தாலி கட்டியாச்சு.. நீதான் என் பொண்டாட்டி.. ஓடும் பஸ்சில்.. ரெடிமேட் தாலியை கட்டி அதிர வைத்த இளைஞர்!

ஓடும் பஸ்ஸில் பெண்ணுக்கு தாலி கட்டிய இளைஞர் கைதானார்

Subscribe to Oneindia Tamil

வேலூர்: "கழட்டாதே.. இனிமேல் நீ தான் என் பொண்டாட்டி.." என்று ஏற்கனவே 3 முடிச்சு போட்டு ரெடியாக பாக்கெட்டில் வைத்திருந்த தாலியை எடுத்து ஓடும் பஸ்ஸில் உட்கார்ந்திருந்த பெண்ணின் கழுத்தில் போட்டுவிட்டார் ஜெகன்.. அதிர்ச்சி அடைந்த பயணிகள் ஜெகனை பிடித்து தர்மஅடி கொடுத்து ஸ்டேஷனில் கொண்டு போய் ஒப்படைத்தனர்.

திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் சான்றோர் குப்பம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஜெகன். 27 வயதாகிறது.. அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பேக்டரியில் வேலை பார்த்து வருகிறார்.

ஆம்பூர் பகுதியை சார்ந்த கோடீஸ்வரி என்ற பெண் ஜெகனுடன் காலேஜில் ஒன்றாக படித்தவர்.. அப்போதிருந்து கோடீஸ்வரி மீது ஜெகனுக்கு காதல் இருந்து வருகிறது. இது 5 வருட ஒரு தலைக்காதல் என்று தெரிகிறது.

இளைஞர்

இளைஞர்

தினமும், ஆம்பூரில் இருந்து கோடீஸ்வரி எங்கே போனாலும் பின்னாடியே ஃபாலோ செய்து வருவதையே வேலையாக வைத்திருந்து இருக்கிறார்.. காதலை வெளிப்படுத்தியும் கோடீஸ்வரி அதனை ஏற்கவில்லை என தெரிகிறது. இதனிடையே, கல்லூரி முடித்த கோடீஸ்வரி, வாணியம்பாடி கச்சேரி சாலையில் உள்ள கெமிக்கல் பேக்டரியில் வேலைக்கு சேர்ந்தார்.. உடன் வேலை பார்க்கும் ஒரு இளைஞரை காதலித்துள்ளார்.. இரு வீட்டிலும் விஷயம் தெரியவும், நேற்றுதான் இருவருக்கும் கல்யாணம் நிச்சயமாகியுள்ளது.

ஜெகன்

ஜெகன்

இந்நிலையில், இன்று காலை வழக்கம்போல் வேலைக்கு பஸ்ஸில் ஏறி வந்துள்ளார் கோடீஸ்வரி.. ஜெகனும் பின்னாடியே வந்து அந்த பஸ்ஸில் ஏறிவிட்டார். கோடீஸ்வரியிடம் திரும்பவும் தனது காதலை ஏற்றுக் கொள்ளும்படி சொன்னார். ஆனால், கோடீஸ்வரி காதலை ஏற்க மறுத்து, நிச்சயதார்த்தம் நடந்ததையும் தெரிவித்துள்ளார். ஆனாலும் ஜெகன் விடுவதாக இல்லை. கோடீஸ்வரியிடம் தன் காதலை எப்படியாவது ஏற்றுக் கொள்... ப்ளீஸ் என கெஞ்சி உள்ளார்.

மூன்று முடிச்சு

மூன்று முடிச்சு

வாணியம்பாடி பஸ் ஸ்டேண்ட் அருகே வந்ததும், அப்போது பாக்கெட்டில் வைத்திருந்த தாலியை எடுத்து அந்த பெண்ணின் கழுத்தில் திடீரென போட்டுவிட்டார். அந்த தாலி கயிற்றில் ஏற்கனவே 3 முடிச்சு போட்டு ரெடியாகவே கொண்டு வந்திருந்தார் ஜெகன். இதனால் பதறி போன அந்த பெண், அந்த தாலியை கழட்ட போனார்.. உடனே ஜெகன்.. "கழட்டாதே.. இனி நீதான் என் பொண்டாட்டி.." என்றார்.

கைது - விசாரணை

கைது - விசாரணை

ஆனால் கோடீஸ்வரி கத்தி கூச்சல் போட்டதில், பஸ்ஸில் இருந்த மற்ற பயணிகள் ஜெகனை சுற்றி வளைத்து பிடித்து கொண்டு சரமாரியாக அடித்தனர். பின்னர் பஸ் ஸ்டாண்டில் இருந்த போலீஸ் ஸ்டேஷனில் ஜெகனை ஒப்படைத்தனர்... விசாரணையும் நடந்து வருகிறது. ஓடும் பஸ்ஸில் திடீரென இளம்பெண்ணுக்கு தாலி கட்டிய இந்த சம்பவம் வாணியம்பாடியில் பரபரப்பாகி உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+