திமுக ’வாரிசு’ கட்சி..பாஜக ’துணிவு’ கட்சி! பாஜக சீனிவாசன் பேச்சு! எம்பி தேர்தலுடன் எம்எல்ஏ தேர்தலாம்
விருதுநகர் : திமுக போன்று வாரிசுகளை நம்பி இல்லாமல் பாஜக துணிவை மட்டுமே நம்பி இருக்கும் கட்சி என்று விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் பாஜக மாநில பொதுச் செயலாளர் இராம சீனிவாசன் ட்ரெண்டிங்காக பேசியுள்ளார்.
விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் விருதுநகர் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி சார்பில் நம்ம ஊர் பொங்கல் நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் மகளிரை சிறப்பிக்கும் வகையில் கோலப் போட்டிகள் வைத்து பரிசளிப்பு நிகழ்ச்சி நடைபெற்றது.

இராம சீனிவாசன்
விருதுநகர் மேற்கு மாவட்ட பாரதிய ஜனதா கட்சி மற்றும் சாத்தூர் நகர ஒன்றிய பாரதிய ஜனதா கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என பலர் கலந்து கொண்டனர். சாத்தூர் பகுதியில் உள்ள ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு தங்களது கலை திறன்களை வெளிப்படுத்தி வண்ண வண்ண கோலங்கள் வரைந்தனர். சிறப்பான கோலம் வரைந்த மகளிருக்கு குளிர்சாதன பெட்டி கிரைண்டர் உள்ளிட்ட பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டது.

பாஜக
இந்நிகழ்ச்சியில் பாரதிய ஜனதா மாநில பொதுச் செயலாளர் ராம சீனிவாசன் தலைமையேற்று கோல போட்டியில் பரிசு வென்ற பெண்களுக்கு பரிசுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் பேசிய பேராசிரியர் ராம சீனிவாசன்," பாரதிய ஜனதா கட்சி எப்பொழுதும் பொதுமக்களுக்கு வழங்கும் கட்சியாக தான் இருந்து வருகிறது. திமுக போல் பொதுமக்களிடமிருந்து பறிக்கும் கட்சியாக இருப்பதில்லை.

வாரிசு - துணிவு
திமுக போன்று வாரிசுகளை நம்பி இல்லாமல் பாஜக துணிவை மட்டுமே நம்பி இருக்கும் கட்சி. அது தான் இப்பொழுதுள்ள ட்ரெண்டிங். மேலும் தைப்பொங்கல் அன்று சூரியனை வணங்கி படைப்பிற்கு நன்றி சொல்லும் விதமாக கொண்டாடப்படும் நாளாக இருப்பதால் இந்த நாளில் நாம் பழையன கழிதலும் புதியன புகுதலும் என்ற நோக்கில் புதிய உறுதிமொழி ஏற்க வேண்டும்

திமுகவுக்கு பொங்கல்
புதியனவிற்கு பொங்கல் இட்டு வழிபடுவதுடன் பழையனவற்றிற்கு பொங்கல் வைத்து அனுப்புவதை குறிக்கோளாக கொண்டும். இப்பொழுது முதல் திமுகவிற்கு நாம் பொங்கல் வைக்க உறுதிமொழி எடுக்க வேண்டும். வருகின்ற 2024 இல் நடைபெற இருப்பது நாடாளுமன்றத் தேர்தல் மட்டுமல்ல சட்டமன்றத் தேர்தலும் சேர்ந்து நடைபெறும். திமுக அதன் ஆட்சி செய்யும் நாட்களை எண்ணிக் கொண்டிருக்கின்றனர்" என பேசினார்.
-
1000% கன்ஃபார்ம்.. புதிய கட்சி ஆரம்பிக்கும் அண்ணாமலை! அடுத்த வாரம் இருக்கு கச்சேரி! பரபர பாஜக! -
"2.0 அவதாரம் எடுக்கும் அண்ணாமலை!".. பாஜகவா? புதிய கட்சியா? அரசியல் களத்தை அலற விட்ட போஸ்டர்கள் -
திரிணாமுல் எம்பிகள் மீது தொடர் தாக்குதல்.. பாஜகதான் காரணமா? வெளியான ஷாக் தகவல்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
கொஞ்சம் பொறுமையா இருங்க ஜி! தனித் தவில் வாசிக்க தயாரான அண்ணாமலை! அமைதிப்படுத்த இறங்கிய அமித் ஷா? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
முக்கோணப் போட்டியில் தமிழ்நாடு.. 112 ஐ நெருங்கும் விஜய்? மாஸ் கம்பேக்கில் திமுக.. பதற்றத்தில் அதிமுக












Click it and Unblock the Notifications