செஞ்சி சிறுமி மாயமான விவகாரம்! டவுசர் அணிந்த இரு முகமூடி கொள்ளையர்களுக்கு தொடர்பா? திடுக் தகவல்கள்

Subscribe to Oneindia Tamil

செஞ்சி: செஞ்சி சிறுமி மாயமான விவகாரத்தில் முகமூடி கொள்ளையர்களுக்கு தொடர்பா என்ற கோணத்தில் சிபிசிஐடி போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள். சிறுமியின் பாட்டி, தாய் ஆகியோரிடம் 5 மணிநேரமாக விசாரணை நடத்தியிருந்தனர்.

விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தில் கடந்த 12 ஆம் தேதி அதிகாலை வீட்டில் உறங்கிக் கொண்டிருந்த 7 வயது சிறுமி ஹேமலதா (7)காணாமல் போனார். இது தொடர்பாக சத்தியமங்கலம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 13 நாட்களாகியும் சிறுமியின் நிலை தெரியவில்லை.

Gingee Girl missing

இந்த வழக்கில் சத்தியமங்கலம் போலீஸார் விசாரித்தும் எந்த துப்பும் கிடைக்காத நிலையில் வழக்கை சிபிசிஐடிக்கு மாற்றி தமிழக டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டிருந்தார்.

அந்த வகையில் இந்த வழக்கை கடந்த 22 ஆம் தேதி முதல் சிபிசிஐடி டிஜிபி கீதா தலைமையிலான குழுவினர் விசாரணை நடத்தி வருகிறார்கள். அவர்கள் சிறுமியின் தாயிடம் இன்று மூன்றாவது நாளாக விசாரணை நடத்தினர்.

5 மணி நேரம் விசாரணை

மேலும் சிறுமியின் பாட்டியிடம் 5 மணி நேரம் விசாரணை நடத்தினர். அது போல் சிறுமி 2ஆம் வகுப்பு படித்து வந்த அரசு தொடக்க பள்ளியில் ஆசிரியர்களிடமும் மாணவர்களிடமும் விசாரணை நடத்தினர்.

செல்போன் நம்பர்

அப்போது தாயின் செல்போன் நம்பரை மனப்பாடமாக சொல்லும் அளவுக்கு சிறுமி மிகவும் புத்திசாலி என ஆசிரியர்கள் தெரிவித்துள்ளனர். 90 சதவீதம் குழந்தை உயிருடன் இருக்க வாய்ப்பிருக்கிறது என்றும் பெற்றோரே அவர்களது உறவினர்களிடம் குழந்தையை விற்றிருக்க வாய்ப்பிருக்கிறது என்றும் சிபிசிஐடி போலீஸார் சந்தேகிக்கிறார்கள்.

11 ஆம் தேதி பக்கத்து ஊரில் கொள்ளை

சிறுமி காணாமல் போவதற்கு முந்தைய நாள் பக்கத்து கிராமத்தில் ஒரு கொள்ளை சம்பவம் நடந்துள்ளதால் இந்த வழக்கில் ஒரு திருப்பம் கிடைத்துள்ளது. கடந்த 10ஆம் தேதி மகாளய அமாவாசை, அதற்கு அடுத்த மறுநாள் 11 ஆம் தேதி பக்கத்து ஊரான பரதன்தாங்கல் கிராமத்தில் நள்ளிரவில் வீடு புகுந்த இரு முகமூடி கொள்ளையர்கள் வீடு புகுந்து நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.

காம்பவுண்ட் சுவர்

காம்பவுண்ட் சுவர் வீட்டிற்குள் ஏறி குதித்த இரு முகமூடி கொள்ளையர்கள் காற்றுக்காக கதவை திறந்து வைத்திருந்த மூதாட்டியிடம் நகைகளை கழற்ற முயன்ற போது மூதாட்டி விழித்துக் கொண்டார். உடனே கத்தியை காட்டி அவரின் கம்மலையும் தங்க சங்கிலியையும் அவர்கள் கொள்ளையடித்துச் சென்றனர்.

அந்த சம்பவத்திற்கு பின்னர்தான் சிறுமி மாயமான சம்பவம் நிகழ்ந்ததாக போலீஸார் தெரிவிக்கிறார்கள். அந்த மூதாட்டி கொடுத்த புகாரின் பேரில் அந்த இருவரும் டவுசரும் , முகமூடியும் அணிந்திருந்தனர் என அடையாளம் தெரிவித்துள்ளார்.

வயல்வெளி வழியாக

நகைக் கொள்ளைக்கு பின்னர், இருவரும் சாலை வழியாக செல்லாமல் வயல்வெளி வழியாக தப்பிச் சென்றதாக அந்த மூதாட்டி தெரிவித்தார். அப்படி என்றால் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டவர்கள் அந்த பகுதியை நன்கு தெரிந்தவர்களாக இருக்க வேண்டும் என போலீஸார் சந்தேகிக்கிறார்கள். அது போல் 19ஆம் தேதியும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த பெண்ணிடம் இருந்து இரண்டரை பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றனர்.

அது போல் கடந்த செப்டம்பர் மாதமும் அமாவாசைக்கு அடுத்த நாள் வீடு புகுந்து நகை பறித்த சம்பவம் நடந்ததாக சொல்லப்படுகிறது. எனவே சிறுமியின் பெற்றோரும் கதவை திறந்து வைத்துக் கொண்டு படுத்திருந்த நிலையில் இந்த கொள்ளையர்கள் நகைக்காக உள்ளே சென்று சிறுமியை கடத்திச் சென்றனரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தப்படுகிறது. இதனால் அந்த டவுசர் கொள்ளையர்களை போலீஸார் தேடி வருகிறார்கள்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+