விருதுநகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

சரக்கு இருக்கு, குடிச்சுக்கங்க.. பஸ் ஓடலனு வராம இருக்காதீங்க, டூவீலர் கடன் வாங்கிட்டு வந்து சேருங்க

விருதுநகர் திருமண கல்யாண பத்திரிகை ஒன்று வைரலாகி வருகிறது

Google Oneindia Tamil News

விருதுநகர்: "நீங்க பஸ் ஓடலனு வராம இருந்துராதீங்க, ஆட்டோ இல்லனாலும் சரி பக்கத்து வீட்டுல பைக்கை கடன் வாங்கிட்டு வந்துருங்க.. சரக்கு இருக்கு... கொஞ்சமா குடிச்சுகோங்க" என்று வித்தியாசமான கல்யாண பத்திரிகை ஒன்று சோஷியல் மீடியாவில் வைரலாகி வருகிறது.

இவ்வளவு நாள் லாக்டவுன் போடப்பட்டிருந்தது.. அதனால், கல்யாணம் உட்பட மிக மிக முக்கிய நிகழ்வுகளுக்கு அனுமதி தந்த அரசு, அதற்கு 50 பேர் மட்டுமே அனுமதிக்கப்பட வேண்டும் என்று ஒரு உத்தரவையும் போட்டிருந்தது.. அதனால் இந்த 5 மாசமாக, தமிழகத்தில் கல்யாணங்கள் விதவிதமாக நடந்தன.

Novel marriage invitation goes viral near Viruthunagar

மாநில எல்லைகளில், மாவட்ட எல்லைகளில் கல்யாணம் நடந்தது.. வெறும் 10 பேர் மட்டுமே கலந்து கொண்ட கல்யாணம் நடந்தது.. ஆன்லைனில் வாழ்த்து சொல்லி கல்யாணம் நடந்தது.. இப்படி எளிய முறையில் கல்யாணங்கள் நடந்துவிட்டதால், வழக்கமாக காணப்படும் உற்சாகங்கள், துள்ளல்கள், எதுவும் இத்தனை நாள் இல்லாமல் இருந்தது.

இதையெல்லாம் சரிக்கட்டக்கூடிய ஒரு அலப்பறை மேட்டர் விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே நடந்துள்ளது.. அங்கு ஆகாசம்பட்டி என்ற பகுதியை சேர்ந்தவர் சக்திவேல்... இவருக்கும் நாமக்கல்லைச் சேர்ந்த பானுமதி என்பவருக்கும் இன்று திருமணம் நடந்துள்ளது.. இவர்களின் கல்யாண பத்திரிகைதான் சோஷியல் மீடியாவில் 2 நாட்களாக வைரலாகி வருகிறது.

"ராத்திரி ஆயிடுச்சுன்னா.. அந்த பங்களாவுக்குள்.. வெள்ளை டிரஸ்ஸில்".. பீதியை கிளப்பும் தஞ்சை!

அதில் "நீங்க பஸ் ஓடலனு வராம இருந்துராதீங்க, ஆட்டோ இல்லனாலும் சரி பக்கத்து வீட்டுல பைக்கை கடன் வாங்கிட்டு வந்துருங்க. சாப்பாடுக்கு நடக்கறது தாவுறது எல்லாம் வைக்கனும் ஆசை ஆனால் பிரியாணி மட்டும் தான் என்னால போட முடிஞ்சுது. எல்லாம் சரி சரக்கு உண்டா? குடி குடியை கெடுக்கும் அதனால் கொஞ்சமா குடுச்சு கோங்க" என அழைப்பிதழில் அச்சிடப்பட்டுள்ளது.

இப்படி ஒரு பத்திரிகையை பார்த்து எல்லாரும் வாயடைத்து போய்விட்டனர்.. வித்தியாசமாக இருந்த கல்யாண பத்திரிகையை பலரும் ஷேர் செய்ததுடன், அந்த மணமக்களுக்கு வாழ்த்தையும் சொல்லி வருகிறார்கள்.

English summary
Novel marriage invitation goes viral near Viruthunagar
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X