மது போதையில் பெற்ற மகளையே பலாத்காரம் செய்த கொடூர தந்தை.. 3 மாத கர்ப்பம்!
விழுப்புரம்: மது போதையில் பெற்ற மகளையே மிரட்டி தொடர்ச்சியாக பாலியல் வன்கொடுமை செய்து, கர்ப்பமாக்கிய தந்தை அதிரடியாக கைது செய்யப்பட்டார்.
விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூரை அடுத்திருக்கும் டி.எடையார் கிராமத்தைச் சேர்ந்தவர் கலியபெருமாள். 42 வயதாகும் இவர் மரம் ஏறும் கூலித் தொழிலாளி.
இவரது மகள் அதே ஊரில் உள்ள பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறார். தற்போது பள்ளிகள் திறக்கப்படாத நிலையில் வீட்டில் ஆன்லைன் கல்வி படித்து வருகிறார்.

வீட்டில் சிறுமி
தாயும் கூலி வேலைக்குச் செல்பவர் என்பதால் பெரும்பாலான நேரம் சிறுமி வீட்டில் தனியாகவே இருந்திருக்கிறார். கடந்த 3 மாதங்களாக சிறுமிக்கு மாதவிடாய் பிரச்னை இருந்ததால் அவரது தாய் மருத்துவரிடம் அழைத்துச் சென்றிருக்கிறார். அங்கே பரிசோதித்து பார்த்தபோது சிறுமி 3 மாதம் கர்ப்பமாக இருப்பது தெரியவந்தது.

மதுபோதை
அதுகுறித்து விசாரித்தபோது, மூன்று மாதத்திற்கு முன்பு மதுபோதையில் வீட்டுக்கு வந்த தந்தை தன்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதன்பிறகு பலமுறை தன்னை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்ததாகவும் சிறுமி கூறியதைக் கேட்டு அதிர்ச்சியில் உறைந்திருக்கிறார் அவரது தாய்.

தந்தை கைது
தொடர்ந்து விழுப்புரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அவர் அளித்த புகாரின் அடிப்படையில், கலிவரதனை போக்ஸோ வழக்கின் கீழ் கைது செய்த போலீஸார் மருத்துவப் பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றிருக்கின்றனர்.

பலாத்காரம்
தந்தையே பெற்ற மகளை மிரட்டி பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது போன்றோருக்கு அதிகபட்ச தண்டனையை வழங்கிட வேண்டும் அப்பகுதி மக்கள் என கேட்டுக் கொண்டனர். சிறுமியின் எதிர்காலத்தை நினைத்து தாய் கதறிய சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.
-
விஸ்வரூபம் எடுத்த ஆந்திர விவகாரத்தில் ட்விஸ்ட்.. விஜய்-க்கு நிம்மதி! 'உல்சான்' ஆக மாறும் தூத்துக்குடி -
மதிமுக எம்எல்ஏக்களின் ராஜினாமா முடிவு.. குமுறிய துரை வைகோ.. பிடி கொடுக்காத விஜய் -
வங்கியில் இருக்கும் மக்களின் தங்கத்தை டார்கெட் செய்யும் மத்திய அரசு? அவசர அவசரமாக அனுப்பப்பட்ட உத்தரவு! -
கிழிந்தது இரட்டை இலை.. அறிவாலயத்துக்கு பறக்கும் விராலிமலை விஜயபாஸ்கர்! சேர்ந்ததும் இந்த பொறுப்பா? -
இனி அதிகபட்சமே ஆண்டுக்கு 4 சிலிண்டர் தான்.. எக்ஸ்ட்ரா சிலிண்டருக்கு ரூ.300 அதிகமாம்.. வெளியான தகவல் -
"தவெகவா? அண்ணாமலையா? தனி கட்சியா?"... லாரன்ஸ் அரசியல் என்ட்ரி சஸ்பென்ஸ்.. அந்தணன் சொன்ன சீக்ரெட் -
தலைமை செயலகத்தில் மர நாற்காலிக்கு பதிலாக சொகுசு நாற்காலிக்கு மாறிய விஜய்! விலையை கேட்டால் அதிருதே! -
"திருமணமாகாதவர்கள் உறவு கொள்வது தப்பில்லை! அதை தடுக்க சட்டத்தில் இடமில்லை!" உச்ச நீதிமன்றம் தீர்ப்பு -
வளர்த்த கடா..மார்பில் பாய்ந்ததடா! முதுகில் குத்திய கூட்டணி! மு.க.ஸ்டாலின் எடுத்த மிகப் பெரிய முடிவு! -
அதிமுக எம்எல்ஏக்கள் தகுதி நீக்க நடவடிக்கை.. சபாநாயகருக்கு அப்பாவு எழுப்பிய மூன்று கேள்விகள் -
டிரான்ஸ்பார்மர் முறைகேடு வழக்கு.. செந்தில் பாலாஜி மீது இறுகும் பிடி.. வழக்குப்பதிவு செய்தது சிபிஐ! -
ஆட்சிக்கு வந்த 1 மாதத்திற்குள்.. இன்ஸ்ட்டா முழுக்க தவெக எதிர்ப்பு அலை.. அப்படியே தலைகீழாக இருக்கே!












Click it and Unblock the Notifications