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்தி வருகிறார்கள். தமிழ்நாடு என்ற பெயர் இல்லாத பஸ்களில் தமிழ்நாடு என்ற எழுத்தினை ஸ்டிக்கராக அரசு பஸ்களில் ஒட்டி போராட்டம் நடத்தி வருகின்றனர்.
தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி ஆர்ப்பாட்டம்
அந்த வகையில் நேற்று தூத்துக்குடி புதிய பஸ் நிலையத்தில் தமிழ்நாடு என்ற பெயர் ஸ்டிக்கரை அரசு பஸ்களில் ஒட்டினர். தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரம் சட்டமன்ற தொகுதி நாம் தமிழர் கட்சி சார்பில் இந்த போராட்டமானது நடத்தப்பட்டது. தூத்துக்குடி புதிய பஸ் நிலையத்தில் நேற்று அரசு போக்குவரத்து கழகம் என்று மட்டும் உள்ள அனைத்து பஸ்களிலும் தமிழ்நாடு என்ற வண்ண ஸ்டிக்கர் ஒட்டும் போராட்டம் நடத்தினர்.
போராட்டத்துக்கு மாநில ஒருங்கிணைப்பாளர் மா. மு. தமிழ்நேயன், அன்னலட்சுமி ஆகியோர் தலைமை தாங்கினர். மண்டல செயலாளர் இ. மாரிமுத்து முன்னிலை வகித்தார். அவர்கள் அரசு பஸ்களில் தமிழ்நாடு என்ற ஸ்டிக்கர்களை ஒட்டினர். தொடர்ந்து சிறிது நேரம் அரசு பஸ்களில் தமிழ்நாடு பெயர் நீக்கப்பட்டதை கண்டித்து கோஷம் எழுப்பியவாறு ஆர்ப்பாட்டம் செய்தனர்.
மதுரையிலும் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
இதையடுத்து ஆர்ப்பாட்டம் செய்த நாம் தமிழர் கட்சியினரை போலீசார் கைது செய்து அழைத்து சென்றனர். தூத்துக்குடி பஸ் நிலையம் மட்டும் இன்றி மதுரையிலும் தமிழ்நாடு என்ற பெயர் இல்லாத அரசு பஸ்களில் தமிழ்நாடு ஸ்டிக்கர் ஒட்டி ஆர்ப்பாட்டம் செய்துள்ளனர்.
ஏற்கனவே கர்நாடக மாநிலம் பெங்களூரில் தமிழக அரசு சார்பில் இயக்கப்படும் பேருந்துகளில் தமிழ்நாடு என்ற வாசகம் இல்லை என்று அங்குள்ள கர்நாடகத் தமிழ் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தினர் குற்றஞ்சாட்டி இதேபோன்று ஸ்டிக்கர் ஒட்டி போராட்டம் செய்தனர்.
கர்நாடக தமிழ் மக்கள்
பெங்களூர் வந்த தமிழ்நாடு அரசு பேருந்துகளில் எல்லாவற்றிலும் தமிழ்நாடு என்ற வாசகம் கொண்ட ஸ்டிக்கரை கர்நாடகத் தமிழ் மக்கள் பாதுகாப்பு இயக்கத்தினர் ஒட்டினர். அப்போது அவர்கள், "கேரளா, புதுச்சேரி, ஆந்திரா உள்ளிட்ட மற்ற மாநிலங்களில் அரசு சார்பில் இயக்கப்படும் பேருந்துகளில் எல்லாம் அந்தந்த மாநிலங்களின் பெயர்கள் இடம்பெற்று இருக்கும் போது தமிழக அரசு பஸ்களில் மட்டும் தமிழ்நாடு என்ற பெயர் ஏன் இல்லை என கேள்வி எழுப்பினர்.
தமிழ்நாடு பெயர் இல்லாததை கண்டித்து
வெறுமன மாநில விரைவு போக்குவரத்துக் கழகம் என்று மட்டுமே இருப்பதாக குற்றஞ்சாட்டிய அவர்கள் விரைவு போக்குவரத்துக் கழகத்திற்கு முன்பாக தமிழ்நாடு என்ற பெயரை ஸ்டிக்கராக ஒட்டினர். இது தொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவின. இந்த நிலையில் தான் இதே பாணியில் நாம் தமிழர் கட்சியினரும் தமிழகத்தில் உள்ள அரசு பஸ்களில் தமிழ்நாடு என்ற பெயர் இல்லாததை கண்டித்து போராட்டத்தினை தொடங்கியுள்ளார்கள்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications