இம்சை கொடுக்கும் இ-பைக்ஸ்? புத்தம் புதிய ஓலா பைக்கை கொளுத்திய பிசியோதெரபிஸ்ட்! என்ன காரணம் தெரியுமா?
வேலூர் : வேலூரில் பிசியோதெரபிஸ்ட் ஒருவர் தான் வாங்கிய புத்தம் புதிய ஓலா பைக் பழுதாகி புகார் செய்தும், அதனை சரிசெய்ய நிர்வாகம் தரப்பில் ஆட்களை அனுப்பாததால் ஆத்திரத்தில் பைக்கை தீயிட்டு கொளுத்திய சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.
Recommended Video
கடந்த சில நாட்களுக்கு முன்னர் வேலூர் மாவட்டத்தில் நள்ளிரவில் சார்ஜ் ஏறிக் கொண்டிருந்த எலக்ட்ரிக் வாகன பேட்டரியில் இருந்து வெளியேறிய புகையால் தந்தை, மகள் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
தற்போது மின்சார இருசக்கர வாகனம் மற்றும் கார்களின் பயன்பாடுகளை மத்திய அரசும் மாநில அரசும் ஊக்குவித்து வரும் நிலையில் இதுபோன்ற விபத்துகள் மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.

இ பைக் பரிதாபங்கள்
வேலூர் மட்டுமல்ல இந்தியாவில் பல்வேறு பகுதிகளிலும் மின்சார இருசக்கர வாகனங்கள் தீப்பற்றிய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் ஹரியானா மாநிலம் குருகிராமில் சார்ஜ் போட்டிருந்த மின்சார வாகனம் தீப்பற்றியதில், 60 வயது முதியவர் உயிரிழந்தார். மும்பையின் அந்தேரி, ஹைதராபாத்திலும் கடந்தாண்டு மின் இருசக்கர வாகனங்கள் தீப்பற்றிய சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

ஓலா பைக்
மேலும் இன்று ஒருவர் தனது இ பைக்கை கழுதையில் கட்டி இழுத்துச் சென்ற சம்பவமும் நடந்தது. இந்நிலையில் முதல் விபத்து நடந்த வேலூரில் பிசியோதெரபிஸ்ட் ஒருவர் தான் வாங்கிய புத்தம் புதிய ஓலா பைக் பழுதாகி புகார் செய்தும், அதனை சரிசெய்ய நிர்வாகம் தரப்பில் ஆட்களை அனுப்பாததால் ஆத்திரத்தில் பைக்கை தீயிட்டு கொளுத்திய சம்பவம் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

அடிக்கடி பழுது
ஆம்பூர் அருகே பிசியோதெரபி நிபுணரான பிரித்திவிராஜ் ஓலா பைக் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த ஓலா பைக்கை குடியாத்தம் ஆர்டிஓ ஆபீஸ் க்கு ரிஜிஸ்ட்ரேஷன் செய்வதற்காக எடுத்துச் சென்றுள்ளார். பின்னர் அங்கிருந்து வந்த போது லட்சுமிபுரம் என்ற பகுதியில் பழுதாகி நின்று உள்ளது. இதுகுறித்து சர்வீஸ் சென்டருக்கு போன் செய்து சொல்லி இருக்கின்றார்.

இ பைக் எரிப்பு
2 மணி நேரமாகியும் அவர்கள் வராததால் ஆத்திரத்தில் அடிக்கடி பழுதாகி வரக்கூடிய நிலையில் அதனை சரிசெய்ய முடியாமல் ஆத்திரத்தில் ஓலா பைக் மீது பெட்ரோல் ஊற்றி எரித்துள்ளார். அதனுடைய காட்சி தற்போது சமூக வலைத்தளங்களில் அதிகளவில் பரவி வருகிறது இதனால் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றது. மேலும் சீன தயாரிப்பு பைக்குகளை வாங்க வேண்டாம் எனவும் அவர் கூறியுள்ளார்.
-
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications