விழுப்புரமே விக்கித்தது.. சங்கீதா செஞ்ச வேலைய பாத்தீங்களா.. அதுவும் ஆபீசில்.. கரெக்ட்டா வந்த ஆபீசர்
விழுப்புரம்: சங்கீதா செய்த காரியத்தை பார்த்து விழுப்புரமே வாயடைத்து போயுள்ளது.. இத்தனைக்கும் சங்கீதா ஒரு அரசு அதிகாரி ஆவார்.
விழுப்புரம் மாவட்டம் அரியலூர்திருக்கை பகுதியை சேர்ந்தவர் அன்னம்மாள்.. 70 வயதாகிறது.. இவருடைய கணவர் அருளாந்தின் அப்பா மாணிக்கம், அதாவது மாமனார், கடந்த 30 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்..
அருளாந்தின் அண்ணன் சவரிமுத்து 25 வருடங்களுக்கு முன்பு இறந்துவிட்டார்.. ஒருவர் இறந்துவிட்டால், அவர்களது இறப்பினை பதிவு செய்ய வேண்டும் என்ற விவரம்கூட அன்னம்மாளுக்கு தெரியவில்லை.. அதனால், அப்படியே விட்டுவிட்டார்.

சங்கீதா: இப்போது, பூர்வீக சொத்து தொடர்பாக அவர்கள் 2 பேரின் இறப்பு சான்றிதழும் அன்னம்மாளுக்கு தேவைப்படுகிறது.. அதனால், கடந்த சில நாட்களுக்கு முன்பு அரியலூர்திருக்கை கிராம நிர்வாக அலுவலராக பணியாற்றி வரும் சங்கீதா என்பவரை அணுகினார்.. விழுப்புரத்தை சேர்ந்த சுரேஷ்குமாரின் மனைவிதான் சங்கீதா.. 48 வயதாகிறது..
மாணிக்கம், சவரிமுத்து ஆகியோரின் இறப்பு விவரத்தை ஆன்லைனில் பதிவு செய்து வழங்குவதற்காக, ஒவ்வொரு மனுவுக்கும் ரூ.500 வீதம் மொத்தம் ரூ.1,000 லஞ்சமாக தர வேண்டும் என்று அன்னம்மாளிடம் சங்கீதா கேட்டதாக தெரிகிறது. இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த அன்னம்மாள், தான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர் என்றும், தன்னிடம் அவ்வளவு காசு இல்லை என்றும் சொல்லியிருக்கிறார்.
அத்துடன், எப்படியாவது இறப்பு சான்றிதழ் தரும்படி சங்கீதாவிடம் கெஞ்சியுள்ளார்.. ஆனால், சங்கீதாவோ, எதையுமே காதில் போட்டுக் கொள்ளவில்லை.. பணம் கொடுத்தால் மட்டுமே ஆன்லைனில் பதிவு செய்து, இறப்பு சான்றிதழ் தர முடியும் என்று கறாராக சொல்லிவிட்டார்.. அதுமட்டுமல்ல, அந்த லஞ்ச பணத்தை, தான் வேலை பார்க்கும் ஆபீசுக்கே வந்து தன்னிடம் கொடுக்கும்படியும் கண்டிஷன் போட்டுள்ளார்.
கண்காணிப்பு புகார்: இதனால் என்ன செய்வதென்று தெரியாமல் விழித்தார் அன்னம்மாள். இதேசமயம், சங்கீதாவுக்கு லஞ்சம் தரவும் விருப்பமில்லை. அதனால், விழுப்புரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலகத்தில் புகார் தந்துவிட்டார்..
இதையடுத்து, விழுப்புரம் லஞ்ச ஒழிப்புத்துறை டிஎஸ்பி பால்சுதர் தலைமையிலான போலீசார், ரசாயனம் தடவிய ரூ.1,000 பணத்தை அன்னம்மாளிடம் தந்து, விஏஓவிடம் கொடுக்கும்படி சொல்லியிருக்கிறார்கள். மறுநாளே அன்னம்மாள், சங்கீதாவிடம் ரசாயனம் தடவிய பணத்தை லஞ்சமாக கொடுத்தார்.. விஏஓ சங்கீதாவும் அதனை பெற்றுக்கொண்டார்.. அப்போது, அங்கு மறைந்திருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கையும் களவுமாக விஏஓ சங்கீதாவை பிடித்து கைது செய்தனர்.

