வலையில் சிக்கிய விருதுநகர் "சுறா".. திமுகவிற்கு தாவும் அதிமுகவின் மாஜி எம்எல்ஏ? ஆபரேஷன் சக்ஸஸ்! யாரு
விருதுநகர்: அதிமுகவில் தென் மண்டலத்தை சேர்ந்த முக்கியமான மாஜி எம்எல்ஏ ஒருவர் திமுகவில் இணைவதற்காக முயன்று வருவதாக தகவல்கள் வருகின்றன.
அதிமுகவில் உட்கட்சி பூசல் தலைவிரித்தாடுகிறது.. பிரைம் டைம் சீரியல்களுக்கு இணையாக அதிமுகவில் நாளுக்கு ஒரு திருப்பம் நடந்து கொண்டு இருக்கிறது.
சென்னை எபிசோடுகள் முடிந்த நிலையில் தற்போது டெல்லி எபிசோட் தொடங்கி உள்ளது. அதுதான்.. டெல்லி உச்ச நீதிமன்றத்தில் தற்போது அதிமுக பொதுக்குழு வழக்கு தொடர்பாக விசாரணைகள் நடக்க தொடங்கி உள்ளன.
இந்த வழக்கில் வரும் 6ம் தேதி விசாரணை நடக்க உள்ளது. பெரும்பாலும் டிசம்பர் இறுதிக்குள் உச்ச நீதிமன்றம் அதிமுக பொதுக்குழு வழக்கில் தீர்ப்பு வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அதிமுக vs பாஜக.. பிடியை இறுக்கிய டெல்லி.. என்னங்க நடக்குது? பதறி போய் போனை போட்ட மாஜிக்கள்! ஏன்?

மோதல்
அதிமுக பொதுக்குழு வழக்கில் இன்னும் தீர்ப்பு வராத நிலையில் அதிமுகவில் தற்போது நிர்வாகிகள் ஆடுபுலி ஆட்டம் ஆடிக்கொண்டு இருக்கிறார்கள். எந்த நிர்வாகி எந்த கட்சியில் இருக்கிறார் என்று சொல்ல முடியாத அளவிற்கு மாறி மாறி நிர்வாகிகள் அணி மாறிக்கொண்டு இருக்கிறார்கள். ஒருநாள் எடப்பாடி அணியில் இருக்கும் நிர்வாகிகள் மறுநாள் ஓ பன்னீர்செல்வம் அணிக்கு செல்கிறார்கள். ஒருநாள் ஓ பன்னீர்செல்வம் அணியில் நிர்வாகிகள் மறுநாளே எடப்பாடி அணிக்கு செல்கிறார்கள். யார் எந்த அணியில் இருக்கிறார் என்பதே சொல்ல முடியாத அளவிற்கு நிமிடத்திற்கு நிமிடம் அணி மாறிக்கொண்டு இருக்கிறார்கள்.

அயர்ச்சி
இந்த அணிமாறும் ஆடுபுலி ஆட்டத்தில் சில ஆடுகள் உள்ளூர் அளவில் வெட்டப்பட்டுவிட்டன. உதாரணமாக ஓபிஎஸ்ஸுக்கு எதிராக ஆர்பி உதயகுமாரை எடப்பாடி பழனிசாமி வளர்த்துவிட்டுக்கொண்டு இருக்கிறார். இதன் காரணமாகவே அவருக்கு எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியையும் கொடுத்தார். அதில் இன்னும் உதயகுமார் பொறுப்பேற்க முடியவில்லை என்பது வேறு கதை. இன்னொரு பக்கம் முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜிக்கு விருதுநகரில் எடப்பாடி அதிக முக்கியத்துவம் கொடுக்கிறார். வழக்கை சந்தித்தார், சிறைக்கு சென்றுவிட்டு வந்தார், மூத்த தலைவர் என்ற பல காரணங்களால் எடப்பாடி இவருக்கு தீவிர ஆதரவு தருகிறார்.

அப்செட்
இந்த ஆதரவு காரணமாக இவர்களுக்கு எதிராக உள்ளூரில் அரசியல் செய்து வந்த தலைகள் பலர் அப்செட் ஆகி இருக்கிறார்களாம். எடப்பாடி அண்ணன் நம்மை வளர்த்துவிடுவது இல்லையே என்று அப்செட்டில் இருக்கிறார்களாம். இவர்களில் சில நியாயமாக பார்த்தால் எடப்பாடியை எதிர்த்துக்கொண்டு ஓ பன்னீர்செல்வம் அணிக்குத்தான் செல்ல வேண்டும். ஆனால் ஓ பன்னீர்செல்வத்திடம் எதிர்காலம் இல்லை என்று இவர்களில் சிலர் நினைக்கிறார்களாம். இதன் காரணமாக ஓ பன்னீர்செல்வம் அணிக்கு போகாமல் திமுகவில் சேர்ந்து விடலாமா என்று பார்க்கிறார்களாம்.

தென் மாவட்டம்
அந்த வகையில் தென் மாவட்டத்தை சேர்ந்த முக்கியமான மாஜி எம்எல்ஏ ஒருவர் அதிமுகவில் இருந்து திமுகவிற்கு செல்ல முயன்று வருகிறாராம். விருதுநகரை சேர்ந்த அந்த மாஜி எம்எல்ஏ அதிமுகவில் இருந்தால் நமக்கு எதிர்காலம் இல்லை. திமுகவிற்கு போய்விட வேண்டியதுதான் என்று திமுகவின் விருதுநகர் தலைகளிடம் போனில் பேசி இருக்கிறாராம். திமுகவும் இவருக்கு.. சீக்கிரம் சேர்ந்துக்குறோம் என்று கிரீன் சிக்னல் கொடுத்து உள்ளதாம். இவரை இழுக்க வேண்டும் என்று திமுக முன்பே முயன்று வந்ததாக கூறப்படுகிறது. தற்போது அதிமுக மோதல் காரணமாக அந்த மாஜி எம்எல்ஏவே அணி மாறுவதால்.. ஆபரேஷன் சக்ஸஸ் என்று திமுக விருதுநகர் தலைகள் குஷியில் இருக்கிறார்களாம்.