தஞ்சாவூர் தேர்தல்... 26,000 ஓட்டுகள் வித்தியாசத்தில் அதிமுக வேட்பாளர் ரங்கசாமி வெற்றி- வீடியோ
Subscribe to Oneindia Tamil
தஞ்சாவூர்: கடந்த மே மாதம் நடைபெற்ற சட்டசபைத் தேர்தலின் போது பணப்பட்டுவாடா புகார் கடுமையாக எழுந்ததையடுத்து, தஞ்சாவூரில் தேர்தல் ரத்து செய்யப்பட்டது. இதனையடுத்து, கடந்த 19ம் தேதி அங்கு தேர்தல் நடைபெற்றது. இந்தத் தேர்தலில் அதிமுக சார்பில் ரங்கசாமியும் திமுக சார்பில் அஞ்சுகம் பூபதியும் போட்டியிட்டனர். தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. ஆரம்பம் முதலே அதிமுக வேட்பாளர் ரங்கசாமி முன்னிலை வகித்து வந்தார். வாக்கு எண்ணிக்கையின் முடிவில் ரங்கசாமி, அஞ்சுகம் பூபதியை விட 26 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். தேர்தல் அதிகாரிகளிடம் வெற்றிச் சான்றிதழைப் பெற்ற ரங்கசாமி, தனக்கு வாக்களித்த மக்களுக்கு நன்றிகளைத் தெரிவித்தார். மேலும், இது முதல்வர் ஜெயலலிதாவின் திட்டங்களுக்கு கிடைத்த வெற்றி என அவர் கூறினார்.












Click it and Unblock the Notifications