விழுப்புரம் போலீஸ்: அவரை விழுப்புரம் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு பிரிவு அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை செய்து வருகின்றனர்.. வறுமையில் வாடும் அன்னம்மாளிடமே 1000 ரூபாய் வாங்கிய சங்கீதா, இதற்கு முன்பு எத்தனை பேரிடம் லஞ்சம் பெற்றிருக்கிறார் என்று தெரியவில்லை.. விசாரணை முழுமையாக நடத்தி முடிக்கப்பட்டால்தான், உண்மைகள் வெளியே வரும்.
சில மாதங்களுக்கு முன்பு, வீடியோ ஒன்று வெளியாகியிருந்தது.. அந்த வீடியோவிலும் சங்கீதா லஞ்சம் வாங்குவது பதிவாகியிருந்தது.. அந்த பகுதியை சேர்ந்த ஒருவர், ஏரியில் மண் எடுப்பதற்கு ரூ.5,000 லஞ்சம் கொடுத்ததாக கூறப்படுகிறது.. இப்போது சங்கீதா கைதாகி உள்ள நிலையில், இந்த வீடியோவும் வைரலாகி மேலும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.
-
“மக்களை தெருநாய்களாக சித்தரித்த உங்களுக்கும் ஓட்டு போடுவாங்க”.. ராகவா லாரன்ஸுக்கு சேரன் பதில்! -
தவெக அமைச்சரவையில் இருந்து எந்நேரத்திலும் வெளியேறுவோம்.. திருமாவளவன் கருத்துக்கு வன்னி அரசு விளக்கம் -
"கலைஞர் டிவி, ஜெயா டிவிக்கு அடுத்ததாக 'வெற்றி டிவி'... ஜூன் 22-ல் லோகோ வெளியீடு? விஜய்யின் அடுத்த மாஸ்டர் மூவ் இதுதானா?" -
தவெகவில் சேர்ந்த 10 நாட்களிலேயே அரசியலில் இருந்தே விலகிய முன்னாள் MLA கோவிந்தசாமி.. பின்னணி என்ன? -
Vijay Sangeetha Divorce: சிஎம்-ஆவே இருந்தாலும் நேரில் தான் வரனும்.. வீடியோ கான்ஃப்ரன்ஸ் கோரிக்கையை நிராகரித்த நீதிமன்றம் -
6400 கி.மீ ரஷ்யா, 7200 கி.மீ ஆப்பிரிக்காவை விட நீளமானது என்று கூகுள் மேப்ஸ் எப்படி நம்ப வைக்கிறது? -
மூட்டை முடிச்சை கட்டிக்கிட்டு பெங்களூர், ஹைதராபாத் போக வேண்டியதுதான்.. பின்னோக்கி செல்லும் சென்னை! -
விஜய் வெற்றி செல்லாது? திருச்சி கிழக்கு எம்எல்ஏவாக என்னையே அறிவிக்கணும்.. ஹைகோர்ட்டில் இனிகோ மனு -
“செல்போனால் ஒரு மாநிலமே போய்விட்டது” - நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனின் பேச்சால் சலசலப்பு! -
மகளிர் உரிமைத் தொகை ரூ.2,500! புதிய விதிமுறைகள் தயார்? ஜூன் மாதப் பட்டியலில் யாருக்கெல்லாம் வாய்ப்பு -
சி.வி.சண்முகத்துக்கு பல்வேறு பொறுப்புகளை பிச்சை போட்டதே எடப்பாடி பழனிசாமிதான்: அக்ரி கிருஷ்ணமூர்த்தி -
மனோஜ் மனைவி தனியாக வாழ காரணம் இதுதான்.. "இதை” நம்பி தான் இருக்கிறாங்க! பாரதிராஜா தம்பி உருக்கம்












Click it and Unblock the Notifications