ஆபாச வீடியோவை அழிக்கலையே! பஞ்சாயத்து முடிந்தும் தவெக நிர்வாகி ஷாக்.. டிஜிபி ஆபீஸ் ஓடிய ஆற்காடு பெண்

Subscribe to Oneindia Tamil

ராணிப்பேட்டை: ஆற்காடு தவெகவில் மகளிர் அணிப் பதவி தருவதாகக் கூறி இன்ஸ்டாகிராம் வீடியோ காலில் ஆபாசமாக பதிவெடுத்து மிரட்டிய ராணிப்பேட்டை மாவட்ட செயலாளர் விஜய்மோகன் மீது பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார். எம்எல்ஏ முன்னிலையில் வீடியோக்களை அழித்துவிடுவதாக சொல்லிவிட்டு, மீண்டும் போன் செய்து மிரட்டியதால் அதிர்ச்சியடைந்த அப்பெண், டிஜிபி அலுவலகத்திலும் புகார் தந்துள்ளார்.

சமீப நாட்களாகவே தவெகவில் அரங்கேறி வரும் ஒழுங்கு நடவடிக்கைகள் அரசியல் வட்டாரத்திலும், அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.. கட்சியின் கொள்கைகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் முரணாக செயல்படும் நபர்கள் மீது தவெக மேலிடம், சிறிதும் பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கைகளை உடனுக்குடன் எடுத்து வருகிறது.

Arcot Woman DGP Complaint

ராணிப்பேட்டை தவெக

இதோ இப்போது மீண்டும் ஒரு தவெக நிர்வாகி குற்றச்சாட்டில் சிக்கியிருப்பது , கட்சிக்குள்ளேயே அதிர்வலைகளை உண்டுபண்ணி வருகிறது.

ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியை சேர்ந்த 34 வயது இளம்பெண் ஒருவர், கடந்த 24ம் தேதி, ஆற்காடு நகர காவல் நிலையத்தில் தவெக மாவட்ட செயலாளர் விஜய்மோகன் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்திருந்தார்.

இந்நிலையில், மீண்டும் விஜய்மோகன் மீது பாதிக்கப்பட்ட பெண் டிஜிபி அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். சென்னை தலைமை செயலகத்தில் முதலமைச்சரின் தனிப்பிரிவில் கடந்த 22ம் தேதி, விரிவான புகார் ஒன்றை அளித்திருந்தார். அதன் சுருக்கம் இது.

ஆற்காடு - மாவட்ட செயலாளர்

"நான் கடந்த 10 மாதங்களுக்கு முன்பு தவெகவில் என்னை இணைத்து கொள்வதற்காக, அக்கட்சியின் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் விஜய்மோகனை தொலைபேசி வாயிலாக தொடர்பு கொண்டு பேசினேன். அப்போது எனக்கு கட்சியின் மகளிர் அணி பொறுப்பு வேண்டும் என்று கேட்டிருந்தேன்.

அதற்கு அவர், "தவெக பெண்களுக்கான கட்சி.. நம் கட்சியில் கண்டிப்பாக உங்களுக்கு முன்னுரிமை உண்டு" என்றால்ர.. சில நாட்கள் கழித்து நான் மீண்டும் அவரை தொடர்பு கொண்டு ஏதாவது விழாக்கள் செய்யும் போது என்னையும் அழையுங்கள், நான் கலந்து கொள்கிறேன் என்றேன். பிறகு அவர் என்னுடைய இன்ஸ்டாகிரம் பக்கத்தில் மெசேஜ் செய்ய ஆரம்பித்தார். நானும் அவரது கேள்விகளுக்கு இன்ஸ்டாகிராம் மூலம் பதில் அளித்து கொண்டு இருந்தேன்.

வீடியோ கால் - மிரட்டல்

அப்போது அவர், கட்சியில் பதவி என்பது அவ்வளவு சுலபம் கிடையாது. ஆனாலும், நான் உனக்காக செய்கிறேன்... உனக்கு கட்சியில் பதவி கொடுத்தால் நீ எனக்கு என்ன செய்வாய்? என்று கேட்டார். "நான் என்ன கொடுப்பது? என்னிடம் எதுவும் இல்லையே? என்றேன். அதற்கு அவர் ஒரு சில ஆசை வார்த்தைகள் கூறி எனக்கு வீடியோ கால் செய் அது போதும்" என்றார்.

அதன் பிறகு இன்ஸ்டா வீடியோ கால் செய்து, "அழகாக இருக்கிறாயே உனக்கு திருமணம் ஆகிவிட்டதா" என்று கேட்டு மெல்ல மெல்ல ஆபாசமாக பேச்சை ஆரம்பித்தார். எனக்காக நீ செய்தால், உனக்காக கட்சியில் பதவி தருகிறேன் என்றார்..

கட்சியில் பதவி சும்மா கிடைக்காது என்று சொல்லி, இன்ஸ்டாகிராம் வீடியோ காலில் வரவழைத்து ஆபாசமாகப் பேசுமாறு தூண்டினார். பிறகு அந்த வீடியோ காலை ஸ்கிரீன் ரெக்கார்டிங் செய்து வைத்துக்கொண்டு, அதை வைத்து மிரட்டி, முழு உடலையும் காட்டுமாறு கட்டாயப்படுத்தினார். வேறு வழியின்றி பயத்தில் வீடியோவில் காட்டியதை தொடர்ந்து ரெக்கார்ட் செய்து கொண்ட விஜய்மோகன், அதை வைத்துக்கொண்டு நேரில் வந்து உல்லாசத்திற்கு இணங்குமாறு மிரட்ட தொடங்கினார்.

எம்எல்ஏவிடம் முறையீடு

என்னுடைய பழைய வழக்கு ஒன்று நிலுவையில் உள்ளது. அதற்கு ஏதாவது நடிவடிக்கை எடுக்க கோரி நீங்கள் உதவி செய்ய முடியுமா? என்று கேட்டேன். அதற்கு அவர் கண்டிப்பாக அதை வழக்கறிஞருக்கு அனுப்பி நான் பார்த்து சொல்கிறேன் என்ற கூறி என்னிடம் கொஞ்சம் பணம் வாங்கி இருந்தார்.

பிறகு நாட்கள் செல்ல செல்ல என்னை மீண்டும் மிரட்ட தொடங்கினார். உன் வீடியோவை நான் வெளியிட்டு விடுவேன். நான் சொல்கின்ற இடத்திற்கு வந்து சேர் என்று மிரட்டினார். நான் அவருடன் எந்த இடத்திற்கும் செல்லவில்லை. பிறகு மற்றொரு நாளும் இதே போல மிரட்டினால்ர.. மாதவிடாய் காலத்தில் இருப்பதாகக் கூறியபோதும், அதையும் வீடியோ காலில் காட்ட சொல்லி ஸ்கிரீன் ரெக்கார்டிங் செய்து வைத்து மிரட்டினார்.

ஆபாச பேச்சு - பஞ்சாயத்து

இந்தத் தொடர் கெடுபிடிகளால் மன உளைச்சலுக்கு ஆளான நான், தற்கொலை முடிவுக்கு சென்று, பிறகு ராணிப்பேட்டை எம்.எல்.ஏ ஈஸ்வரப்பனை (தாஹிரா) நேரில் சந்தித்து முறையிட்டேன். எம்.எல்.ஏ முன்னிலையில் வீடியோக்களை அழித்துவிடுவதாக ஒப்புக்கொண்டார் விஜய்மோகன்.

ஆனால் 2 நாட்கள் கழித்து, மீண்டும் எனக்கு போன் செய்து, "நான் எதையும் அழிக்கவில்லை, நான் ஆளுங்கட்சி மாவட்டச் செயலாளர், உன்னை சும்மா விடமாட்டேன்" என்று ஆபாசமாகப் பேசி மிரட்டினார். அவரது நண்பர் ஜான்பிரிட்டோ என்பவரும் எனக்கு மிரட்டல் விடுத்தார்.

எனவே நான் கொடுத்த புகாரின் அடிப்படையில் தவெக மாவட்ட செயலாளர் விஜய்மோகனை கைது செய்து அவருடைய செல்போனில் இருக்கும் என்னுடைய ஆபாச வீடியோக்களை டெலிட் செய்து அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று புகாரில் கேட்டுக் கொண்டிருந்தார். .

டிஜிபி அலுவலகத்தில் புகார்

இந்த புகாரின்படி ஆற்காடு நகர போலீசார் விசாரணை நடத்தினார்கள்.. விசாரணையில் 34 வயது இளம் பெண்ணுக்கு தவெகவில் மகளிர் அணியில் பதவி தருவதாக ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் விஜய்மோகன் இன்ஸ்டா வீடியோ கால் மூலம் பேசி நிர்வாண போட்டோ மற்றும் வீடியோவை பதிவு செய்து மிரட்டி தன்னுடன் உல்லாசமாக இருக்க அழைத்தது உறுதியானது.

அதைதொடர்ந்து தவெக மாவட்ட செயலாளர் விஜய்மோகன் மீது பிஎஸ்எஸ் சட்டப்பிரிவு 75, 76, 77, 351(2) ஆகிய பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதனால் ஆத்திரமடைந்த மாவட்ட செயலாளர் விஜய்மோகன், புகார் அளித்த பெண்ணை தனது ஆதரவாளர்களை வைத்து மிரட்டி வருகிறாராம். போலீசார் வழக்கு பதிவு செய்தும், இதுநாள் வரை விஜய்மோகனை கைது செய்யவில்லையாம்.

இந்நிலையில், தன்னுடைய ஆபாச புகைப்படம் மற்றும் வீடியோ வைத்துள்ள தவெக மாவட்ட செயலாளரை கைது செய்ய ஆற்காடு நகர போலீசாருக்கு உத்தரவிட வேண்டும் என்று தமிழ்நாடு காவல்துறை டிஜிபி அலுவலகத்தில் நேற்று மீண்டும் கண்ணீர் மல்க பாதிக்கப்பட்ட பெண் புகார் அளித்துள்ளார்...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+