நல்லதுக்குத்தான் சொல்றோம்... தயவு செய்து ஊசி போடுங்க... பொதுமக்கள் காலில் விழுந்த ஊராட்சித் தலைவர்
விழுப்புரம் : விழுப்புரம் மாவட்டம் கோலியனூர் அருகே பொதுமக்கள் காலில் விழுந்து தடுப்பூசி போடுமாறு ஊராட்சித் தலைவர் கேட்ட சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
Recommended Video
தனது கோரிக்கையை ஏற்று தடுப்பூசி போட்டுக்கொண்ட மக்களுக்கு பாத்திரங்களை வழங்கி நன்றியை தெரிவித்தார் ஊராட்சி மன்றத் தலைவர்.
மாவட்டத்தில் 100 சதவீதம் மக்கள் தடுப்பூசி போட்டிருப்பதை உறுதி செய்யவேண்டும் என விழுப்புரம் ஆட்சியர் அறிவுறுத்தியதை அடுத்து ஊராட்சி மன்றத் தலைவரின் இந்த செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த 24 மணிநேரத்தில்...
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் 21,20,024 பேருக்கு கொரோனா தடுப்பூசி முதல் டோஸ் போடப்பட்டுள்ளது. 2வது டோஸ் 52,47,206 செலுத்தப்பட்டுள்ளது. அதாவது 73,67,230 பேருக்கு கடந்த 24 மணிநேரத்தில் தடுப்பூசி போடப்பட்டுள்ளது. இந்தியாவில் இதுவரை 79,36,40,293 முதல் தடுப்பூசியும், 46,38,65,221 இரண்டாவது தடுப்பூசியும் போடப்பட்டுள்ளது. அதாவது ஒரு கோடியே 25 லட்சத்திற்கு மேல் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

100 சதவீதம் தடுப்பூசி
இந்நிலையில் விழுப்புரம் மாவட்ட ஆட்சியர் மோகன் ஊராட்சித் தலைவர்கள் கூட்டத்தில் பேசியபோது தடுப்பூசி போட்டுக் கொள்ளுமாறு மக்களிடம் தேவையான விழிப்புணர்வு ஏற்படுத்துமாறு கூறினார். மேலும் 100 சதவீதம் தடுப்பூசி போடப்பட்ட மாவட்டமாக விழுப்புரம் மாவட்டம் திகழவேண்டும் என அறிவுறுத்தி இருந்தார்.

ஊராட்சி மன்றத் தலைவர் விழிப்புணர்வு
கோலியனூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட ஆனாங்கூர் கிராமத்தில் 18 வயதுக்குட்பட்ட 3,336 பேரில் இதுவரை 3,265 பேர் முதல் டோஸ் ஊசி செலுத்திக்கொண்டனர். இரண்டாவது டோஸ் 801 பேர் செலுத்திக்கொண்டனர். ஆனால் 61 பேர் இதுவரை தடுப்பூசி போடவில்லை. இந்நிலையில் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், வருவாய்த்துறை ஊழியர்கள் மற்றும் செவிலியர்கள் உடன் சென்று வீடு வீடாக சென்று கொரோனா தடுப்பூசியின் அவசியத்தை தெரிவித்தார்.

காலில் விழுந்த ஊராட்சித் தலைவர்
கொரோனா தடுப்பூசிக்கான அறிவுரையை பொதுமக்கள் சீரியஸாக எடுத்தக் கொள்ளவில்லை என்பதை கவனித்த வெங்கடேசன் உடனடியாக அவர்கள் காலில் விழுந்து தயவு செய்து தடுப்பூசி போடுங்கள் என கேட்டுக்கொண்டார். இதனால் தர்மசங்கடம் ஆன பொதுமக்கள் உடனடியாக தடுப்பூசி போட்டுக்கொண்டனர். இதனால் மகிழ்ச்சி அடைந்த ஊராட்சி மன்றத் தலைவர் வெங்கடேசன் அவர்களுக்கு நன்றி தெரிவித்ததோடு, சில பாத்திரங்களையும் பரிசாக வழங்கினார். பொதுவாக ஓட்டு வாங்க வேண்டும் என்றால் அரசியல்வாதிகள் காலி விழுவார்கள், ஜெயித்த பிறகு கண்டுகொள்ளமாட்டடார்கள் என சினிமாவில் நகைச்சுவையாக பேசுவதை பார்த்திருக்கிறோம். ஆனால் மக்களின் நலன் கருதி காலில் விழுந்து ஊராட்சித் தலைவர் மன்றாடிய சம்பவம் கொரோனாவின் தீவிரத்தை மற்றவர்களுக்கு உணர்த்தும் படியாக உள்ளது என்றே சொல்லலாம்.
-
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கட்டப்பா கூட ஒரு டைம்தான் குத்துனாரு.. இப்படி தினம் தினம் பண்ணுறீங்களே! கோபத்தின் உச்சியில் ஸ்டாலின் -
MDMK: எம்எல்ஏக்கள் ராஜினாமா இல்லை.. புது வியூகம் எடுக்கும் மதிமுக? திமுகவுக்கு கல்தா கன்பார்ம்? -
தமிழக அமைச்சரவையில் சீனியாரிட்டி லிஸ்ட்.. பின் தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. வன்னி அரசுக்கு எந்த இடம் -
முதல்வர் விஜய்யே நினைத்தாலும் பரந்தூர் விமான நிலையத்தை ரத்து செய்வது மிக கடினம்.. ஏன் தெரியுமா? -
வளைகுடாவில் இந்தியாவிற்கு கிடைத்தது மாற்றுப்பாதை.. ஓமனால் பெரிய குட்நியூஸ் -
திடீரென டெல்லியில் டிஜிபி சந்தீப் ராய் ரத்தோர்.. அமித்ஷா – உள்துறை செயலாளருடன் சந்திப்பு.. பின்னணி -
DMART முதலாளிக்கு இப்படியொரு பிஸ்னஸ் இருக்கா.. ஒரு வீட்டுக்கு ரூ.27.5 லட்சம் .. ஆடிப்போன மும்பை மக்கள்! -
உதயசூரியனில் போட்டியிட்ட 2 மதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்ய முடிவு? திமுகவுக்கு பெருத்த ஷாக்! -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம் -
அண்ணாமலை ஒரு பிராண்டு.. விட்றாதீங்க! லெட்டரைப் பார்த்ததும் பதறிப் போன டெல்லி! குவியும் ஆஃபர்கள்! -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம்












Click it and Unblock the Notifications