"ஜனவரி 20" ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம்.. விசிகவை தொடர்ந்து சிபிஎம் அறிவிப்பு!
விழுப்புரம்: தமிழ்நாடு சட்டசபையில் ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றிய போது, சில வார்த்தைகளை விடுத்தும், சேர்த்தும் வாசித்தது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனை கண்டித்து ஜனவரி 20ம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெறும் என்று சிபிஎம் மாநிலச் செயலாளர் பாலகிருஷ்ணன் அறிவித்துள்ளார். ஏற்கனவே விசிக சார்பாக ஜனவரி 13ம் தேதி ஆளுநர் மாளிகை முற்றுகை செய்யப்படும் என்று அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
நடப்பாண்டில் தமிழ்நாட்டின் சட்டசபை கூட்டம் இன்று தொடங்கியது. பொதுவாக சட்டசபை கூட்டத்தொடரின் முதல் நாள் ஆளுநர் உரையுடன் தொடங்கும். இன்று 2023ம் ஆண்டின் முதல் சட்டசபை கூட்டத் தொடர் என்பதால் தமிழ்நாட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி உரையாற்றினார்.
இந்த கூட்டத்தில் ஆளுநர் உரையாற்றிய போது, சமூக நீதி, திராவிட மாடல், தமிழ்நாடு, அம்பேத்கர், அண்ணா, பெரியார், கருணாநிதி உள்ளிட்ட வார்த்தைகளை உச்சரிக்க மறுத்து கடந்து சென்றார். அதேபோல் சில வாசகங்களை அவராகவே சேர்த்து உரையாற்றினார்.

ஆளுநர் மாளிகை முற்றுகை
இந்த நிலையில் செய்தியாளர்களை சந்தித்து சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறுகையில், தமிழ்நாடு ஆளுநரை வெளியேற்ற வலியுறுத்தி, வரும் 20ம் தேதி மார்ச்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில் ஆளுநர் மாளிகை முற்றுகை போராட்டம் நடைபெற உள்ளது. ஏற்கெனவே கடந்த பல மாதங்களாக ஆளுநர் தமிழக மக்களுக்கும், உணர்வுகளுக்கும் கூட்டாட்சி தத்துவத்திற்கு விரோதமாகவும், அரசியல் சாசனத்திற்கு எதிராக பல கருத்துக்களை தெரிவித்து மாநில அரசை கொச்சைப்படுத்தும் செயலில் ஈடுபட்டுள்ளார்.

ஆளுநர் உரை
இந்தி திணிப்பு உள்ளிட்ட பல்வேறு விரோத கருத்துகளை ஆளுநர் தெரிவித்து வரும் அவர், ஆர்எஸ்எஸ்சின் அடிமட்ட தொண்டரைப் போல செயல்பட்டு அரசியல் நாகரிகம், பண்பாடு இல்லாமல் சட்டசபையில் நடந்துகொண்டுள்ளார். இந்தியாவில் எந்த ஆளுநரும் செயல்படாத வகையில் ஆளுநர் சட்டசபையில் அறிக்கையில் தமிழ்நாடு என்று படிக்காமல் தமிழகம் என்று படித்து அரசு தயாரித்த அறிக்கையை முழுமையாக படிக்காமல் சென்றுள்ளார். மாநில சுயாட்சி, கூட்டாட்சி கோட்பாட்டிற்கு எதிராக ஆளுநர் செயல்படுகிறார்.

அதிமுக மீது விமர்சனம்
ஆளுநரின் பேச்சு அவைக்குறிப்பில் இருந்து நீக்கப்படுவது இதுவே முதல்முறையாக இருக்கும். அமைச்சரவையை அவமானப்படுத்தும் செயலாக ஆளுநரின் செயல்பாடு உள்ளது. ஆளுநர் நடந்து கொண்ட செயல்பாட்டில் முதல்வரின் நடவடிக்கை கூட்டாட்சியின் தத்துவத்தினை பாதுகாக்கும் வகையில் அமைந்துள்ளது. எதிர்க்கட்சி தலைவராக இருந்து கொண்டு எடப்பாடி பழனிசாமி ஆளுநரை கண்டிக்க மறுத்து, பாஜகவின் கொத்தடிமையாக இருப்பதைக் காட்டுகிறார்.

அண்ணாமலை மீது விமர்சனம்
ஊழல் எல்லா இடத்திலும் நடைபெறுகிறது. திமுக ஊழல் செய்தால் கண்டிப்பாக கூட்டணி கட்சியாக உள்ள நாங்கள் எதிர்ப்போம். பாஜக தலைவர் அண்ணாமலை எப்படி ரபேல் கைக்கடிகாரம் வாங்கினேன் என்று சொல்லமுடியாமல், தமிழக அரசின் பல துறைகளில் ஊழல் செய்வதால் வளர்ச்சி பாதிக்கப்படுவதாக கூறுவதற்கு, அவருக்கு எந்த தகுதியும் இல்லை. தமிழ்நாடு அரசு குடும்ப அட்டைதாரர்களுக்கு ஆயிரம் ரூபாய் வழங்குவதாக தேர்தல் அறிக்கையில் அறிவித்ததை நிறைவேற்றினால் நல்லதாக இருக்கும் என்று தெரிவித்தார்.
-
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
75 பவுன்ஸ் ஆன செக்குகள்.. நடிகர் கரண் வாழ்க்கையை கெடுத்தது அந்த பெண்ணா? உண்மையை உடைத்த பிரபலம் -
எலக்ட்ரீஷியன் நள்ளிரவில் வாஷ்பேசினில் பண்ண காரியம்! உறைந்து போன 4 பிஞ்சு குழந்தைகள்! பதைபதைத்த கேரளா -
பனையூர் பாபுவின் மாஸ் மூவ்... அந்த தொகுதிதான் காரணமா? 7ம் தேதி திமுகவில் சர்ப்ரைஸ்.. ஆடிப்போன விசிக -
விஜய்யை இப்படியே விடக்கூடாது.. பாஜக பாணியை கையில் எடுக்கும் திமுக.. பெரிய மாற்றம் வரப்போகுது -
மம்தாவை கதறவிடும் முதல் முறை எம்எல்ஏ.. 60 எம்எல்ஏக்களை அபகரித்தது எப்படி? தி.காங்கிரஸ் பிளவு பின்னணி -
காங்கிரஸுக்கு ராஜ்யசபா சீட்.. அலேக்காக தப்பிக்கும் தவெக! பிளான் இதுதான்! -
அழுதபடி அலிசா அப்துல்லா புகார்.. ஒரே நாளில் திருச்சி சூர்யாவை தூக்கிய போலீஸ்! தலைமறைவான முக்தார்? -
பயங்கரமான ஆளுங்க விஜய்! காங்கிரஸுக்கு தான் சீட்டு.. ஆனா எம்பி எங்களுங்க! ராஜ்சபா சீட்டு யாருக்கு? -
துன்பத்திலும் ஒரு இன்பம்.. மத்திய அமைச்சராகும் நயினார்! தமிழக பாஜக புதிய தலைவர் இவரா? கலகல கமலாலயம்! -
ரூ.72 லட்சம் பணம் அக்கவுண்டில் ஏறியதும் ஊரைவிட்டே ‘எஸ்கேப்’.. மோசடி புகாரில் தவெக நிர்வாகி கைது!












Click it and Unblock the Notifications