விருதுநகரில் இன்சூரன்ஸ் பணத்துக்காக கணவர் பண்ண வேலை! ஆடையை களைந்து ஓடிவந்து..ஸ்டன் ஆன சிவகாசி போலீஸ்
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சிவகாசியில் நடந்த சம்பவத்தின் அதிர்ச்சி இன்னமும் மாறவில்லை.. இன்சூரன்ஸ் பணத்துக்காக மொத்த குடும்பத்தையும் காலி செய்துவிட்டார் பேராசை பிடித்த கணவர்.. உலகம் அறியாத பச்சிளம் குழந்தைகளின் நிலைமையும் பரிதாபத்திலும் பரிதாபமாகிவிட்டது.. சம்பத்துக்கு காரணமான நபர் என்ன ஆனார்?
விருதுநகர் மாவட்டம் சிவகாசி முஸ்லிம் ஓடைத்தெருவை சேர்ந்த 42 வயது பெண்மணி செய்யது அலி பாத்திமா.. இவரது கணவர் முபாரக் அலி பத்து வருடங்களுக்கு முன்பு சாலை விபத்தில் உயிரிழந்துவிட்டார்..

இன்சூரன்ஸ் பணம் 11 லட்சம் ரூபாய்
அந்த விபத்துக்கான காப்பீட்டு தொகையாக ரூ.11 லட்சம் பாத்திமாவுக்கு கிடைத்துள்ளது. கணவர் இறந்த பிறகு, தனது மகள் பர்வீன் (16), மகன் செய்யது பாரூக் (13), மாமியார் சிக்கந்தர் பீவி (65) ஆகியோருடன் பாத்திமா வாழ்ந்து வந்துள்ளார்..
கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, தன் வீட்டு பக்கத்திலேயே வசித்து வரும் 45 வயது அக்பர் அலி பாத்திமா 2வது திருமணம் செய்து கொண்டார்.
இன்சூரன்ஸ் பணம்
பட்டாசு ஆலையில் வேன் டிரைவராக வேலை பார்க்கும் அக்பர் அலி, குடும்பத்தை நல்ல முறையில் கவனித்து கொண்டார்.. ஆனால், நாளடைவில் அக்பர்அலியின் முழு எண்ணமும், பாத்திமாவின் இன்சூரன்ஸ் பணத்தின் மீதே ,இருந்தது.. அந்த இன்சூரன்ஸ் பணத்தை பாத்திமாவிடம் கேட்டார்.. இதனால் தம்பதிக்குள் அடிக்கடி தகராறு வந்தது..
பிள்ளைகள் 2 பேர் இருப்பதால் இன்சூரன்ஸ் பணத்தை தர முடியாது என்று பாத்திமா சொல்லி உள்ளார்.. இதனால் ஆத்திரமடைந்த அக்பர் அலி பாத்திமாவை அடித்து துன்புறுத்தி உள்ளார்..
பெட்ரோல் கேன்
இதனால் பொறுமையிழந்த பாத்திமா சிவகாசி டவுன் போலீசில், இதுகுறித்து புகார் தரவும், போலீசார் அக்பர் அலியை கைது செய்து ஜெயிலில் அடைத்தனர்..
இதனால் பாத்திமா மீது கடும் கோபத்தில் இருந்தார் அக்பர் அலி.. ஜாமீனில் வெளியே வந்த பிறகும்கூட வீட்டுக்கு போகாமல், தன்னுடைய உறவினர் வீட்டிலேயே சில மாதங்களாக தங்கி வந்தார்.. எப்படியாவது பாத்திமாவை பழிவாங்க வேண்டும் என்றும் காத்திருந்தார்.. இன்சூரன்ஸ் பணத்தை தராதவர்கள் உயிருடன் இருக்க கூடாது என்றும் முடிவு செய்தார்..
நேற்று முன்தினம் விடிகாலையில் பாத்திமா வீட்டிற்குள் பெட்ரோல் கேனுடன் நுழைந்து, அங்கே தூங்கி கொண்டிருந்த பாத்திமா, 2 பிள்ளைகள், மாமியார் மீது பெட்ரோலை ஊற்றி தீ வைத்தார். அடுத்த நிமிடமே தீயில் பற்றி மொத்த பேரும் அலறி துடித்தனர்.
ஆடைகளை களைந்து ஓடிய அக்பர் அலி
பெட்ரோலை அவர்கள் மீது ஊற்றி எரிக்கும்போது, அக்பர் அலிக்கும் உடலில் தீக்காயம் பட்டுவிட்டது.. இதை அக்பர் அலி எதிர்பார்க்கவில்லை..
உடனே பதறிப்போன அவர், தீயில் எரியும் தன்னுடைய ஆடைகளை களைந்து வீசி, சுமார் 100 மீட்டர் தூரத்தில் உள்ள சிவகாசி டவுன் போலீஸ் ஸ்டேஷனுக்கு ஓடிச்சென்று சரணடைந்தார்... உடலில் தீக்காயங்களுடன், ஆடையில்லாமல் வந்து நின்ற அக்பர் அலியை கண்டு போலீசார் அதிர்ச்சியடைந்தனர்.
தீயணைப்புத்துறையினர் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, தீக்காயமடைந்த வீட்டில் துடிதுடித்து கொண்டிருந்த அனைவரையும் மீட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ஆனால் சிகிச்சை பலனின்றி இதில், பாத்திமாவும், அவரது மாமியார் சிக்கந்தர் பீவியும் நேற்று முன்தினமே உயிரிழந்தனர்..
பரிதாப குழந்தைகள்
பாத்திமாவின் 13 வயது மகன், மற்றும் அக்பர் அலி இருவரும் 90 சதவீதத்திற்கு மேல் தீக்காயங்களுடன் கவலைக்கிடமான நிலையில் இருப்பதாக நேற்றைய தினம் தகவல் வெளியாகியிருந்தது.. இந்நிலையில் பாத்திமாவின் மகன் உட்பட அக்பர் அலியும் இன்று இறந்துவிட்டார்.. இதனால் பலி எண்ணிக்கை 4 ஆக உயர்ந்துள்ளது. படுகாயமடைந்த 16 வயது சிறுமி பர்வீன் மட்டும் 35 சதவீத தீக்காயங்களுடன் சிகிச்சை பெற்று வருகிறார்.
-
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
Free Fridge: அதிமுகவின் இலவச பிரிட்ஜ்! யாருக்கெல்லாம் கிடைக்கும்? எவ்வளவு ரூபாய்க்கு இருக்கும்? -
யார் அந்த அதிர்ஷ்டசாலி? நகைக்கடை, விவசாயக்கடன் தள்ளுபடி, மாதம் 10000 சலுகை? விவசாயிகளின் செம திட்டம் -
சிறகடிக்க ஆசை : கண்ணீர் விட்டு அழுத மனோஜ்.. இவருக்கா இந்த நிலைமை? முத்து மீனா செய்த செயல்! கதையே மாறுது -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
Illatharasi: இல்லத்தரசிகளுக்கு ரூ 8000! திமுக கூப்பனில் பிரிட்ஜ், வாஷிங் மெஷின் வாங்க முடியுமா? -
சிறுசேமிப்பு திட்டங்களில் முதலீடு செய்தவர்களுக்கு சூப்பர் சர்ப்ரைஸ்.. ஏப்ரல் 1 மத்திய அரசின் அதிரடி -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே -
சிலிண்டர் ஏஜென்சி வைத்திருக்கும் நண்பனின் தந்தைக்கு மாதம் 1.90 லட்சம் வருமானம்.. நெட்டிசன் தகவல் -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications