விருதுநகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

இந்து மதத்தை அவமதிக்கிறார்கள்! திமுகவுக்கு இதுதான் வேலையே..! கொந்தளித்த பாஜக வேலூர் இப்ராஹிம்!

Google Oneindia Tamil News

விருதுநகர் : தமிழகத்தில் திமுகவின் ஓராண்டு ஆட்சியில் மக்கள் மிகப்பெரிய சிரமங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் என்றும், திமுகவின் ஓராண்டு ஆட்சி என்பது மிக மோசமான தமிழகத்தை பாழ்படுத்தக்கூடிய ஆட்சியாக இருக்கிறது என்பதற்கு மாற்றுகருத்து இல்லை என பாஜக சிறுபான்மையினர் அணியின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் கூறியுள்ளனர்.

Recommended Video

    பாஜக சிறுபான்மையினர் அணியின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் பேட்டி

    விருதுநகரில் பாஜக கிழக்கு மாவட்ட செயலாளர் பாண்டுரங்கன் தலைமையில் அக்கட்சியின் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது.இதில் கலந்து கொண்ட பாஜக சிறுபான்மையினர் அணியின் தேசிய செயலாளர் வேலூர் இப்ராஹிம் கலந்து கொண்டார்.

    அண்ணா விட்ருங்க ப்ளீஸ்! அறைக்குள் சிக்கிய பாடகி! துப்பாக்கியுடன் 3 பேர்! விக்கித்து நின்ற போலீசார்.! அண்ணா விட்ருங்க ப்ளீஸ்! அறைக்குள் சிக்கிய பாடகி! துப்பாக்கியுடன் 3 பேர்! விக்கித்து நின்ற போலீசார்.!

    பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர்," தமிழகத்தில் திமுகவின் ஓராண்டு ஆட்சியில் மக்கள் மிகப்பெரிய சிரமங்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள் " என்றார்.

    திமுகவும் மின்வெட்டு

    திமுகவும் மின்வெட்டு

    மேலும், "திமுகவும் மின்வெட்டும் பிரிக்கமுடியாத அளவிற்கு எங்கு பார்த்தாலும் படிக்கமுடிகிறது. மாணவர்கள் முதல் தொழிற்சாலைகள் வரை மின் வெட்டு பெரிய அளவில் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. மின்வெட்டு பற்றி மக்களிடம் எடுத்துக் கூறினால் வழக்குப் போடுவதாக அமைச்சர் மிரட்டுவது தான் திமுகவின் ஜனநாயகமா என கேள்வி எழுப்பினார். தமிழகத்தில் திமுக ஆட்சி அமையும் போதெல்லாம் இந்து மதத்தை இழிவு படுத்துகிறார்கள் பட்டினப்பிரவேசம் என்பது காலங்காலமாக இருக்கக்கூடிய ஆதீன சைவ மடங்களின் ஒரு நம்பிக்கை. அதை இந்த அரசு தடை செய்திருக்கிறது.

    பாஜக அண்ணாமலை

    பாஜக அண்ணாமலை

    பாஜகவின் மாநில தலைவர் அண்ணாமலையின் அழுத்தத்தால் தான் பட்டின பிரதேசத்திற்கான தடையை திமுக அரசு நீக்கி உள்ளது. தற்போது தமிழகத்தில் திமுகவிற்கும் இறைநம்பிக்கை உள்ளவர்களுக்கும் தான் போர் நடைபெற்று வருகிறது. அதேபோல் திமுகவிற்கும் ஊழலை எதிர்க்கக்கூடிய பாஜகவிற்கும் தான் ஜனநாயக போர் நடந்து கொண்டு இருக்கிறது. இந்த போரில் பாஜக நிச்சயம் வெல்லும் என்றார்.

    பாஜக கட்சி என்பது அனைத்து மதங்களையும் மதித்தும் அதேபோல் அனைத்து மதத்தையும் சமநிலையில் பார்க்கக்கூடிய கட்சி.

    காவலர்கள் மன அழுத்தம்

    காவலர்கள் மன அழுத்தம்

    இன்று சட்டப்பேரவையில் தமிழக காவல்துறை மீதான மானியக் கோரிக்கை நடைபெற்றுக கொண்டிருக்கிறது. காவலர்களுக்கு திமுக கொடுத்த எந்த வாக்குறுதியும் நிறைவேற்றாததால் தற்பொழுது காவலர்கள் மன அழுத்தம் ஏற்பட்டு தற்கொலை செய்யும் நிலை உள்ளது. திமுகவின் இறை நம்பிக்கை அற்ற நிலையை மக்கள் மீது திணித்தால் 10 பேர் திராவிட மாடல் என்றால் அந்த தீய மாடலை ஒழித்து கட்ட பாஜக தமிழகம் முழுவதும் களம் இறங்கும்.

    தமிழகத்தில் திராவிட மாடல்

    தமிழகத்தில் திராவிட மாடல்

    தமிழகத்தில் திராவிட மாடல் என்று சொல்வதால் தமிழகம் வளர்ச்சி அடைந்து விட்டதா என்றவர்,புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனை என்பது மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள ஒரு மருத்துவமனை அங்கு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இருந்து மருத்துவர்கள் பணிபுரிகிறார்கள் என்பதால் அங்கு பல மொழிகள் பேசப்படும். அதில் இந்தியும் பேசுகிறார்கள். இந்தி மொழியை பொருத்தவரை தமிழகத்தில் மட்டும்தான் எதிர்ப்பு இருக்கிறது பிற மாநிலங்கள் அப்படி எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆங்கில மொழியை அடிமை மொழியாகத்தான் கருதுகிறோம்

    பாஜக வரவேற்கிறது

    பாஜக வரவேற்கிறது


    இந்து மதத்தின் குருவாக இருக்கிற ஒருவரை தூக்கி செல்வது என்பது மதத்தின் புனிதம் என்று கருதுகிறார்கள் ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாக இருக்கிற மரபு இது. திமுகவிலிருந்து பல்வேறு முக்கிய தலைவர்கள் பாஜகவில் இணைந்து கொண்டிருக்கிறார்கள். அந்த இணைப்பின் தொடர்ச்சியாகத்தான் திருச்சி சிவா எம்பி மகன் பாஜகவில் இணைந்திருக்கிறார். அதேசமயம் மேலும் திமுகவிலிருந்து பாஜகவில் இணைவதற்காக பேச்சுவார்த்தை நடந்து கொண்டிருக்கிறது என்றார். திமுகவில் இருந்து பாஜகவுக்கு வருபவர்களை பாஜக வரவேற்கிறது என்றார்.

    English summary
    Vellore Ibrahim, National Secretary, BJP Minorities, has said that the people in Tamil Nadu are experiencing huge difficulties during the DMK's one year rule.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X