தூத்துக்குடி அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

தேர்தல் களத்தில் ஸ்டெர்லைட்.. ஆலையை அனுமதிக்க மாட்டோம்.. முதல்முறையாக வாக்குறுதி அளித்த கனிமொழி!

திமுக ஆட்சியில் ஸ்டெர்லைட் போன்ற ஆலைகளுக்கு அனுமதி வழங்கமாட்டோம், அது போன்ற ஆலைகளை செயல்பட விடமாட்டோம் என்று திமுக ராஜ்யசபா எம்.பி கனிமொழி வாக்குறுதி அளித்துள்ளார்.

Google Oneindia Tamil News

தூத்துக்குடி: திமுக ஆட்சியில் ஸ்டெர்லைட் போன்ற ஆலைகளுக்கு அனுமதி வழங்கமாட்டோம், அது போன்ற ஆலைகளை செயல்பட விடமாட்டோம் என்று திமுக ராஜ்யசபா எம்.பி கனிமொழி வாக்குறுதி அளித்துள்ளார்.

தேர்தல் பிரச்சார களம் சூடுபிடித்து இருக்கிறது. தமிழகத்தில் ஏப்ரல் 18ம் தேதி தேர்தல் நடக்க உள்ளது. இன்னும் இதற்கு ஒரு மாதத்திற்கும் குறைவாகவே இருக்கிறது.

இந்த நிலையில் தூத்துக்குடி தொகுதி திமுக வேட்பாளராக திமுக ராஜ்யசபா எம்.பி கனிமொழி அறிவிக்கப்பட்டு இருக்கிறார். இவர் அங்கு பிரச்சாரம் செய்து வருகிறார்.

ஈரோடு வாக்காளர்களை ஈர்க்கப்போவது இவர்களில் யார்?

தேர்தல் அறிக்கை

தேர்தல் அறிக்கை

திமுக கட்சி கடந்த வாரம் தனது தேர்தல் அறிக்கையை வெளியிட்டது. இதில் நீட், கல்விக்கடன் உள்ளிட்ட தமிழகத்தின் அடிப்படை பிரச்சனைகள் குறித்து வாக்குறுதிகள் இருந்தது. சேலம் 8 வழி சாலைக்கு எதிராகவும் இதில் வாக்குறுதிகள் இடம்பெற்று இருந்தது.

காதுல மைக்கு.. மார்டனாக மாறிய எடப்பாடி பழனிச்சாமி.. ராயபுரத்தில் கலகல பிரச்சாரம்! காதுல மைக்கு.. மார்டனாக மாறிய எடப்பாடி பழனிச்சாமி.. ராயபுரத்தில் கலகல பிரச்சாரம்!

ஸ்டெர்லைட் இல்லை

ஸ்டெர்லைட் இல்லை

ஆனால் இதில் ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக எந்த வாக்குறுதியும் இல்லை. தமிழகத்தில் மிகப்பெரிய பிரச்சனைகளில் ஒன்றாக ஸ்டெர்லைட் பிரச்சனை மாறி இருக்கிறது. ஆனால் அதுகுறித்து திமுக அறிக்கையில் எதுவும் இல்லாதது பலருக்கும் அதிர்ச்சியை அளித்தது.

கனிமொழி பேச்சு

கனிமொழி பேச்சு

இந்த நிலையில் தூத்துக்குடியில் பிரச்சாரம் செய்த திமுக ராஜ்யசபா எம்.பி கனிமொழி, ஸ்டெர்லைட் ஆலையை நாங்கள் எப்போதும் அனுமதிக்க மாட்டோம். இந்த ஆலைக்கு எதிராக திமுக தொடர்ந்து செயல்படும். ஸ்டெர்லைட் மட்டுமல்ல சுற்றுசூழலுக்கு எதிராக செயல்படும் எந்த ஆலைக்கும் திமுக ஆட்சியில் அனுமதி வழங்கப்படாது.

ஆட்சி மாற்றம்

ஆட்சி மாற்றம்

இந்த சட்டசபை இடைத்தேர்தலுக்கு பின் மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்படலாம். அதேபோல் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்படும். மீண்டும் தமிழகத்தில் திமுக ஆட்சியில் அமரும். தூத்துக்குடி மக்களின் கோரிக்கைகள் வரிசையாக நிறைவேற்றப்படும் என்று கனிமொழி தனது பிரச்சாரத்தில் குறிப்பிட்டுள்ளார்.

English summary
We won't allow Sterlite in Tuticorin anymore says DMK MP Kanimozhi in Campaign.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X