விக்கிரவாண்டி இடைத் தேர்தல்: வேட்பு மனுத் தாக்கல் இன்று தொடக்கம்.. அதிமுக, பாஜக வேட்பாளர்கள் யார்?
விழுப்புரம்: விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் தொடங்குகிறது. இந்த இடைத்தேர்தலுக்கு திமுக மட்டும் வேட்பாளரை அறிவித்த நிலையில் அதிமுக, பாஜக வேட்பாளர்கள் குறித்த எதிர்பார்ப்பு நீடிக்கிறது.
விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.வாக இருந்தவர் நா.புகழேந்தி. இவர் கடந்த ஏப்ரல் மாதம் 6-ந் தேதி திடீர் உடல்நலக் குறைவால் காலமானார். இதனால் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது.

இதனையடுத்து விக்கிரவாண்டி சட்டசபை தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கை ஜூன் 10-ந் தேதி இந்திய தேர்தல் ஆணையத்தால் வெளியிடப்பட்டது. இத்தொகுதியில் ஜூலை 10-ந் தேதி இடைத் தேர்தல் நடைபெற உள்ளது.
விக்கிரவாண்டி தொகுதி சட்டசபை தேர்தல் ஜூலை 10-ல் நடைபெறும் நிலையில் இன்று முதல் (ஜூன் 14) வேட்பு மனுத் தாக்கல் தொடங்குகிறது. இந்த இடைத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இன்று முதல் விக்கிரவாண்டி வட்டாட்சியர் அலுவலகத்தில் வேட்பு மனுத் தாக்கல் செய்யலாம். இதனையடுத்து வட்டாட்சியர் அலுவலகத்தில் அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.
ஜூன் 16 ஞாயிற்றுக்கிழமை, ஜூன் 17-ந் தேதி பக்ரீத் என்பதால் இந்த இரு நாட்களிலும் வேட்பு மனுக்கள் பெறப்படாது. ஜூன் 21-ந் தேதி வரை வேட்பு மனுக்களைத் தாக்கல் செய்யலாம். ஜூன் 24-ந் தேதி வேட்பு மனுக்கள் மீது பரிசீலனை நடைபெறும். ஜூன் 26-ந் தேதி வேட்பு மனுக்களை வாபஸ் பெற கடைசி நாள். இதையடுத்து இறுதி வேட்பாளர் பட்டியல் வெளியாகும். ஜூலை 10-ந் தேதி வாக்குப் பதிவு நடத்தப்பட்டு ஜூலை 13-ல் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் வெளியிடப்படும்.
விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக அன்னியூர் சிவா அறிவிக்கப்பட்டுள்ளார். அத்துடன் திமுக சார்பில் 9 அமைச்சர்களைக் கொண்ட தேர்தல் பணிக்குழுவும் அறிவீக்கப்பட்டுள்ளது.
அதேநேரத்தில் விக்கிரவாண்டி சட்டசபை தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக, பாஜக கூட்டணி வேட்பாளர்கள் இன்னமும் அறிவிக்கப்படவில்லை. அதிமுக வேட்பாளர் விரைவில் அறிவிக்கப்படுவார் என அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அறிவித்துள்ளார். பாஜக கூட்டணியில் அமமுக, பாமக போட்டியிட தீவிரம் காட்டுகின்றன.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications