செஞ்சி சிறுமி! குற்றவாளி ராஜதுரை பகீர் வாக்குமூலம்! கூட்டாளி அரவிந்தை காட்டுக்கு தூக்கி சென்ற CBCID

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி தம்பதியின் 7 வயது மகள் ஹேமலதா (ஹேமாவதி) மாயமான சம்பவம் 23 நாட்களைத் தொட்டுவிட்டது. கடந்த அக்டோபர் 11 அன்று இரவு தனது பிறந்தநாளைக் கேக் வெட்டிக் கொண்டாடிவிட்டு, தாய் மற்றும் பாட்டியின் அருகில் படுத்து உறங்கிய குழந்தை நள்ளிரவில் திடீரெனக் காணாமல் போனார்.

உள்ளூர் சத்யமங்கலம் போலீசார் 10 நாட்கள் தேடியும் எந்தத் துப்பும் கிடைக்காததால் வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. அரசுப் பள்ளியிலேயே முகாம் அலுவலகம் அமைத்து, தாய் பவானி, பாட்டி, தந்தை வடிவேலு, தப்பியோடிய சாமியார், விஷம் குடித்த மாஜி ஊராட்சி மன்ற தலைவர் எனப் பல முனைகளில் விசாரணை சுழன்றடித்தது.

இந்நிலையில், சிறையில் இருந்து வெளியே எடுக்கப்பட்ட சரித்திரப் பதிவேடு குற்றவாளி ராஜதுரை அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், அவரது நெருங்கிய கூட்டாளியான அரவிந்த் என்ற இளைஞரை சிபிசிஐடி போலீசார் சுற்றிவளைத்துத் தீவிர விசாரணை வளையத்திற்குள் கொண்டுவந்துள்ளனர்.

Gingee Missing Girl Case

யார் இந்த ராஜதுரை? வழக்கில் சிக்கியது எப்படி?

ஆலம்பூண்டி கிராமத்திற்கு மிக அருகில் உள்ள பரடந்தாங்கல் கிராமத்தைச் சேர்ந்தவர் ராஜதுரை. இவர் மீது ஏற்கனவே பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு, வழிப்பறி, பெண்களுக்கு எதிரான குற்றங்கள் உள்ளிட்ட பல குற்ற வழக்குகள் நிலுவையில் உள்ளன. காவல் துறையின் குற்றப் பதிவேட்டில் உள்ளூர் சரித்திரப் பதிவேடு குற்றவாளியாகக் குறிக்கப்பட்டுள்ள இவர், வேறு ஒரு குற்ற வழக்கில் சிறையில் அடைக்கப்பட்டிருந்தார்.

சிறுமி மாயமான அன்று நள்ளிரவு நேரத்தில் ஆலம்பூண்டி சுற்றுவட்டார செல்போன் கோபுர சிக்னல்களை ஆய்வு செய்தபோது, ராஜதுரை பயன்படுத்தியதாகக் கூறப்படும் 4 போலி சிம் கார்டுகளின் நடமாட்டம் மற்றும் சந்தேகத்திற்கிடமான அழைப்புகள் சிக்கின. மேலும், குழந்தை மாயமான அதே நள்ளிரவில் சிறுமியின் வீட்டின் அருகிலேயே ராஜதுரை தரப்பினர் மது அருந்தியதாகவும், வடிவேலுவின் வீட்டில் நகை மற்றும் பணம் இருக்கும் தகவலைப் பேசி கொள்ளையடிக்கத் திட்டம் தீட்டியதாகவும் தகவல்கள் வெளிவந்தன. இதையடுத்து நீதிமன்ற அனுமதியுடன் சிறையில் இருந்து ராஜதுரையை வெளியே கொண்டுவந்து சிபிசிஐடி தீவிரமாக விசாரித்தது.

சீனுக்குள் வந்த புதிய புள்ளி 'அரவிந்த்': பின்னணி என்ன?

சிறையில் இருந்து அழைத்து வரப்பட்ட ராஜதுரையிடம் சத்யமங்கலம் காவல் நிலையத்திலும், சிறுமி படித்த பள்ளி வளாகத்திலும் வைத்து அதிகாரிகள் துருவித் துருவி விசாரணை நடத்தினர். அந்த விசாரணையின்போது, அதே பகுதியைச் சேர்ந்த ஆடு மேய்க்கும் தொழிலாளியான அரவிந்த் என்ற தனது நண்பரின் பெயரை ராஜதுரை போலீசாரிடம் உளறியதாகக் கூறப்படுகிறது.

அரவிந்த், ராஜதுரையுடன் நீண்டகாலமாக நெருங்கிய தொடர்பில் இருந்தவர். கிராமப்புற பகுதிகள், மேய்ச்சல் நிலங்கள், புதர்கள் மற்றும் ஆள் நடமாட்டமில்லாத காட்டுப் பாதைகளைத் துல்லியமாக அறிந்தவர்.

குழந்தை மாயமான அக்டோபர் 11 நள்ளிரவு மற்றும் 12 அதிகாலை நேரத்தில் அரவிந்த் எங்கு இருந்தார் ராஜதுரையுடன் சேர்ந்து நள்ளிரவு மது விருந்தில் இவர் பங்கேற்றாரா? குழந்தையைக் கடத்துவதற்கோ அல்லது வீட்டை நோட்டமிடுவதற்கோ உள்ளூர் நெட்வொர்க்காக அரவிந்த் செயல்பட்டாரா?

போன்ற கடுமையான சந்தேகங்களின் அடிப்படையில் அரவிந்தை சிபிசிஐடி அதிகாரிகள் அதிரடியாகப் பிடித்து விசாரணைக்கு உட்படுத்தினர்.

காட்டுப்பகுதிக்கு நேரில் அழைத்துச் சென்று தீவிர விசாரணை

அரவிந்திடம் நடத்தப்பட்ட முதற்கட்ட விசாரணையைத் தொடர்ந்து, ஆலம்பூண்டியைச் சுற்றியுள்ள அடர்ந்த காட்டுப் பகுதி மற்றும் பாறை இடுக்குகளுக்கு அவரை சிபிசிஐடி அதிகாரிகள் நேற்று நேரில் அழைத்துச் சென்றனர்.

செஞ்சி வனத்துறை அதிகாரிகளுடன் இணைந்து நடத்தப்படும் இந்தத் தேடுதல் வேட்டையில், அரவிந்திடம் பல மணி நேரம் கள ஆய்வு விசாரணை நடத்தப்பட்டது:

ஆடு மேய்க்கச் செல்லும் அடர்ந்த காட்டுப் பாதைகளில் ஏதேனும் அசாதாரண நடமாட்டங்கள் அல்லது புதைக்கப்பட்ட தடயங்கள் தென்பட்டதா? நள்ளிரவில் சிறுமியைத் தூக்கிச் சென்ற கும்பல், ஊரை விட்டு வெளியேற இந்தக் காட்டு வழிகளைப் பயன்படுத்தியதா? ராஜதுரைக்கும் இவருக்கும் இடையே அந்த குறிப்பிட்ட நள்ளிரவு நேரத்தில் என்னென்ன பேச்சுவார்த்தைகள் நடந்தன?

காட்டுப் பகுதியில் வைத்து அதிகாரிகள் கேட்ட அடுக்கடுக்கான கேள்விகளுக்கு அரவிந்த் அளித்த பதில்களை சிபிசிஐடி தனிப்படை விரிவாகப் பதிவு செய்துள்ளது.

13 லாரி டிரைவர்கள் & தேநீர் கடைகளில் குற்றவாளிகள் படம்: சிபிசிஐடி வலை

ஒருபுறம் அரவிந்திடம் காட்டுக்குள் விசாரணை நடந்து வரும் அதே வேளையில்.. நடுப்பட்டு, ரெட்டிபாளையம், சிக்காமேடு உள்ளிட்ட கிராமங்களில் வசிக்கும் 13 நேஷனல் பெர்மிட் லாரி ஓட்டுநர்களிடமும் சிபிசிஐடி போலீசார் தங்கள் விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர். நள்ளிரவில் குழந்தையைக் கடத்திச் சென்று நெடுஞ்சாலை வழியாக லாரிகளில் ஏற்றி வெளிமாநிலங்களுக்குக் கொண்டு சென்றிருக்கலாமோ என்ற கோணத்திலும் தீவிர விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

மேலும், உள்ளூர் குற்றவாளிகளின் புகைப்படங்களை செஞ்சி மற்றும் ஆலம்பூண்டி சுற்றுவட்டார தேநீர் கடைகள் மற்றும் உணவகங்களில் பொதுமக்களிடம் காட்டி, "சம்பவத்தன்று இவர்களை யாரேனும் பார்த்தீர்களா?" என அடையாள அணிவகுப்பு போல தகவல்களைச் சேகரித்து வருகின்றனர்.

மர்ம முடிச்சுகள் அவிழும் தருணம்

குடும்பத்திற்குள் நிலவிய முரண்பாடுகள் ஒருபுறம் இருக்க, சரித்திரப் பதிவேடு குற்றவாளி ராஜதுரை மற்றும் அவரது கூட்டாளி அரவிந்த் ஆகியோரின் நுழைவு வழக்கைக் கொள்ளை அல்லது ஆட்கடத்தல் என்ற அதிபயங்கர வெளிப்புறக் குற்றக் கோணத்தை நோக்கி நகர்த்தியுள்ளது.

காட்டுக்குள் அழைத்துச் சென்று அரவிந்திடம் பெறப்பட்ட வாக்குமூலங்கள் மற்றும் டவர் டம்ப் அழைப்புப் பதிவுகள் மூலம், 23 நாட்களாக ஒரு துப்பும் இல்லாமல் நீடிக்கும் செஞ்சி சிறுமி ஹேமலதா மாயமான வழக்கின் உண்மையான குற்றவாளிகள் மிக விரைவில் கூண்டோடு சிக்குவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+