வண்ண விளக்குளால் ஜொலிக்கும் அரசு பேருந்து... வசூல் அதிகரிப்பால் அதிகாரிகள் ஹேப்பி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையிலிருந்து, திருப்பூர் மாவட்டத்திற்கு இயக்கப்படும் அரசு விரைவு பேருந்து ஒன்றில் எல்.இ.டி டிவி, 6 டிராக் மியூசிக் சிஸ்டம் மற்றும் கண்ணை கவரும் ஒளி விளக்குகளால் அலங்காரம் என தனியார் பேருந்துக்கு இணையாக ஜொலிக்கிறது. இதனால் இந்தப் பேருந்தில் ஏற பயணிகள் ஆர்வம் காட்டுகின்றனர். மேலும் இந்தப் பராமரிப்பு மூலம் தினசரி வசூலும் அதிகரித்துள்ளதாம். ஓட்டுநர்கள் மற்றும் நடத்துனர்களின் சொந்த முயற்சியால் இந்த மாற்றம் நிகழ்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications