விருதுநகர் அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Oneindia App Download

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்தவர்களுக்கு தலா ரூ. 2 லட்சம் நிவாரணம் - பிரதமர் மோடி அறிவிப்பு

சாத்தூர் அருகே பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு பிரதமர் மோடி ஆழ்ந்த இரங்கலையும் தலா 2 லட்சம் ரூபாய் நிவாரண நிதியையும் அறிவித்துள்ளார்.

Google Oneindia Tamil News

விருதுநகர்: சாத்தூர் பட்டாசு தொழிற்சாலை தீ விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இந்தத் துயரமான நேரத்தில், உயிர் இழந்தவர்களின் குடும்பங்களைப் பற்றிக் கவலைப் படுகிறேன் என்று தமிழில் மோடி பதிவிட்டுள்ளார்.

Recommended Video

    விருதுநகர்: 12 பேரை காவு வாங்கிய பட்டாசு ஆலை... நிவாரணம் அறிவித்த பிரதமர் மோடி!

    சாத்தூர் அருகே அச்சங்குளம் கிராமத்தில் உள்ள மாரியம்மாள் பட்டாசு ஆலையில் இன்று பிற்பகலில் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 9 பேர் உயிரிழந்தனர். 25க்கும் மேற்பட்டோர் காயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக சாத்தூர், சிவகாசி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

    Sattur factory blast Rs. 2 lakh relief - Prime Minister Modi announces

    இதில் சாத்தூர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேலும் மூன்று பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்து விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. சிவகாசி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் 6 பேர் 80 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட தீ காயங்கள் ஏற்பட்டுள்ளது.

    விபத்து குறித்து சம்பவ இடத்திற்கு சென்ற வருவாய் துறை அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். வெடி விபத்து ஏற்பட்ட போது ஒரே அறையில் ஏராளமானோர் இருந்ததே உயிரிழப்புக்கு காரணம் என்று முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

    இதனிடையே சாத்தூர் பட்டாசு தொழிற்சாலை தீ விபத்தில் பலியானவர்களின் குடும்பத்தினருக்கு பிரதமர் நரேந்திர மோடி ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சம் நிவாரணம் பிரதமர் நிவாரண நிதியில் இருந்து வழங்கப்படும் என மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். விபத்தில் பலத்த காயமடைந்தவர்களுக்கு தலா 50ஆயிரம் ரூபாய் வழங்கவும் பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

    தமிழகத்தின் விருதுநகர் பட்டாசு தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்து வருத்தம் அளிக்கிறது. இந்தத் துயரமான நேரத்தில், உயிர் இழந்தவர்களின் குடும்பங்களைப் பற்றிக் கவலைப் படுகிறேன் என்று தமிழில் மோடி பதிவிட்டுள்ளார்.

    காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைவார்கள் என்று நம்புகிறேன். பாதிக்கப் பட்டவர்களுக்கு உதவ, களத்தில் அலுவலர்கள் பாடுபட்டு வருகிறார்கள் என்றும் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

    English summary
    Prime Minister Narendra Modi has expressed his deepest condolences to the families of the victims of the Sattur firecracker factory fire. Modi posted on his Twitter page An ex-gratia of Rs. 2 lakh each has been approved from PMNRF for the next of kin of those who have lost their lives due to a fire in Virudhunagar, Tamil Nadu. Rs. 50,000 would be given to those seriously injured.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X