Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

யூ-டியூப் பார்த்து மனைவிக்கு பிரசவம்.. பரிதாபமாக உயிரிழந்த பச்சிளம் குழந்தை.. கணவர் கைது!

Subscribe to Oneindia Tamil

ராணிப்பேட்டை: நாட்டில் கொரோனா காலத்துக்கு பிறகே யூ-டியூப் மக்களிடத்தில் பெருமளவு பிரபலாகி விட்டது. பல நல்ல விஷயங்கள், செய்திகள் யூ-டியூப் வழியாக மக்களிடம் சென்றடைகிறது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை.

Recommended Video

    பகீர் சம்பவம்... யூடியூப் பார்த்து பிரசவம் பார்த்த கணவன்... குழந்தை பலியான சோகம்… மனைவி சீரியஸ்!

    ஆனால் இதே யூ-டியூப்பை பார்த்து தேவையில்லாத செயல்கள் செய்து வினையில் மாட்டிக் கொள்ளும் சம்பவம் அடிக்கடி நடந்து வருகிறது. இப்படிப்பட்ட ஒரு சோக சம்பவத்தைதான் பார்க்க போகிறோம்.

    கர்ப்பம் அடைந்த மனைவி

    கர்ப்பம் அடைந்த மனைவி

    ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் அடுத்த பனப்பாக்கம், நெடும்புலி கிராமத்தைச் சேர்ந்தவர் லோகநாதன் (32). மரச்செக்கு எண்ணெய் உற்பத்தி தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி கோமதி (28) இருவருக்கும் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்துள்ளது. கர்ப்பம் அடைந்த கோமதிக்கு கடந்த 13--ம் தேதி பிரசவம் பார்க்க மருத்துவர்கள் நாள் குறித்துள்ளனர்.

     யூ-டியூப் பார்த்து பிரசவம்

    யூ-டியூப் பார்த்து பிரசவம்

    மருத்துவர்கள் தேதி குறித்த நாளில் பிரசவ வலி ஏற்படமால் தள்ளி போன நிலையில் கடந்த 18-ஆம் தேதி மாலை கோமதிக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. அப்போது மனைவியை உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்து செல்லாமல் வேண்டாத வேலை பார்த்துள்ளார் லோகநாதன். அவர் தனது அக்கா கீதாவின் உதவியுடன் யூ-டியூபை பார்த்து மனைவிக்கு பிரசவம் பார்த்ததாக கூறப்படுகிறது.

    பரிதாபமாக உயிரிழந்த பச்சிளம் குழந்தை

    பரிதாபமாக உயிரிழந்த பச்சிளம் குழந்தை

    ஆனால் மனைவியின் வயிற்றிலிருந்த பச்சிளம் குழந்தை இறந்த நிலையில் பிறந்தது. தொடர்ந்து கோமதிக்கு அதிக அளவு இரத்தப் போக்கு ஏற்பட்டு மயங்கிய நிலையில், அவரை புன்னை அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்றுள்ளனர். அங்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இதன் பின்னர் மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு தலைமை மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.

    கணவர் கைது

    கணவர் கைது

    கோமதிக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. குழந்தை இறப்பு குறித்து மாவட்ட சுகாதாரத் துணை இயக்குனர் மணிமாறன் விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளார். இந்த சம்பவம் தொடர்பாக புன்னை ஆரம்ப சுகாதார மருத்துவ அலுவலர் மோகன், நெமிலி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அதன்பேரில் லோகநாதனிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணை முடிவில் லோகநாதனை போலீசார் அதிரடியாக கைது செய்தனர். யூ-டியூப்பை பார்த்து பிரசவம் செய்வது குற்றம் என்று தெரிந்தும் வேண்டுமென்றே அதனை செய்தல் என்பது தொடர்பாக லோகநாதன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். லோகநாதன் அக்கா கீதாவிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    பிரசவம் என்ன சமையலா?

    பிரசவம் என்ன சமையலா?

    தமிழகக்தில் யூ-டியூப் மூலம் இதுபோல் பிரசவம் பார்த்து பல உயிரிழப்புகள் ஏற்பட்டதை நாம் கண்கூடாக பார்த்து வரும் நிலையிலும் சிலர் இன்னும் திருந்துவதாக தெரியவில்லை. யூ-டியூப் பார்த்து செய்வதற்கு, பிரசவம் என்ன சமையலா? சரியாக சமைக்கவில்லை என்றால் தூக்கி போட்டு விடுவதற்கு? தாய்மை என்பது ஒரு வரம். ஆனால் அதனை முறையாக கையாளாமல் இப்படி தேவைற்ற செயலில் இறங்கியதால் பரிதாபமாக ஒரு உயிர் பிரிந்துள்ளது. யூ-டியூப் பார்த்து பிரசவம் பார்ப்பவர்கள் மீது மிக கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதும், இது தொடர்பாக போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்பதே அனைவரின் கோரிக்கையாக உள்ளது.

    More From
    Prev
    Next
    Notifications
    Settings
    Clear Notifications
    Notifications
    Use the toggle to switch on notifications
    • Block for 8 hours
    • Block for 12 hours
    • Block for 24 hours
    • Don't block
    Gender
    Select your Gender
    • Male
    • Female
    • Others
    Age
    Select your Age Range
    • Under 18
    • 18 to 25
    • 26 to 35
    • 36 to 45
    • 45 to 55
    • 55+