• search
விழுப்புரம் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  

போலி பேஸ்புக் கணக்கில் 15 பெண்களை வளைத்து பணம் பறித்த மன்மதராசா கைது

|
  போலி பேஸ்புக் கணக்கில் 15 பெண்களை வளைத்து பணம் பறித்த மன்மதராசா கைது-வீடியோ

  விழுப்புரம் : இந்திபாடகர் அர்மான் மாலிக் பெயரில் போலி ஃபேஸ்புக் கணக்கு தொடங்கி அதன் மூலம் பல பெண்களுக்கு காதல் வலை வீசிய நபர் அவர்களிடம் அந்தரங்கப் புகைப்படங்களை வாங்கி அதை வைத்து மிரட்டியுள்ளார். பெண் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் அந்த நபரை கோவை மாவட்ட கிரைம்பிராஞ்ச் காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.

  பெண்களை ஏமாற்றிய அந்த மன்மதராசாவின் பெயர் மகேந்திரவர்மன் என்பதாகும். உளுந்தூர்பேட்டையைச் சேர்ந்த அவனுக்கு பெண்களின் மீது தீராத ஆசை. பெண்களை தனது வலையில் வீழ்த்த அவர் அதிகம் மெனக்கெடவில்லை. பிரபல பாலிவுட் பாடகர் அர்மான் மாலிக் புகைப்படத்தை புரபைல் படமாக வைத்தார்.

  செல்போனிலும் வாட்ஸ்அப்பிலும் அர்மான் மாலிக் புகைப்படத்தையே புரபைல் படமாக வைத்திருந்தார். அழகான முகத்தை காட்டி அழகிய பெண்களுக்கு நட்பு வலைவீசி பிடித்த மகேந்திரவர்மன் அடுத்தது காய் நகர்த்துவதான் திரைக்கதையின் முக்கிய அம்சம்.

  மன்மதராசா

  மன்மதராசா

  நட்பில் நுழையும் பெண்களுக்கு காதல் வலைவீசுவான் மகேந்திரவர்மன். அர்மான் மாலிக் போல பிரபலமான ஒரு நபர் காதலிப்பதாக சொன்ன உடன் அதை உண்மை என்று நம்பி தங்களின் வாழ்க்கையை ஒப்படைத்துள்ளனர். ஆனால் அர்மான் மாலிக் பேரில் போலியாக வாழ்ந்துள்ளான் மகேந்திரவர்மன். பேசி பேசியே பெண்களின் மனதை கரைத்தான்

  காதலில் விழுந்தவர்கள்

  காதலில் விழுந்தவர்கள்

  வலையில் விழும் பெண்களிடம் பாலியல் உணர்வை தூண்டும் வகையில் பேசி அந்தரங்க புகைப்படங்களை வாங்கி வைத்துக்கொள்வான் அதனை வைத்து அந்த பெண்களிடம் மிரட்டி பணம் பறித்துள்ளான். 15க்கும் மேற்பட்ட பெண்கள் அவனது காதல் வலையில் சிக்கியவர்கள்

  மிரட்டிய போலி

  மிரட்டிய போலி

  மகேந்திரவர்மனின் பேச்சை உண்மை என்று நம்பி ஏமாந்ததோடு தங்களின் அந்தரங்க புகைப்படங்களையும் அனுப்பியுள்ளனர். அதையே துருப்புச்சீட்டாக வைத்துக்கொண்டு மிரட்டியிருக்கிறான். ஏமாந்த பெண்கள் எப்படி வெளியில் சொல்லமுடியும் அசிங்கத்திற்கு அஞ்சி அவன் கேட்ட பணம், நகையை கொடுத்து உள்ளனர்.

  போலீசில் சிக்கிய போலி

  போலீசில் சிக்கிய போலி

  மகேந்திரவர்மனிடம் ஏமாந்த பெண் ஒருவர் துணிந்து கோவை கிரைம் பிராஞ்ச் போலீசில் புகார் அளிக்கவே, வழக்குப் பதிவு செய்த போலீசார், அவனை சுற்றி வளைத்து கைது செய்தனர். விசாரணையில் பேஸ்புக், வாட்ஸ்அப் மூலம் பெண்களை வீழ்த்தியதாக கூறியுள்ளான்.

  இந்நிலையில் பெண் ஒருவர் கொடுத்த புகாரின் பேரில் மகேந்திரவர்மனை சுற்றி வளைத்த போலீசார் அவரை கையும் களவுமாக கைது செய்தனர். இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்திய அப்போது அவர் கூறியதாவது பிரபல பாடகர் அர்மான் மாலிக் என்பவரது பெயரில் போலியான பேஸ்புக் கணக்கு ஒன்றை திறந்து அதன் மூலம் பல்வேறு இளம் பெண்களுக்கு நட்பு அழைப்பு விடுத்ததாகவும், அதனை உறுதி செய்த பெண்களிடம் நட்பை தொடர்ந்துள்ளான்.

  ஏமாறுவது ஏன்

  ஏமாறுவது ஏன்

  பொள்ளாச்சி சம்பவம் தொடங்கி பேஸ்புக்கில் ஏமாற்றும் கயவர்கள் அதிகம் இருக்கிறார்கள் என்று ஊடகங்களில் விழிப்புணர்வு ஏற்படுத்தினாலும் அதைப்பற்றி கண்டு கொள்ளாமல் சமூகவலைத்தளங்களில் வலைவீசும் போலிகளிடம் சிக்கி ஏமாறுகின்றனர். இன்னும் எத்தனை காலம்தான் ஏமாறுவார்களோ தெரியலையே.

  திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

   
   
   
  English summary
  A man who posed as Bollywood playback singer Armaan Malik on social media and defrauded lakhs of rupees from women after befriending them was arrested K Mahendra Varman a resident of Ulunthurpet in Villupuram, for cheating several women through WhatsApp and Facebook in the name of Armaan Malik famous singer
  உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
  Enable
  x
  Notification Settings X
  Time Settings
  Done
  Clear Notification X
  Do you want to clear all the notifications from your inbox?
  Settings X
  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more