பெட்ரோல் பங்க் ஊழியருக்கு அரிவாள் வெட்டு... பணம் கொள்ளை... 3 இளைஞர்கள் துணிகரம்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே பெட்ரோல் பங்க் ஊழியரை அரிவாளால் தாக்கிவிட்டு பணம் கொள்ளையடித்து சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
கழுகுமலை பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க்கில் பைக்கில் வந்த 3 பேர் 15 ஆயிரம் ரூபாயை பறித்து சென்றதாக போலீசாரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
கந்தசாமி என்பவரின் பெட்ரோல் பங்க்கில் நடைபெற்ற கொள்ளை சம்பவம் குறித்து சிசிடிவி காட்சிகள் அடிப்படையில் போலீசார் குற்றவாளிகளை தேடி வருகின்றனர்.

கோவில்பட்டி அருகே பெட்ரோல் பங்க்
தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே உள்ள கழுகுமலையை சேர்ந்தவர் கந்தசாமி. இவருக்கு சொந்தமான பெட்ரோல், டீசல் நிரப்பும் நிலையம் கழுகுமலை-சங்கரன்கோவில் சாலையில் அமைந்துள்ளது. இந்த பங்க்கில் நேற்றிரவு கழுகுமலையை சேர்ந்த அங்குராஜ் மற்றும் ஊழியர்கள் வழக்கம்போல் பணி செய்து கொண்டிருந்தனர்.

பல்சர் பைக்கில் வந்த இளைஞர்கள்
பின்னர் இரவு நேர உணவு சாப்பிட மற்ற ஊழியர்கள் சென்றுவிட்ட நிலையில் அங்குராஜ் என்பவர் மட்டும் தனி ஆளாக வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் நிரப்பி வந்துள்ளார். அப்போது சிகப்பு நிறம் கொண்ட ஒரு பல்சர் பைக்கில் 3 இளைஞர்கள் வந்தனர். தங்களுடைய வாகனத்தில் பெட்ரோல் நிரப்பி உள்ளனர். அப்போது அங்கு வேறு சில வாடிக்கையாளர்களும் இருந்ததால் அங்கிருந்து சென்றுவிட்டனர்.

அரிவாளால் தாக்கி பணம் பறிப்பு
பின்னர் சிறிது நேரம் கழித்து பெட்ரோல் பங்க்கில் ஆட்கள் இல்லை என்பதை உறுதிப்படுத்திய அவர்கள் மீண்டும் வந்தனர். அதில் ஒரு இளைஞர் தான் மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து பெட்ரோல் பங்க் ஊழியர் அங்குராஜை தாக்கினார். அதேசமயம் மற்றொரு இளைஞர் அங்கிருந்த பணப்பையை எடுத்துக்கொண்டார். அரிவாளால் தாக்கியதில் அங்குராஜ் பலத்த காயம் அடைந்தனர். பின்னர் இளைஞர்கள் பணம் மற்றும் பைக்குடன் அங்கிருந்து பறந்து சென்றனர்.

குற்றவாளிகளை தேடும் போலீஸ்
வலி தாங்க முடியாமல் அங்குராஜ் அலறிய சத்தம் கேட்டு மற்ற ஊழியர்கள் வந்துவிட்டனர். பின்னர் அங்குராஜ் கழுகுமலை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்த தகவல் பெட்ரோல் பங்க் உரிமையாளர் கந்தசாமிக்கு தெரிவிக்க அவர் காவல்துறைக்கு புகார் அளித்தார். தகவல் அறிந்து வந்த கழுகுமலை போலீசார் விசாரணை மேற்கொண்டனர். மேலும் பெட்ரோல் பங்க்கில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்து தப்பியோடிய 3 இளைஞர்களை தேடி வருகின்றனர்.
-
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு! -
அண்ணாமலை 'லீடர்' இயக்கம்.. நிமிடத்திற்கு 35 பேர், மொத்தம் 8 லட்சம் பேர் இணைந்தனர்.. அடுத்த விஜய் மொமென்ட்? -
பெரிய சதியை முறியடிச்சிட்டோம்.. திமுகவை வீழ்த்திய 2 மாஸ்டர்மைண்டுகள்.. இரவோடு இரவாக பறந்த போன் -
"பயத்தில் பேன்ட்டிலேயே சிறுநீர் போயிட்டேன்.." IPLஐ கைப்பற்ற தாவூத் போட்ட திட்டம்! லலித் மோடி பகீர்












Click it and Unblock the Notifications