வேலூரில் தவெக மாவட்ட செயலாளர் மீது புகார்.. "ஆபாச வீடியோ இருக்கு"ன்னு மிரட்டினாரா? விக்கெட் உருளுதா?

Subscribe to Oneindia Tamil

வேலூர்: வேலூரில் இருந்து மீண்டும் ஒரு புதிய தலைவலி தவெக மேலிடத்திற்கு, தவெகவுக்கு கிளம்பியுள்ளது. தமிழக அரசியல் களத்தில் அடுத்தடுத்து அதிரடி முடிவுகளை எடுத்து வரும் நிலையில், இன்ஸ்டாகிராம் மெசேஜ், ஆபாச வீடியோ மிரட்டல் என போலீஸ் ஸ்டேஷன் வரை சென்றுள்ள புகாரால் வேலூர் தவெக வட்டாரமே உறைந்து போய் கிடக்கிறது. அப்படி என்ன நடந்தது? யார் இந்த பெண்? தவெக நிர்வாகி யார்?

சமீபகாலமாகவே தவெகவில் அரங்கேறி வரும் ஒழுங்கு நடவடிக்கைகள் அரசியல் வட்டாரத்திலும், அக்கட்சியின் தொண்டர்கள் மத்தியிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன. கட்சியின் கொள்கைகளுக்கும் கட்டுப்பாடுகளுக்கும் முரணாக செயல்படும் நபர்கள் மீது தவெக மேலிடம், கொஞ்சமும் பாரபட்சமின்றி கடுமையான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.

Vellore TVK Vijay Mohan Arcot Sexual Harassment Complaint

தவெக மேலிடம் கறார்

கடந்த வாரம், ஒப்பந்ததாரர் ஒருவரிடம் லஞ்சம் வாங்கியதாக சோஷியல் மீடியாவில் வீடியோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியதால் செங்கல்பட்டு கிழக்கு மாவட்டத் துணைச் செயலாளரும் மாம்பாக்கம் ஊராட்சி மன்றத் தலைவருமான வீராசாமியை சஸ்பெண்ட் செய்தது தவெக மேலிடம்.

அதேபோல, நீதிமன்றம் வரை பிரச்சனை சென்ற பெண் வழக்கறிஞர் ஞானசவுந்தரியையும் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்து தவெக தலைமை உடனடியாக நீக்கியது.

வேலூர் தவெக நிர்வாகி

இதோ இப்போது மீண்டும் ஒரு தவெக நிர்வாகி குற்றச்சாட்டில் சிக்கியிருப்பது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் ஆற்காடு பகுதியை சேர்ந்த 34 வயது இளம்பெண் ஒருவர், ஆற்காடு நகர காவல் நிலையத்தில் தவெக மாவட்ட செயலாளர் மீது பாலியல் துன்புறுத்தல் புகார் அளித்துள்ளார். அந்தப் புகாரில் குறிப்பிடப்பட்டுள்ள விவரங்கள் இதுதான்:

"கடந்த 10 மாதங்களுக்கு முன்பு தவெகவில் என்னை இணைத்துக் கொள்வதற்காக அந்த கட்சியின் ராணிப்பேட்டை மேற்கு மாவட்ட செயலாளர் விஜய் மோகனை செல்போனில் தொடர்பு கொண்டு மகளிர் அணி பொறுப்பு வழங்க கேட்டிருந்தேன்.

ஆற்காடு மாவட்ட செயலாளர்

சில நாட்கள் கழித்து விழாக்கள் நடத்தும்போது என்னை அழையுங்கள் பங்கேற்கிறேன் என்றேன். பிறகு அவர் என்னுடைய இன்ஸ்டா பக்கத்தில் மெசேஜ் செய்ய ஆரம்பித்தார். நானும் அவர் கேட்கும் கேள்விகளுக்கு, பதில் அளித்தேன்.

அப்போது அவர், "கட்சியில் பதவி என்பது அவ்வளவு சுலபமாக கொடுத்து விட முடியாது. நான் உனக்காக செய்கிறேன்" என்று என்னிடம் பேச ஆரம்பித்தார். தொடர்ந்து எனக்கு பாலியல் ரீதியாக தொல்லை கொடுக்க ஆரம்பித்தார். மேலும், ஆபாச வீடியோக்களை எடுத்து வைத்துக்கொண்டு என்னை மிரட்டி வருகிறார். இதுகுறித்து ராணிப்பேட்டை எம்எல்ஏ தாஹிராவிடம் தெரிவித்தேன். அவர் விஜய் மோகனை அழைத்து பேசி அனைத்தையும் டெலிட் செய்து விட்டு இத்துடன் பிரச்சனையை முடித்துக் கொள்ளுமாறு சொன்னார்.

விஜய மோகன் மீது பாலியல் புகார்

விஜய மோகனும், "நான் எல்லாவற்றையும் டெலிட் செய்து விட்டேன்" என்று சொல்லிவிட்டு சென்றுவிட்டார். 2 நாட்கள் கழித்து மறுபடியும் என்னை தொடர்பு கொண்டு,"நான் வீடியோ எதையும் டெலிட் செய்யவில்லை. எல்லாம் என்னிடம் இருக்கின்றன.. உன்னை சும்மா விடமாட்டேன், நான் ஆளுங்கட்சி மாவட்ட செயலாளர், என்னை ஒன்றும் செய்ய முடியாது" என்று ஆபாசமாக திட்டி மிரட்டினார்.

மேலும் யார் யாரோ என்னை திடீரென்று சந்தித்து மிரட்டி வருகிறார்கள். இதனால் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளானேன். ஆகவே தயவு செய்து நான் கொடுத்த புகாரின் அடிப்படையில் விஜய் மோகனை கைது செய்து அவருடைய செல்போனில் இருக்கும் என்னுடைய ஆபாச வீடியோக்களை டெலிட் செய்து அவர் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஆற்காடு போலீஸ் விசாரணை

இவர் என்னிடம் பேசிய அனைத்து இன்ஸ்டாகிராம் ஸ்கிரீன் சாட்டுகளும் இந்த புகார் உடன் இணைத்துள்ளேன். இந்த புகார் அளித்த பிறகு அவர் என்னை என்ன வேண்டுமானாலும் செய்யலாம். ஏனென்றால் அவர் ஆளுங்கட்சி மாவட்ட செயலாளர் என்பதால் என் உயிருக்கு ஏதேவது பாதிப்பு ஏற்பட்டால் எனக்கும் என் கணவர் மற்றும் என் குழந்தைகளுக்கும் தகுந்த பாதுகாப்பு வழங்குமாறு தாழ்மையுடன் கேட்டுக்கொள்கிறேன்" என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

இந்த புகாரை தொடர்ந்து, சிப்காட் ஆய்வாளர் மங்கையர்க்கரசி ஆற்காடு நகர காவல் நிலையத்திற்கு வருகை தந்து, சம்பந்தப்பட்ட பெண்ணிடம் சுமார் 4 மணி நேரத்திற்கு மேலாக தீவிர விசாரணை நடத்தினார்கள்..

இந்த விசாரணையைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அந்த பெண், "என்னை போல இன்னும் நிறைய பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள், எனவே போலீசார் விரைந்து தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.

பெண் அளித்துள்ள இந்த புகார் அதிர்வலைகளை தந்து வருகிறது.. கட்சியின் கண்ணியத்திற்குத் பங்கம் விளைவிக்கும் நபர்கள் மீது தவெக மேலிடம் ஏற்கனவே அதிரடி நீக்க நடவடிக்கைகளை எடுத்து வரும் சூழலில், இப்போது மாவட்ட செயலாளர் ஒருவர் மீது எழுந்துள்ள இந்த பாலியல் புகார் அரசியல் களத்தில் மேலும் பரபரப்பைக் கூட்டியுள்ளது...!!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+