கெஸ்ட் ஹவுஸில் 2 நடிகைகள்.. அடைத்து வைத்து "தொழில்" நடத்த முயன்ற சந்துருஜி.. அலேக்காக தூக்கிய போலீஸ்

விபச்சாரத்தில் 2 நடிகைகளை தள்ளிய தொழிலதிபர் கைது செய்யப்பட்டார்

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: கெஸ்ட் ஹவுஸ் ஒன்றில் 2 துணை நடிகைகள் அடைத்து வைக்கப்பட்டிருப்பதை பார்த்து போலீசார் அதிர்ந்து விட்டனர்.. அவர்களை ஏமாற்றி பாண்டிச்சேரிக்கு கடத்தி சென்று, அங்கு பாலியல் தொழிலிலும் ஈடுபடுத்த முயன்ற கெஸ்ட் ஹவுஸ் ஓனரும் தொழிலதிபருமான சந்துரு ஜி-யை அலேக்காக தூக்கி உள்ளே வைத்துள்ளனர் போலீசார்!

விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் அடுத்துள்ளது கோட்டகுப்பம்.. இதற்கு அருகில் தந்திராயன் குப்பத்தில், ஒரு கெஸ்ட் ஹவுஸ் செயல்பட்டு வருகிறது.

prostitution: police rescue two actress and puducherry businessman arrested

இதற்குள் விழுப்புரம் மாவட்ட போலீசார் திடீரென உள்ளே புகுந்து ஆய்வு மேற்கொண்டனர்.. அதேசமயம், புதுச்சேரியை சேர்ந்த தொழிலதிபர் சந்துரு ஜி என்பவருக்கு சொந்தமான ஒரு கெஸ்ட் ஹவுஸையும் போலீசார் ஆய்வு செய்தனர்.. சந்துரு ஜி என்பவர் ஒரு ஏடிஎம் மோசடிக்காரரும்கூட.

அந்த கெஸ்ட் ஹவுஸ்-க்குள் ஒரு ஸ்பா இயங்கி வந்தது.. அதற்குள் 2 பெண்களை அடைத்து வைத்திருந்ததை போலீசார் கண்டு அதிர்ந்தனர்.. அவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில், தங்களை அடைத்து வைத்து பாலியல் தொழிலில் ஈடுபடுத்துவதாக புகார் சொன்னார்கள்.

அந்த 2 பேருமே சென்னையில் துணை நடிகைகள் என்பதும் விசாரணையில் தெரியவந்தது. வளசரவாக்கத்தை சேர்ந்தவர்கள் பாண்டிச்சேரிக்கு மசாஜ் கலை கற்று தருகிறோம் என்று சொல்லி இவர்களை ஏமாற்றி அழைத்து வந்துள்ளனர்.. வந்த இடத்தில்தான், அந்த துணை நடிகைகளை பாலியல் தொழிலில் ஈடுபடுத்த அங்கிருந்த ஒரு கும்பல் பிளான் செய்ததும் விசாரணையில் வெளிவந்தது.

இதையடுத்து தொழிலதிபர் சந்துரு ஜியை போலீசார் கைது செய்தனர்.. இதற்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர் விஜயகுமார், மற்றும் அந்த கெஸ்ட் ஹவுஸ் வாட்ச்மேன் அனில் ஜோசப் ஆகியோர் மீதும் போலீசார் வழக்கு பதிவு செய்ததுடன், மொத்தமாக கைது செய்து தூக்கி உள்ளே வைத்துள்ளனர்.. இப்போது அந்த கெஸ்ட் ஹவுஸ் பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+