போச்சே.. ‛துணிவு’ பட டிக்கெட்டுகள் திருட்டு.. அஜித் ரசிகர்களுக்கு ஷாக்! மொத்தம் எவ்வளவு தெரியுமா?
வேலூர்: துணிவு திரைப்படம் சற்று நேரத்தில் வெளியாக உள்ள நிலையில் வேலூரில் உள்ள அஜித் தலைமை நற்பணி இயக்க அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த மொத்த டிக்கெட்டுகளையும் பூட்டை உடைத்து மர்மநபர்கள் திருடி சென்றனர். இந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களாக விஜய், அஜித் உள்ளனர். அதன்படி இயக்குனர் வம்சி பைடிப்பள்ளி இயக்கத்தில் நடிகர் விஜய் ‛வாரிசு' திரைப்படத்தில் நடித்துள்ளார். அதேபோல் இயக்குனர் எச்.வினோத் இயக்கிய ‛துணிவு' திரைப்படத்தில் நடிகர் அஜித் நடித்துள்ளார். இந்த 2 படங்களுக்கு பொங்கலை குறிவைத்து திரையிடப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
இது உறுதியும் செய்யப்பட்டது. அதன்படி நாளை துணிவு, வாரிசு திரைப்படங்கள் ஒன்றாக திரைக்கு வர உள்ளன. . இதற்கு முன்பு வீரம், ஜில்லா படங்கள் ஒன்றாக நேருக்கு நேர் மோதிய நிலையில் 8 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது விஜய், அஜித் படங்கள் ஒன்றாக திரைக்கு வருகின்றன. இதனால் விஜய், அஜித் ரசிகர்கள் உற்சாகத்தில் உள்ளனர். டிக்கெட் விற்பனை தமிழகம் முழுவதும் விறுவிறுப்பாக நடந்தது.

ஒன்றாக வெளியாகும் படங்கள்
மேலும் ,வாரிசு, துணிவு படங்கள் சார்ந்த விவாதங்கள் டிரெண்ட்டிங்கில் இடம்பிடித்து வருகின்றன. மேலும் வழக்கம்போல் விஜய், அஜித் ரசிகர்கள் இடையே கருத்து மோதல்கள் தொடங்கி உள்ளன. இந்நிலையில் இனு்னும் சற்று நேரத்தில் அஜித்தின் துணிவும், விஜயின் வாரிசு படமும் திரையரங்குகளில் வெளியாக உள்ளன. ரசிகர்கள் காட்சிகளாக இந்த படங்கள் திரையிடப்பட உள்ளன. தற்போதே அஜித், விஜய் ரசிகர்கள் தியேட்டர்கள் முன்பு குவிய தொடங்கி உள்ளனர்.

துணிவு டிக்கெட் விற்பனை
இந்நிலையில் தான் வேலூர் காகிதப்பட்டறை தெருவில் அஜித் தலைமை நற்பணி இயக்க அலுவலகம் உள்ளது. தலைவராக சுரேஷ்குமார் உள்ளார். செயலாளராக சண்முகம் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில் நற்பணி இயக்க அலுவலகத்தில் 'துணிவு' படத்தின் ரசிகர் மன்ற டிக்கெட் கடந்த இரண்டு நாட்களுக்கு மேலாக விற்பனை செய்யப்பட்டு வந்தது. நேற்று இரவு அலுவலகத்தை பூட்டிவிட்டு சுரேஷ் குமார் வீட்டுக்கு சென்றார்.

மொத்த டிக்கெட்டும் திருட்டு
இந்நிலையில் தான் இன்று காலை அலுவலகம் வந்தபோது பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது அதிர்ச்சி காத்திருந்தது. பொருட்கள் சிதறிக்கிடந்த நிலையில் அலுவலக மேஜையில் இருந்த 'துணிவு' படத்தின் 150 டிக்கெட்டுகளையும், லாக்கரில் இருந்த ரூ.16 ஆயிரத்தையும் யாரோ திருடி சென்றது தெரியவந்தது.

போலீஸ் விசாரணை
இதுகுறித்து அஜித் தலைமை நற்பணி மன்றம் தலைவர் சுரேஷ்குமார், வேலூர் வடக்கு காவல் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணையை துவங்கி உள்ளனர். முதற்கட்டமாக சிசிடிவி காட்சிகளை வைத்து டிக்கெட் மற்றும் பணத்தைத் திருடிச் சென்ற மர்ம நபர்களைத் தேடி வருகின்றனர்.இந்த சம்பவம் வேலூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
ஆனானப்பட்ட அமெரிக்காவுக்கே இந்த நிலைமையா..? அப்போ இந்தியா? -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
கோட்டைச்சாமி.. எந்திரி.. இப்போ நீதான் முதலமைச்சர்.. இன்னமும் பிரச்சாரமா? விஜய்யை கிண்டலடித்த திமுக












Click it and Unblock the Notifications