செஞ்சி சிறுமி மாயம்.. நள்ளிரவு 12 மணிக்கு வீட்டின் முன் சென்ற வாகனம்.. சிக்கும் வில்லுப்பாட்டு குழு?

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் ஆலம்பூண்டி குளக்கரை தெருவைச் சேர்ந்த கூலித் தொழிலாளி வடிவேலு - பவானி தம்பதியின் 7 வயது மகள் ஹேமலதா (ஹேமாவதி) மாயமான சம்பவம் 25 நாட்களைக் கடந்து தமிழகத்தையே உலுக்கிக் கொண்டிருக்கிறது. கடந்த அக்டோபர் 11 அன்று இரவு தனது பிறந்தநாளைக் கொண்டாடிவிட்டு, தாய் மற்றும் பாட்டியின் அருகில் படுத்து உறங்கிய குழந்தை, நள்ளிரவில் மர்மமான முறையில் காணாமல் போனார்.

உள்ளூர் போலீசார் 10 நாட்கள் தேடியும் எந்தத் துப்பும் கிடைக்காததால் வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. பள்ளி முகாம் அலுவலகத்தில் பெற்றோர் விசாரணை, பழைய குற்றவாளி ராஜதுரை, அவரது கூட்டாளி அரவிந்த், சாமியார், சுடுகாடுகள், 14 நேஷனல் பெர்மிட் லாரிகள், நாமக்கல் மற்றும் கடலூர் உளவுத்துறை வேட்டை எனப் பல முனைகளில் விசாரணை சுழன்றடித்தது.

villupuram gingee

இந்நிலையில், குழந்தை மாயமான அதே நள்ளிரவு நேரத்தில் சிறுமியின் வீட்டின் முன்பாகச் சென்ற வாகனங்களை ஆய்வு செய்ததில் ஒரு புதிய முக்கியத் தகவல் சிக்கியுள்ளது. அதனடிப்படையில், நடுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த வில்லுப்பாட்டு கலைக்குழுவினரை சிபிசிஐடி போலீசார் நேரில் வரவழைத்துத் தீவிர விசாரணை நடத்தியுள்ளனர்.

நள்ளிரவு 12.45 மணியளவில் கடந்த வாகனங்கள்

சிறுமி மாயமான அக்டோபர் 11 நள்ளிரவு மற்றும் 12 அதிகாலை நேரத்தில் ஆலம்பூண்டி குளக்கரை தெருவில் என்னென்ன வாகனங்கள் சென்றன என்பதை அறிய, சுற்றுவட்டார சிசிடிவி பதிவுகள் மற்றும் செல்போன் கோபுர சிக்னல்களை அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

அதில், நள்ளிரவு சுமார் 12:45 மணியளவில் சிறுமியின் வீட்டின் முன்பாக உள்ள மண் சாலை வழியாக டாடா ஏஸ் (Tata Ace) மினி வேன் மற்றும் சில இருசக்கர வாகனங்கள் சென்றுள்ளது பதிவாகியிருந்தது. அந்த வாகனங்கள் யாருடையது என்று விசாரித்தபோது, அவை பக்கத்து கிராமமான நடுப்பட்டுவைச் சேர்ந்த வில்லுப்பாட்டு கலைஞர்களின் வாகனங்கள் என்பது தெரியவந்தது.

திருக்கோவிலூர் - கண்டாச்சிபுரம் கோவில் நிகழ்ச்சி

நடுப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த அந்த வில்லுப்பாட்டுக் குழுவினர், திருக்கோவிலூர் மற்றும் கண்டாச்சிபுரம் சுற்றுவட்டாரத்தில் உள்ள கோவில் ஒன்றில் நள்ளிரவு வரை கலை நிகழ்ச்சியை நடத்திவிட்டு, தங்களது இசைக்கருவிகளுடன் சொந்த ஊருக்குத் திரும்பியுள்ளனர்.

அவர்கள் ஆலம்பூண்டி குளக்கரை தெரு வழியாக நடுப்பட்டு கிராமத்திற்குச் சென்ற நேரம், சரியாகச் சிறுமி ஹேமலதா மாயமானதாகக் கூறப்படும் நள்ளிரவு 12 மணி முதல் 1 மணி வரையிலான நேரத்துடன் ஒத்துப்போகிறது.

வில்லுப்பாட்டு குழுவினரிடம் சிபிசிஐடி துருவிய கேள்விகள்

கூடுதல் எஸ்பி வேல்முருகன் தலைமையிலான சிபிசிஐடி அதிகாரிகள் வில்லுப்பாட்டுக் குழுவினரை அழைத்து விரிவான விசாரணை நடத்தினர்:

நள்ளிரவு 12.45 மணியளவில் அந்தச் சாலையைக் கடக்கும்போது சிறுமியின் வீட்டின் முன்பாகவோ அல்லது அருகிலோ மினி வேனை நிறுத்தினார்களா?

அந்த நள்ளிரவு நேரத்தில் தெருவில் யாரேனும் சந்தேகப்படும்படி நின்றுகொண்டிருந்தார்களா? அல்லது குழந்தையுடன் யாராவது செல்வதை இவர்கள் பார்த்தார்களா?

வடிவேலுவின் வீட்டின் விளக்குகள் எரிந்ததா, வாசற்கதவு திறந்திருந்ததை இவர்கள் கவனித்தார்களா?

சாலையோரத்தில் வேறு ஏதேனும் கார்களோ அல்லது இருசக்கர வாகனங்களோ நின்றிருந்ததா?

என்பது குறித்து கலைஞர்களிடம் தனித்தனியாக வாக்குமூலங்கள் பெறப்பட்டுள்ளன. நள்ளிரவில் அவ்வழியாகச் சென்ற நேரில் கண்ட சாட்சிகளாக இவர்கள் இருக்கக்கூடும் என்பதால், இவர்களது வாக்குமூலம் மிக முக்கியமானதாகக் கருதப்படுகிறது.

26-வது நாளில் நள்ளிரவு மர்மத்தை உடைக்க முயற்சி

வழக்கில் ஒருபுறம் நாமக்கல் தாதகிரி முருகன் கோவில் மற்றும் உளவுப்பிரிவுகளின் (OCIU, SBCID) தேடுதல் ஒருபக்கம் தீவிரமாக நடந்து வரும் சூழலில், மறுபுறம் குழந்தை காணாமல் போன அதே நிமிடங்களில் ஆலம்பூண்டியில் நடந்த நேரடி நிகழ்வுகளைத் துல்லியமாகக் கட்டமைக்க சிபிசிஐடி முயன்று வருகிறது.

நள்ளிரவில் அந்த வழியாகச் சென்ற வில்லுப்பாட்டுக் குழுவினர் அளித்த தகவல்கள், நள்ளிரவு 12 மணிக்கு மேல் சிறுமியின் வீட்டில் உண்மையில் என்ன நடந்தது என்பதைத் தெளிவுபடுத்தப் பெரிதும் உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+