ஒலக்கூர் காவல் நிலையத்தில் உதயநிதிக்கு மதிய உணவு! தனியாக அமர்ந்து சாப்பிடும் Udhayanidhi!

Subscribe to Oneindia Tamil

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்டம் ஒலக்கூர் காவல் நிலையத்தில் உதயநிதி ஸ்டாலினுக்கு மதிய உணவை போலீஸார் வாங்கி கொடுத்தனர். அதை அவர் உள்ளே அமர்ந்து தனியே சாப்பிட்டு வருகிறார்.

நடிகை திரிஷாவை இரட்டை அர்த்தத்தில் ஆபாசமாக பேசியதாக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டார். காலை சுமார் 10.30 மணிக்கு மேல் கைது செய்யப்பட்ட அவர் போலீஸ் வாகனத்தில் தஞ்சாவூருக்கு அழைத்துச் செல்லப்பட்டார்.

udhayanidhi arrest

அந்த போலீஸ் வேனில் வழக்கறிஞர் பரந்தாமன், சேகர்பாபு உள்ளிட்டோர் உதயநிதியுடன் உள்ளனர். அது போல் அந்த வாகனத்தின் பின்னாலேயே முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என். நேரு ஆகியோர் சென்றனர்.

அவர்களின் கார்களை போலீஸார் வண்டலூரிலேயே தடுத்து நிறுத்தினர். இந்த நிலையில் கிழக்கு கடற்கரைச் சாலை வழியாக உதயநிதி அழைத்துச் செல்லப்பட்டார். வழிநெடுகிலும் போலீஸார் காவல் வாகனத்தை சூழ்ந்து போலீஸுக்கு எதிராக கோஷமிட்டு வருகிறார்கள்.

அவர்களை போலீஸார் வாகனத்தில் இருந்து இறங்கி அப்புறப்படுத்தி வருகிறார்கள். இந்த நிலையில் மேல்மருவத்தூரை அடுத்த அச்சரப்பாக்கம் அருக உதயநிதியின் வேன் சென்ற போது அந்த வேனை திமுகவினர் வழிமறித்தனர்.

அப்போது போலீஸார் இறங்கி என்னவென கேட்ட போது உதயநிதிக்கு மதிய உணவு வாங்கி வந்திருப்பதாக தெரிவித்தனர். அதை அவரிடம் கொடுக்க முயன்றனர். அப்போது அதை போலீஸார் தடுத்து நிறுத்தினர்.

உதயநிதி கைது செய்யப்பட்டுள்ளதால் அவருக்கு வெளியாட்கள் கொடுக்கும் உணவை சாப்பிட அனுமதி கிடையாது. காவல் துறை சார்பில் அவருக்கு உணவு வழங்கப்படும் என்றனர். எனினும் விடாமல் திமுகவினர் உணவு கொடுக்க முயன்ற போது அவர்களை போலீஸார் விரட்டிவிட்டு, புறப்பட்டனர்.

பின்னர் விழுப்புரத்தை அடுத்த ஒலக்கூர் காவல் நிலையத்தில் உதயநிதிக்கு உணவு வாங்கி வைக்குமாறு கூறியிருந்ததை அடுத்து அந்த காவல் நிலையத்திற்கு உதயநிதியை அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு வாங்கப்பட்ட உணவை அவர் சாப்பிடுகிறார்.

அவரை பார்க்க முன்னாள் அமைச்சர்கள் எ.வ.வேலு, கே.என்.நேரு உள்ளிட்டோர் செல்ல முயன்ற போது அவர்களை உள்ளே விட அந்த மாவட்ட எஸ்பி மறுத்துவிட்டார். இதையடுத்து அவர்கள் உள்ளே செல்லாதவண்ணம் போலீஸார் ஒரு கயிறை தடுப்பாக வைத்து பிடித்து கொண்டு நின்றனர்.

இந்த நிலையில் வழியெங்கும் திமுகவினர் திரண்டு உதயநிதிக்கு உணவு தர முயற்சித்து வருகிறார்கள். தற்போது வரை விழுப்புரத்தை தாண்டாத நிலையில் உதயநிதி தஞ்சாவூருக்கு அழைத்து செல்வதில் மேலும் மேலும் தாமதம் ஏற்படும் என தெரிகிறது.

இதனிடையே உதயநிதி கைதுக்கு எதிராக உயர்நீதிமன்றத்தில் திமுக தொடர்ந்த வழக்கில், உதயநிதியை இன்றே விடுவிக்க வேண்டும் என்றும் விசாரணைக்கு உதயநிதி ஒத்துழைக்க வேண்டும் என்றும் நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+