கருத்தடை செய்தும் கர்ப்பம்.. அலட்சியமாக பதிலளித்த அரசு மருத்துவர்! ரவுண்ட் கட்டிய உறவினர்கள்! பரபர
திருப்பத்தூர்: திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் கருத்தடை செய்து கொண்ட பெண் மீண்டும் கர்ப்பம் அடைந்ததால் உறவினர்கள் கடும் அதிர்ச்சியடைந்துள்ளனர். இதுகுறித்து, அரசு மகப்பேறு மருத்துவரிடம் கேட்டபோது அலட்சியமாக பதில் அளித்ததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி, காதர்பேட்டை நியூ டெல்லி பகுதியை சேர்ந்தவர் ரியான் இவரது மனைவி ரேஷ்மாவுக்கு ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் என இரண்டு குழந்தைகள் உள்ளனர். இரண்டு குழந்தைகள் அறுவை சிகிச்சை மூலம் பிரசவித்ததாகவும் சொல்லப்படுகிறது.
இதனால் ரேஷ்மா இரண்டு குழந்தைகள் போதும் என்று கூறி கடந்த ஒரு ஆண்டுக்கு முன்பு வாணியம்பாடி அரசு மருத்துவமனையில் கருத்தடை (குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சை) செய்து கொண்டுள்ளார். இந்த நிலையில் கடந்த 3 நாட்களாக ரேஷ்மாவிற்கு வயிற்று வலி வந்துள்ளது.

உடனடியாக அவரை சிகிச்சைக்காக அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் வயிற்று வலி குறையாததால் அந்தப் பெண்ணிற்கு ஸ்கேன் செய்துள்ளனர். அப்போது அவர் மீண்டும் கர்ப்பம் அடைந்து குழந்தை அபார்ஷன் ஆகி விட்டதால் வயிற்று வலி வந்துள்ளது தெரியவந்தது. இதனால் அதிர்ச்சியடைந்த பெண்ணின் உறவினர்கள் உடனடியாக வாணியம்பாடி அரசு மருத்துவமனைக்கு சென்று அந்த பெண்ணுக்கு கருத்தடை செய்த மகப்பேறு மருத்துவர் தமிழ்செல்வியிடம் கேட்டபோது மருத்துவர் அலட்சியமாக பதில் அளித்ததாக கூறப்படுகிறது.
இதனால் ஆத்திரமடைந்த பெண்ணின் உறவினர்கள் வாணியம்பாடி அரசு மருத்துவமனையை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த போராட்டத்தின் காரணமாக மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவியது. இதுகுறித்து தகவல் அறிந்த நகர காவல் துறையினர் மற்றும் மருத்துவர்கள் வந்து பெண்ணின் உறவினர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி உடனடியாக அந்தப் பெண்ணுக்கு அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்று அறிவுறுத்தியதால் உடனடியாக அவரை கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதனால் மருத்துவமனை வளாகத்தில் பரபரப்பான சூழல் நிலவியது. இதுகுறித்து பெண்ணின் உறவினர்கள் கூறுகையில், இரண்டு குழந்தைகள் போதும் என்று கருத்தடை செய்த பெண்ணிற்கு மீண்டும் எப்படி கருவுற்றார் , அரசு மருத்துவமனையில் மருத்துவர்களை கடவுளாக நம்பி சிகிச்சை பெற வந்தால் இதுபோன்று மருத்துவர்கள் அலட்சியமாக இருப்பது மிகவும் அச்சத்தை ஏற்படுத்துவதாகவும், இது போன்று அலட்சியமாக செயல்படும் அரசு மருத்துவமனை மருத்துவர்கள் மீது தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர்.
-
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு! -
தோழமை கட்சிகள்.. காங்கிரஸ் பெயரை தவிர்த்த ஸ்டாலின்.. கோபம் உச்சத்தில்.. சத்தமின்றி சொன்ன மெசேஜ்! -
பழம் விழுந்தால் லாபம் எடப்பாடி பழனிசாமிக்கு.. அதிமுக வைத்த செக்கில் சிக்கிய கூட்டணி, திமுக விஐபிகள்! -
ஸ்டாலின் VS எடப்பாடி VS விஜய்.. எந்தெந்த ஜாதியினர் யாருக்கு ஆதரவு! News 18 சர்வே ரிசல்ட் இதோ -
சொத்து வைத்திருப்போர் அலர்ட்! 5 நாளில் இதை செய்யாவிட்டால் நில பத்திரப்பதிவில் லட்சக்கணக்கில் நஷ்டம்? -
"கோடம்பாக்கம் ஏரியா.. ஓட்டு கேட்டு வரியா".. விஜய் பாடலுக்கு நடனமாடிய அரசு பள்ளி தலைமையாசிரியை.. இப்போ வேலை போச்சே












Click it and Unblock the Notifications