அமைச்சர் நிகழ்ச்சி முடிந்த சில நிமிடம்.. ஆட்சியர் அலுவலகத்தில் விழுந்த சிலாபு கல்! வேலூரில் பரபரப்பு
வேலூர்: வேலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தின் 3வது மாடியில் உள்ள வெளிப்புற சிலாப்புகள் இழுந்து விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த சம்பவம் நடந்ததற்கு சில நிமிடங்கள் முன்பு தான் அமைச்சர் விஜய் பாலாஜி நிகழ்ச்சி முடிந்து புறப்பட்டிருந்தார். இதனால் அதிர்ஷ்டவசமாக யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை.
வேலூர் சத்துவாச்சாரியில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தின் ஏ பிளாக் ஐந்து தளங்கள் கொண்ட கட்டடமாகும். இந்த கட்டடத்தில் மூன்றாவது மாடியின் வெளிப்புற சிலாப் இடிந்து கீழே விழுந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. மழை காலம் என்பதால், வெளிப்புற சிலாப்புகள் ஈரத்தில் ஊறி இடிந்து விழும் நிலை உள்ளது.

இதனிடையே அமைச்சர் விஜய் பாலாஜி பங்கேற்ற நிகழ்ச்சியில் ஏராளமானோர் பங்கேற்று இருந்தனர். அமைச்சர் விஜய் பாலாஜி புறப்பட்ட சில மணி நேரங்களிலேயே இந்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. அதிர்ஷ்டவசமாக மக்கள் யாருக்கும் எந்த காயமும் ஏற்படவில்லை. இதனால் ஒரு அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டுள்ளது.
இருப்பினும் மக்கள் அதிகம் வந்து செல்லும் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இப்படி வெளிப்புற சிலாப்புகள் இடிந்து விழுவதை தடுக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டிய தேவை உள்ளது. மழைக் காலம் என்பதால் கட்டடத்தில் உள்ள பல மாடிகளின் வெளிப்புற சிலாப்புகள் ஈரத்தில் ஊறி இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதனால் சேதம் ஏற்படும் முன் மாவட்ட நிர்வாகம் சீர் செய்ய வேண்டும் என்று கோரிக்கை எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications
