எச்.ராஜா இப்படி பேசலாமா.. ஊரே ஒன்று திரண்டது.. போலீசில் பரபரப்பு புகார்
Recommended Video
வேலூர்: இஸ்லாமியர்களை தீவிரவாதிகள் என விமர்சித்த பாஜக தலைவர் எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்யக்கோரி ஆற்காடு நகர காவல் நிலையத்தில் பொதுமக்கள் சார்பில் புகார் மனு வழங்கப்பட்டுள்ளது.
வேலூர் மாவட்டம் ஆற்காடு அடுத்த மேல்விஷாரம் பகுதியில் வசிக்கும் இசுலாமியர்களை தீவிரவாதிகள் என்று கூறி விமர்சனம் செய்த, பாஜக பொதுச் செயலாளர் எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்யக்கோரி பொதுமக்கள் சார்பில் ஆற்காடு நகர காவல் நிலையத்தில் புகார் மனு அளிக்கப்பட்டது.

கடந்த 15ம் தேதியன்று தனியார் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த பாஜக தேசியப் பொதுச் செயலாளர் எச்.ராஜா, கமலின் பேச்சுக்கு கருத்து தெரிவிக்கும் விதமாக இஸ்லாமியர்கள் அதிகம் வசிக்கும் பகுதியில் இந்துக்கள் ஒடுக்கப்பட்டு கொத்தடிமைகளாக இருப்பதாகவும், குறிப்பாக மேல்விஷாரம் பகுதியில் முஸ்லீம்களின் ஆதிக்கத்தால் இந்துக்கள் தனி பஞ்சாயத்து கேட்டு போராடுவதாகவும் பேசியுள்ளார்.

இந்த கருத்துக்கு மேல்விஷாரம் பகுதியில் வசிக்கும் இஸ்லாமியர்களிடையே கடுமையான எதிர்ப்பு கிளம்பிய நிலையில், அவ்வாறு பேசிய எச்.ராஜா மீது வழக்கு பதிவு செய்ய வலியுறுத்தி பொதுமக்கள் சிலர் புகார் மனுவினை ஆற்காடு நகர காவல் நிலையத்தில் அளித்தனர்.

புகாரை பெற்ற ஆற்காடு நகர போலீசார் அதன் மீது சி.எஸ்.ஆர் அடிப்படையில், புகாரை பதிவு செய்து அதன் நகலை பொதுமக்களிடம் அளித்தனர்.
-
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பெரிய திமிங்கலம் வருதே.. தவெகவில் ஐக்கியமாகும் அண்ணாமலை? மோடி அரசை விமர்சிப்பது ‘இதனால்’ தானா? -
அமித் ஷா நோ சொன்னதால்.. கடைசி வரை ராகுல், சோனியாவை சந்திக்காமல் திரும்பிய விஜய்.. என்ன நடந்தது? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
கிளாம்பாக்கத்திற்கு பதில் கோயம்பேடு... ஆம்னி பஸ் போல் அரசு பஸ்சும் புறப்படுமா? அமைச்சர் தந்த பதில் -
கிரிக்கெட் கடவுளே சொல்லிட்டாரு.. வைபவ் சூர்யவன்ஷியின் பேட்டிங் ஸ்டைலை புகழ்ந்த சச்சின் டெண்டுல்கர்! -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
மரண ஓலம்.. 5 லட்சம் பேர் உயிரிழப்பு.. எங்கு திரும்பினாலும் கதறும் பொதுமக்கள்.. நிலைமை மோசம் -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
தவெகவில் இணையும் 2 அதிமுக எம்எல்ஏக்கள்! ஒருவர் சி.வி.சண்முகம்! இன்னொருவர்.. வெல்லமண்டி நடராஜன் தகவல் -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு












Click it and Unblock the Notifications