பள்ளிகள் திறப்பு எப்போது.. 'தனியார் பள்ளி கல்வி கட்டணம்'.. முக்கிய தகவலை வெளியிட்ட அமைச்சர்!
தூத்துக்குடி: மருத்துவர்களிடமும், பெற்றோர்களிடமும் கருத்து கேட்ட பின்னரே பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். அப்படி பள்ளிகள் திறக்கப்படும் போது, பெற்றோர்கள் தைரியத்துடன் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முன்வரவேண்டும் என்றும் அமைச்சர் வேண்டுகோள் விடுத்தார்.
கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த ஆண்டு மார்ச் முதல் தொடர்ந்து பள்ளிகள் மூடப்பட்டுள்ளன. 9முதல் 12ம் வகுப்பு வரை மட்டும் கொரோனா தொற்று குறைந்து இருந்த கடந்த ஆண்டு நவம்பர் டிசம்பர் மற்றும் ஜனவரில் திறந்திருந்தன. அதுவும் விருப்பம் உள்ள மாணவர்கள் மட்டும் வரலாம் என்று அறிவிக்கப்பட்டு இருந்தது. கல்லூரிகளும் கிட்டத்தட்ட அதே காலக்கட்டத்தில் திறந்து இருந்தன.
ஆனால் கொரோனா இரண்டாது அலை பரவியதன் காரணமாக பள்ளிகள் திறக்கப்படவில்லை. கல்லூரிகளும் மீண்டும் மூடப்பட்டன, ஆன்லைன் வழியாகவே வகுப்புகள் நடந்தன. கல்லூரிகளுக்கும் ஆன்லைன் வழியாகவே தேர்வுகளும் நடந்தன- இந்நிலையில் கொரோனா இரண்டாவது அலை ஓய்ந்து வரும் நிலையில் ஆகஸ்ட் முதல் கல்லூரிகளில் முதலாம் ஆண்டு மாணவர் சேர்க்கை தொடங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பள்ளிகள் குறித்து இதுவரை எந்த முடிவும் எடுக்கப்படவிலலை.

மருத்துவர்கள் ஆலோசனை
இந்நிலையில் உலகப்புகழ்பெற்ற திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சுவாமி தரிசனம் செய்தார். அதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறும் போது, தமிழக முதல்வரின் நடவடிக்கைகளால் கொரோனா தொற்று குறைந்து வருகிறது. கொரோனா தொற்றின் மூன்றாம் கட்ட அலை பரவும் என எதிர்பார்க்கக் கூடிய நிலையில் மருத்துவர்களின் ஆலோசனை பெற்று பள்ளிகள் திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.

பள்ளிக்கு குழந்தைகள்
பள்ளிகள் திறக்கப்படும் போது பெற்றோர்கள் அச்சம் தவிர்த்து தைரியத்துடன் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப முன்வர வேண்டும். எனினும் மருத்துவர்களிடமும், பெற்றோர்களிடமும் கருத்து கேட்ட பின்னரே பள்ளிகளை திறப்பது குறித்து முடிவு எடுக்கப்படும்.

முதல்வர் நடவடிக்கை
தமிழகத்தில் நீட் தேர்வு நடத்தக்கூடாது என்ற கருத்துக்களே அதிகம் வருகிறது, வரும் சட்டமன்ற கூட்டத்தொடரில் முதல்வரின் முடிவுகளின் படியே நீட் தேர்வு குறித்த நடவடிக்கை இருக்கும்,

கல்வி கட்டணம்
தமிழகத்தில் நீதிமன்ற உத்தரவின்படி தனியார் பள்ளிகளில் தவணை முறையில் கட்டணம் செலுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 40% கட்டணம் முதல் தவணையாகவும் , 35% கட்டணம் இரண்டாம் தவணையாகவும் செலுத்துவதற்கான உத்தரவினை நடைமுறைப்படுத்த தனியார் பள்ளிகளுக்கு சுற்றரிக்கை அனுப்பப்படும்" இவ்வாறு அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்தார்.
-
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை












Click it and Unblock the Notifications