நீர்நிலைகளை அசுத்தப்படுத்தினால் கைது நடவடிக்கை! எனக்கு ஒரு போன் பண்ணுங்க! -அமைச்சர் துரைமுருகன்
வேலூர்: நீர்நிலைகளை அசுத்தப்படுத்தினால் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் மிகத் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
நீர்நிலைகளில் குப்பைகளை கொட்டினாலோ, அசுத்தம் செய்தாலோ தனக்கு ஒரு போன் அடித்தால் போதும் என அவர் பேசியுள்ளார்.
நீர்நிலைகளை மாசுபடுத்தினால் அதை அரசு வேடிக்கை பார்த்துக் கொண்டு இருக்காது என துரைமுருகன் எச்சரித்துள்ளார்.

அமைச்சர் துரைமுருகன்
தனது சொந்த அண்ணன் மகள் தற்கொலை செய்து கொண்ட நிலையிலும் தளராமல் கட்சிப்பணி, ஆட்சிப்பணி என பரபரப்பாக இயங்கி வருகிறார் துரைமுருகன். அந்த வகையில் வேலூர் மாவட்டம் காட்பாடியில் நேற்றிரவு பேசிய அவர், நீர்நிலைகளை பாதுகாக்க வேண்டிய அவசியம் குறித்து எடுத்துரைத்தார். நீர் நிலைகளை யார் மசுபடுத்தினாலும் அதை சகித்துக்கொள்ள முடியாது எனத் தெரிவித்துள்ளார்.

கைது நடவடிக்கை
சென்னையிலிருந்து வேலூருக்கு தாம் ரயிலில் வந்துகொண்டிருந்த போது மாவட்ட எல்லையில் தனியார் நிறுவனத்தின் குப்பைகள் மலைபோல் குவிக்கப்பட்டு வைத்திருந்ததை பார்த்ததாகவும், அந்த நிறுவனத்தின் உரிமையாளர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். நீர் நிலைகளில் குப்பைகள் கொட்டப்படுவதை பார்த்தால் தமக்கு ஒரு போன் அடித்தால் போதும் என்ற உறுதியை அமைச்சர் துரைமுருகன் அளித்துள்ளார்.

நீர் நிலைகள்
நீர் நிலைகளை பாதுகாப்பது தொடர்பாக உயர்நீதிமன்றம் பல்வேறு உத்தரவுகளை பிறப்பித்துள்ள அரசும் அதற்கான பணிகளை செய்து வருகிறது. நீர் வளத்துறை அமைச்சர் துரைமுருகன் நீர் நிலைகளை பாதுகாக்க கூடுதல் கவனம் செலுத்தி வருவது குறிப்பிடத்தக்கது. இதனிடையே நீர் நிலைகளை மாசுபடுத்துபவர்கள் பற்றி தனக்கு நேரடியாக போனில் புகார் அளிக்கலாம் என அவர் கூறியிருப்பது குறிப்பிடத்தக்கது.

வழக்கம் போல்
அண்ணன் மகள் தற்கொலையால் ஏற்கனவே திட்டமிடப்பட்ட நிகழ்ச்சியில் அமைச்சர் துரைமுருகன் கலந்துகொள்வாரோ கலந்து கொள்ளமாட்டோரோ என கட்சியினர் குழம்பிய நிலையில், எந்த மாறுதலும் செய்ய வேண்டாம் எனக் கூறி திட்டமிட்ட நிகழ்ச்சிகளில் திட்டமிட்டபடி அமைச்சர் துரைமுருகன் கலந்துகொண்டார்.
-
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
சோறு இல்லைனா விளையாட முடியுமா? விவசாயத்தை விட விளையாட்டு கஷ்டம் என்ற ஆதவ்விற்கு கஸ்தூரி ராஜா கேள்வி












Click it and Unblock the Notifications