1 சீட்டு 2 சீட்டுக்கு பாஜககிட்ட கெஞ்ச போறங்க பாருங்க..! அதிமுகவுக்கு சாபம் விட்ட கே.சி.பழனிசாமி!
விழுப்புரம் : அதிமுக உட்கட்சி பிளவு காரணமாக பாஜக தலைமை ஏற்று அதிமுகவுக்கு ஒரு சில சீட்டுகள் வழங்கும் நிலை ஏற்படும் அபாயம் உள்ளது எனவும், ஓபிஎஸ் இபிஎஸ் பிளவு திமுகவுக்கு சாதகமாக அமையும் வாய்ப்புள்ளதாக முன்னாள் எம்.பி. கே.சி.பழனிசாமி கூறியுள்ளார்.
விழுப்புரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் முன்னாள் எம்பியும், அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவருமான கே.சி.பழனிச்சாமி தலைமையில் அவரது ஆதரவாளர்கள் கூட்டம் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் பங்கேற்றனர்
ஆலோசனைக் கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய கே.சி.பழனிசாமி," அதிமுகவில் தற்போது நடைபெற்று வரும் ஒற்றை தலைமை பிளவினால் அதிமுக தொண்டர்கள் மிகவும் அல்லல்பட்டு வருகின்றனர் என்றார்.

கேசி பழனிசாமி
மேலும்," அதிமுக உட்கட்சி பிளவின் காரணமாக மதவாத சக்திகள் தற்பொழுது அதிமுகவை கையில் கொண்டு, வருகின்ற தேர்தல்களில் பாரதிய ஜனதா கட்சியின் தலைமைப் பொறுப்பு ஏற்று பின்னர் கூட்டணி கட்சியில் அதிமுகவுக்கு ஒரு சில இடங்கள் மட்டுமே வழங்கும் நிலைமை ஏற்படும். இதனை தடுக்கும் விதத்தில் எம்ஜிஆர் வழியில் லஞ்ச லாபம் இல்லாத உண்மையான அதிமுக தொண்டர்கள் ஒன்றரை கோடி தொண்டர்கள் மத்தியில் முறையாக பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டு அதில் தேர்ந்தெடுக்கப்படுபவர்கள் ஒற்றை தலைமை ஏற்க வேண்டும்.

ஒற்றைத் தலைமை
தற்பொழுது இபிஎஸ் ஓபிஎஸ் ஒற்றைத் தலைமைக்காக போட்டி போட்டுக் கொண்டு இருப்பது வேதனை அளிக்கிறது. தொடர்ந்து இபிஎஸ் பொதுச் செயலாளர் பதவிக்காகவும், அதிமுக ஒருங்கிணைப்பாளர் பதவிக்கும் போட்டி போடுவது குற்றத்திலிருந்து தப்பிக்க மட்டுமே. இவர்கள் இது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். ஓபிஎஸ்ஆக இருந்தாலும் இபிஎஸ்ஆக இருந்தாலும் சசிகலாவாக இருந்தாலும் யார் வேண்டுமானாலு தொண்டர்கள் செல்வாக்கைப் பெற்று பொதுச் செயலாளராக ஆகலாம்.

ஓபிஎஸ் இபிஎஸ்
அதிமுக உட் கட்சியில் ஓபிஎஸ் இபிஎஸ் ஜாதி பார்வை, லஞ்சம் ஊழல் செய்யும் நபர்களுக்கு சீட்டு வழங்குதல் போன்ற செயல்களில் ஈடுபடுகின்றார்கள். ஓபிஎஸ் இபிஎஸ் பிளவுபட்டதால் பாரதிய ஜனதா கட்சிக்கும் திமுக கட்சிக்கும் சாதகமாக அமைய சூழல் உருவாக்கியுள்ளது. இதனை தடுக்க வேண்டும். மேலும் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் புரட்சித்தலைவி செல்வி ஜெயலலிதா ஆகியோர்கள் மூலம் உருவாக்கப்பட்ட அதிமுக தற்பொழுது அதிமுக சின்னம்,கொடி முடக்கும் நிலைமை ஏற்பட்டுள்ளது.

சசிகலா
இதனை காக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் ஜெயிலுக்கு போய் குற்றம் சாட்டப்பட்டவரான சசிகலா ஒற்றை தலைமை ஏற்க வந்தால் நீங்கள் ஏற்றுக் கொள்வீர்களா என்ற கேள்விக்கு அவருக்கு அந்த தகுதி இல்லை. அதை உண்மையான தொண்டர்கள் யாரும் ஏற்க மாட்டார்கள் எனவும் அவர் தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications