ஊட்டச்சத்துக் குறைபாடு.. திமுக தலைவர் கருணாநிதி மருத்துவமனையில் அனுமதி- வீடியோ

Posted By:
Subscribe to Oneindia Tamil

சென்னை: நீர்ச்சத்து மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு காரணமாக திமுக தலைவர் கருணாநிதி சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். கருணாநிதி உடல்நிலை குறித்து காவேரி மருத்துவமனை செயல் இயக்குனர் அரவிந்தன் செல்வராஜ் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், "திமுக தலைவர் கருணாநிதி ஊட்டச்சத்து மற்றும் நீர்ச்சத்து குறைபாட்டால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். டாக்டர்கள் குழு அவருக்கு சிகிச்சை அளித்து வருகின்றனர். அவரது உடல்நிலை சீராக உள்ளது. இன்னும் சில நாட்கள் அவர் மருத்துவமனையில் இருப்பார்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதமாகவே உடல்நலக் குறைவால் அவதிப்பட்டு வந்த கருணாநிதி, ஒரு மாதத்திற்கும் மேலாக அறிவாலயம் வரவில்லை. பொது நிகழ்ச்சி யிலும் கலந்து கொள்ள வில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

வாழ்க்கைத் துணையை தேடுகிறீர்களா? தமிழ் மேட்ரிமோனியில் - பதிவு இலவசம்!

English summary
After suffering from drug allergy and remaining indoors for more than a month, DMK chief M Karunanidhi was hospitalised today here in Chennai. He was admitted at Kauvery Hospital in Alwarpet just before 6 AM in the morning.
Please Wait while comments are loading...